அதிரடியாக ஆரம்பமான தனுஷின் D54 ஷூட்டிங்.. அடேங்கப்பா இத்தனை பேர் நடிக்கிறாங்களா? சம்பவம் இருக்கு!
சென்னை: நடிகர் தனுஷ் நடிக்கும் 54வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. இந்த திரைப்படத்தை போர் தொழில் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார். அதோடு இந்த திரைப்படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் தான் குபேரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும் தமிழகத்தை விட மற்ற மொழிகளில் இந்த திரைப்படம் பெரிய அளவில் பாராட்டு வாங்கி இருக்கிறது. இந்த நிலையில் நடிகராக மட்டுமல்லாமல் தனுஷ் இயக்குநராகவும் அடுத்த அடுத்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு அவருடைய இயக்கத்தில் ராயன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு பிறகு "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது அந்த திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. ஆனாலும் அடுத்தடுத்து அவர் பிஸியாகவே இருக்கிறார். சமீபத்தில் அவர் இட்லி கடை திரைப்படத்தை இயக்கிய நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி திரைக்கு வரைக்கும் இருக்கிறது.
இந்த திரைப்படத்திற்கான டப்பிங் மற்றும் ரெக்கார்டிங் வேலையில் பிஸியாக இருக்கும் தனுஷ் இப்போது புதிய ஷூட்டிங் கலந்து கொண்டிருக்கிறார். அதாவது அவருடைய 54வது படப்பிடிப்பு பூஜை இன்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது. தனுஷ் நடிக்கும் டி54 திரைப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்குகிறார். அவர் ஏற்கனவே போர் தொழில் என்கிற வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை மமீதா பைஜு நடிக்கிறார். அதோடு பிரேமலு படம் மூலம் அறிமுகமான மமிதா தற்போது தமிழில் விஜயின் ஜனநாயகம், சூர்யாவுடன் ஒரு படத்திலும், விஷ்ணு விஷால் ஜோடியாக இரண்டு வானம் போன்ற படங்களில் நடித்து வரும் நிலையில் இப்போது தனுசுடன் டி54 படம் மூலம் ஜோடியாக தேர்ந்தெடுக்கிறார். அதுபோல இந்த திரைப்படத்திற்கு தனுஷின் நண்பரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க இருக்கிறார்.
அதுபோல இந்த திரைப்படத்தில் கேஎஸ் ரவிக்குமார் மலையாள நடிகரான சூரஜ், வெஞ்சுர முடி மற்றும் ஜெயராம், நடிகர் பாண்டியராஜனின் மகனான ப்ரித்வி, நடிகர் கருணாஸ், நடிகர் நிதின் சத்தியா போன்றோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். அதுபோல இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக தேனீ ஈஸ்வர் இருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சாரங் கவனிக்கிறார்.

அதோடு "சில நேரங்களில் ஆபத்தில் இருப்பது தான் உயிர் வாழ ஒரே வழி" என்கிற கேப்ஷன் உடன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு இருக்கின்றனர். அந்த போஸ்டரில் தனுஷ் பொட்டல் காட்டில் சோகமாக நின்றபடி இருக்கிறார். இவருடைய பின்னணியில் தீ கொழுந்து விட்டு எரிகிறது. இதனால் இதுவும் ஆக்ஷன் கலந்த திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி, ராயன், குபேரா போன்ற படங்கள் தொடர்ச்சியாக 100 கோடிக்கு மேல் வசூல் செய்து தனுஷுக்கு அடுத்தடுத்து வெற்றியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த லிஸ்டில் டி54 படமும் இணையுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த திரைப்படத்தின் பூஜையில் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications