• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புசுபுசுன்னு ஆனாலும்.. அந்த கண்ணும் அழகும்.. அந்தப் பேச்சும்.. சொக்க வைக்கும் தேவிப்பிரியா!

|

சென்னை: வயசானாலும் உங்க அழகும் அந்தத் திமிர் பார்வையும் கொஞ்சம்கூட மாறல என்று படையப்பா பட பாணியில் சின்னத்திரை நீலாம்பரி தேவி பிரியாவை கலாய்க்கிறார்கள் ரசிகர்கள்.

90ஸ் கிட்ஸ் ளின் மறக்கமுடியாத வில்லி என்றால் அது நம்ம தேவிப்பிரியா தான். நடிப்பில் பின்னிப் பெடலெடுத்து விடுவார். அவர் வசனம் பேசும் விதம், நடக்கும் தோரணை என நடிப்பில் உச்சம் காட்டியவர்.

அவர் கலக்கிய சமயத்தில்தான் சீரியல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களை ஆட்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் டிவி முன்னாடி சீரியல்களில் தான் தஞ்சமடைந்து கொண்டிருந்தார்கள்.

போற போக்கை பார்த்தால் சன்னி லியோனுக்கு டஃப் கொடுப்பீங்க போல!

டிபி செல்லப் பெயர்

டிபி செல்லப் பெயர்

அப்போதெல்லாம் எந்த சேனலை மாற்றினாலும் அதில் நம்ம தேவிபிரியா தான் வில்லியாகவும், அன்பான நல்ல கேரக்டரிலும் மாறி மாறி அசத்திக் கொண்டிருந்தார். இப்ப கொஞ்ச காலமாக சீரியல்களில் அவ்வப்போது முகத்தைக் காட்டிக்கொண்டு இருந்தாலும் சின்னத்திரை வெள்ளித்திரை கதாநாயகிகளுக்கும் டப்பிங் ஆர்டிஸ்டாக பிசியாகவே பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவருக்கு டிபி என்ற செல்லப் பெயரும் உண்டு.

எதார்த்த வில்லி

எதார்த்த வில்லி

இவர் வில்லியாக நடிக்கும் போது கோபத்தையும் வெறுப்பையும் இயல்பாக தனது கண்களில் கொண்டுவந்து மிரட்டுவார். இவருடைய நடிப்பு ரொம்ப எதார்த்தமாக இருக்கும். நம்ம வீட்டுப் பெண் போலவே இருக்கும் தோரணை இவரது பெரிய பிளஸ் பாயிண்ட். சட்டுன்னு கோபம் வந்தால் நாம எப்படி கத்துவோம்.. அதேபோல இவரும் செய்வார்.. அதுதான் இவரது இயல்பான நடிப்பின் மிகப் பெரிய பலம்.

கண்ணழகி

கண்ணழகி

இவருடைய கண்ணழகை புகழாத ரசிகர்களே இல்லை. அந்த அளவிற்கு கண்களாலேயே ரசிகர்களை வசியம் பண்ணி இருக்கிறார். இப்ப வரைக்கும் அந்தக் கண்ணுக்கு லட்சக்கணக்கானோர் அடிமைங்க.. அப்படி ஒரு பவர்புல் கண்ணு அது.அ துமட்டுமல்ல உதட்டுக்கு மேலே செயற்கையாக இவர் வைக்கும் சின்ன மச்சம் கூட இவருக்கு செம அழகு தான். எல்லாத்தையும் விட இவரது சிரிப்புதான் செம அழகு.. சொக்கிப் போய்ருவோம்.

பானுப்பிரியாவுடன் அறிமுகம்

பானுப்பிரியாவுடன் அறிமுகம்

சினிமாவில்தான் இவரது நடிப்பு அறிமுகம் இருந்தது. ஊரு விட்டு ஊரு வந்து. இதுதான் இவரது முதல் படம். அதன் பிறகுதான் டிவிக்கு வந்தார். சன் டிவியில் நடிகை பானுப்பிரியாவின் நடிப்பில் ஒளிபரப்பான சக்தி சீரியலில்தான் தேவிப்பிரியா அறிமுகமானார். முதலிலேயே தனது திறமையை நன்கு வெளிப்படுத்தியதால் அவருக்கு மேலும் பல வாய்ப்புகள் வந்தன. இருப்பினும் பாரதிராஜா சீரியலில் நடித்து மேலும் பிரபலமானார்.

போலீஸாக ஆசை

போலீஸாக ஆசை

பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். குழந்தைப் பருவத்திலிருந்தே இவருக்கு போலீஸ் ஆகணும்னு தான் ரொம்ப ஆசையாம். ஆனால் பன்னிரண்டாம் வகுப்புக்கு மேலே ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் படிக்க முடியவில்லை. இருந்தாலும் தொலைதூரக் கல்வியில் தான் பிஏ ஆங்கிலம் படித்து முடித்திருக்கிறார். அதனால் இவரால் போலீஸ் ஆக முடியவில்லை.

நல்லஅனுபவம்

நல்லஅனுபவம்

சீரியலில் போலீஸ் கேரக்டரில் முழுமையாக தான் நடித்ததாகவும் அதனால்தான் போலீஸ் கேரக்டர் எனக்கு அவ்வளவு அழகாக சூட்டாகி விடுகிறது என்றும் கூறியிருக்கிறார். ராதிகாதான் இவருக்கு பெரிய பிரேக் மற்றும் ஏற்றம் கொடுத்தவர். சின்னத்திரையில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக கலக்குபவர் தேவிப்பிரியா. 20 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருப்பவர். சின்ன வயசுலயே மீடியாவுக்கு என்று வந்து விட்டார். இவர் நடிக்கிறது அவங்க அம்மாவுக்கு பிடித்தாலும் இவர் படிப்பை விட்டுவிட்டு முழுநேரமாக நடிப்பது அவருக்கு கொஞ்சம் பிடிக்கவில்லையாம் . இவர் படிப்பில் நல்ல புள்ளையாம். இதனால் அவங்க அம்மாவுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்திருக்கிறதாம். சொர்க்கம் சீரியலில் போலீசாக நடித்ததற்கு ஸ்டேட் அவார்ட் வாங்கி இருக்கிறாராம்.

போலீஸ் மோகம்

போலீஸ் மோகம்

அவருடைய பேவரிட் ஆன போலீஸ் கேரக்டரில் நடித்ததால் இன்னமும் அந்த காஸ்டியூம் ஐ பத்திரமாக வைத்திருக்கிறாராம். சென்னையில் வெள்ளம் வந்த போது கூட அதை பாதுகாப்பா பெட்டியில் போட்டு வைத்திருந்தாராம். அந்த அளவிற்கு போலீஸ் வேலையின் மீது அவருக்கு மரியாதையாம். இப்ப எல்லாம் இயக்குனர்கள் புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதுலயே குறியாக இருக்கிறார்களாம். இதனால் சீனியர்களுக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டது.

இருந்தாலும் தேவிப்பிரியாவை ரசிகர்கள் எங்கு பார்த்தாலும் அன்போடு விசாரிக்கும் போது இவர் கூட நடிச்ச வங்களைப் பற்றி விசாரிக்கும் போது இவருக்கு எனர்ஜியாக இருக்கிறதாம். ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம் 2 வரலாற்று சிறப்புமிக்க சீரியல்களில் இவரது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமல்ல இவருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறதாம்.

கேரக்டராக மாறி விடுவார்

கேரக்டராக மாறி விடுவார்

ஒரு கேரக்டரில் நடித்து அந்த கேரக்டரை அப்படியே உள்வாங்கி கலக்கி விடுவாராம். அந்த வேடமாகவே மாறி விடுவாராம். அதனால்தான் சூப்பரான நடிப்பையும் கொட்ட முடிகிறதாம். அதனாலேயே ரசிகர்கள் அந்த கேரக்டரின் பெயரை சொல்லி அழைக்கிறார்களாம். என்னவோ முழுக்க முழுக்க இவருக்கு போல்டான கதாபாத்திரமும் காமெடி கதாபாத்திரமும் கச்சிதமாக பொருந்துகிறது. அதுமட்டுமல்ல இவர் டப்பிங் ஆர்டிஸ்டாக ரொம்ப வருஷமா வேலை பண்ணிக் கொண்டிருக்கிறார்.

நல்ல குரல்

நல்ல குரல்

இவருடைய குரலும் பேசும் விதமும் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்ததாக இருப்பதால் டிமாண்ட் இருக்கிறதாம். புதுப்பேட்டை படத்தில் சினேகா விற்கும் தாமிரபரணி படத்தில் நதியா விற்கும் டப்பிங் பேசியுள்ளார். அதேபோல கிடாரி, மருது போன்ற படங்களிலும் டப்பிங் பேசி இருக்கிறாராம். ஆண் தேவதை , என் ஆளோட செருப்ப காணோம், கத்துக்குட்டி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்ல வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோல் கதாபாத்திரத்திற்கு இவர்தான் முதலில் டப்பிங் பேச வாய்ப்பு வந்திருக்கிறது. அப்போது உடம்பு சரியில்லாத காரணத்தால் பண்ண முடியவில்லையாம்.

30 சீரியல்கள்

30 சீரியல்கள்

பெரும்பாலும் நெகட்டிவ் வேடங்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு தொலைக்காட்சிகளில் 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார். இயக்குனர் கங்கைஅமரன் மூலமாக ஊரு விட்டு ஊரு வந்து திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்து வல்லமை தாராயோ, மஞ்சப்பை, யாமிருக்க பயமே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சூட்டிங் இல்லாத நேரங்களில் வீட்டில் விதவிதமாக போட்டோ எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணிக்கொண்டு இணையதளம் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவருடைய போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் சின்னத்திரை நீலாம்பரி என்று வர்ணிக்கிறார்கள். அதுமட்டுமில்ல சின்னத்திரை ஜோதிகா என்றும் இவருக்கு செல்லப்பெயர் உண்டாம். அதை கூறியும் சில ரசிகர்கள் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Veteran actress Devipriya is still inspiring fans.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more