நேபாளத்தில் மாயமான நிவேதா பெத்துராஜ் பெற்றோர்? உருக்கமாக வெளியிட்ட பதிவு! உண்மை இதுதானா?
சென்னை: நேபாளம்- திபெத் எல்லை பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட அவசர பதிவு ரசிகர்களை கலக்கமடைய செய்துள்ளது. நேபாளம் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று திரும்பி கொண்டிருந்த பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், நிவேதா பெத்துராஜ் உருக்கமாக வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது கவனம் பெற்றுள்ளது.

நிவேதா இன்ஸ்டாகிராம் பதிவு
நிவேதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் அவசரமாக ஒரு பதிவை பகிர்ந்து இருக்கிறார். அதில், டாக்டர் சுரேஷ் வெங்கடாசலம் (63) மற்றும் தங்க லட்சுமி ஜோதி மகாலிங்கம் (56) ஆகிய இருவரும் நேபாளம் திபெத் சீனா எல்லை பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து காணவில்லை என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார். அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த இந்தியர்கள் என்றும் மவுண்ட் கைலாஷ் யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த பதிவில் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் நேபாளம், கியிராங்/ திபேத் சீனா எல்ல பகுதியில் இருப்பவர்கள் உள்ளூர் மருத்துவமனைகள் மீட்பு குழுக்கள் அரசு அதிகாரிகள் அல்லது அங்கு நேரடியாக இருப்பவர்கள் யாரிடமாவது தகவல் இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த பதிவில் விவேக் என்பவரின் இந்திய தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
உண்மை என்ன
இது நிவேதா குடும்பத்தை மட்டுமல்லாமல் தற்போது நேபாளத்தில் சிக்கி இருக்கும் அனைத்து யாத்திரிகர்களின் நிலை குறித்தும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. நிவேதா இந்த பதிவை வெளியிட்டதும் பலர் நிவேதாவின் பெற்றோர்தான் காணவில்லை என்று போஸ்ட் போட்டு வருகின்றனர், அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். ஆனால் அந்த பதிவு நிவேதா தன்னுடைய பெற்றோர் என்று சொல்லவில்லை. டாக்டரும் அவருடைய குடும்பத்தினரை தான் காணவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

திடீர் வெள்ளம்
ஆகஸ்ட் 26 ஆம் தேதி நேபாளம் திபெத் எல்லை பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மிகப்பெரிய பேரழிவாக மாறியது. விபத்து பகுதியில் இருந்து பெருக்கெடுத்த வெள்ளம் நேபாளத்தில் ராசுவா பகுதியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. சாலைகள், பாலங்கள் சேதமடைந்ததுடன் பலரடான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று திரும்பியவர்கள் மற்றும் இந்த பகுதியில் மற்றும் யாத்திரைக்காக இருந்தவர்கள் பலர் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று உள்ளனர்.
நிவேதா பெத்துராஜ் பதிவு
நூற்றுக்கணக்கான இந்தியர்களும் இதில் இருப்பதாக அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகின்றனர். அதுபோல நிவேதா வெளியிட்ட இன்னொரு பதிவும் வைரலாகி வருகிறது. அதில் பணம் சம்பாதிப்பதை துரத்துவது, புகழை தேடுவது, மற்றவர்களின் அங்கீகாரத்தை பெறுவதற்காக ஓடுவது என நாம் வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்களுக்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவை அனைத்துமே ஒரே நொடியில் இல்லாமல் போய்விடக் கூடியவை என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
