ரட்சிதாவிற்கு ஆதரவு கொடுத்து வந்த தினேஷ்.. கடைசியாக வெளியிட்ட பதிவு.. இது எதற்கான பதிலடி?
சென்னை: தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ரச்சிதாவிற்கு அவருடைய கணவர் தினேஷ் தன்னுடைய ஆதரவை தெரிவித்து அறிவுரைகளை கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் ரச்சிதாவை அசீம், மைனா நந்தினி என பலர் டார்கெட் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் தினேஷ் உடைய பதிவு அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

சின்ன கருத்து வேறுபாடு
சின்னத்திரையில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கும் மகாலட்சுமி பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதும் இவருடைய கணவர் இவருக்கு வாழ்த்துக்களை கூறி தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார். சமீப காலமாகவே ரச்சிதா அவருடைய கணவர் தினேஷை பிரிந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்கள் பரவி வந்தது. ஆனால் அதைப்பற்றி ரச்சிதா ஒரு முறை கூட எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை. இந்த நிலையில் தங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான் அது அனைவர் வீட்டிலும் நடப்பது போலத்தான் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. இருவரும் மனம் விட்டு பேசினாலே தீர்ந்து போகும் பிரச்சனை தான் என்று தினேஷ் தன்னுடைய தரப்பு கருத்தை கூறியிருந்தார்.

தினேஷ் விருப்பம்
அதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் ரச்சிதாவின் பின்னாடியே ராபர்ட் மாஸ்டர் சுற்றிக்கொண்டு தன்னுடைய லிமிட்டை தாண்டி ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் பழகி வருவதை குறித்து ஆரம்பத்திலிருந்து தினேஷ் கார்த்திக் கண்டித்து கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் ராபர்ட் வெளியே வரவேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக கூறியிருந்தார். அவர் நாமினேஷனில் இருக்கும்போது கூட அவருக்கு வாக்கு செலுத்தக்கூடாது என்பதை மறைமுகமாகவே தன்னுடைய ரசிகர்களிடம் கூறி வந்தார்.

நண்பர்களின் குற்றசாட்டு
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆரம்பத்தில் இருந்தே சின்னத்திரை நடிகர்கள் ஆன அசீம், ஆயிஷா, மைனா நந்தினி என ஒரு சிலர் தொடர்ந்து ரச்சிதாவை டார்கெட் செய்து கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ரச்சிதா அதிகமான கோவக்காரி ஆனால் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் அமைதியாக இருப்பது போன்று நடித்து வருகிறார். ரசிகர்கள் முன்பு தன்னை நல்லவர் என்று காட்டிக் கொள்ளும் விதமாக போலியாக இருக்கிறார் என்று ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் முத்திரை குத்திக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக மைனா நந்தினி சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்கும் போது ரச்சிதா தன்னுடைய உயிர் தோழி என்றும், தனக்கு ரச்சிதா தான் அதிகமாக சப்போர்ட் செய்திருக்கிறார்கள் பண்ணி இருக்கிறார் என்றெல்லாம் கூறியவர் கூட இந்த வீட்டிற்குள் ரச்சிதா நடிக்கிறார் என்று கருத்தை அழுத்தமாக ஒவ்வொரு முறையும் கூறிக் கொண்டிருக்கிறார்.

துணைக்கு ஆள் இருக்கு
ஏற்கனவே மைனாவை ஒரு நல்ல தோழியே கிடையாது ராபர்ட் மாஸ்டர் விஷயத்தில் ஒரு வாரம் கழித்து உள்ளே சென்ற மைனா வெளியே நடக்கும் செயல்களை எல்லா பார்த்த பிறகும் உள்ளே சென்று ரச்சிதாவின் பெயரை கெடுக்கும் விதமாக ராபர்ட் மாஸ்டரை வைத்து கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார் என்று அவர் மீது தனக்கு இருக்கும் கோபத்தை தினேஷ் காட்டியிருந்தார். இந்த நிலையில் இன்று கூட காலை முதல் பிரமோவில் அமுதவாணன், ஏடிகே, மைனா நந்தினி என அனைவரும் ரச்சிதாவை கலாய்த்து கொண்டிருக்கின்றனர். இதை பார்த்து தினேஷ் ரச்சிதாவிற்கு ஆதரவாக தன்னுடைய வாக்கை செலுத்தி அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து நீங்கள் இதுபோல மேலும் இதயக்களை வென்று கொண்டே இருங்கள் .உங்களுடைய பாசிட்டிவிட்டியை அனைவருக்கும் பரப்பிக் கொண்டே இருங்கள், உங்களுக்கு நான் துணை இருக்கிறேன். என்று பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications