நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை இதுதான்..! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திடீர் பேட்டி
சென்னை: மாநகரம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் ஸ்ரீ சிகிச்சை பெற்று வருவதாக அவருடைய குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டிருந்ததை தொடர்ந்து இன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போதைய நிலை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
கனா காணும் காலங்கள் சீரியலின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் ஸ்ரீ வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய நடிப்பிற்கு அடையாளமாக அமைந்திருந்தது. அதிலும் கனா காணும் காலங்கள் சீரியல் அல்லாமல் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பலருடைய குரலில் மிமிக்ரி செய்திருக்கிறார்.

மிமிக்கிரி திறமை
சிவகார்த்திகேயன் எப்படி பல நடிகர்கள் போல பேசி இருந்தாரோ அதை விடவும் சிறப்பாக ஸ்ரீ ஸ்ரீ பேசியிருந்தார் என்று அந்த நேரத்தில் பலரும் அவரை பாராட்டி இருக்கிறார்கள். ஸ்ரீக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் கிடைத்து அடையாளத்தை வைத்து வழக்கு எண் 18 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு நடித்திருப்பார்.
நடிகர் ஸ்ரீ நடித்த திரைப்படங்கள்
கனா காணும் காலங்கள் சீரியலில் ஹாண்ட்சம் பாயாக வருவார். ஆனால் அவருடைய முதல் திரைப்படமான வழக்கு எண் 18 திரைப்படத்தில் தள்ளுவண்டி கடையில் வேலை பார்க்கும் சாதாரண ஒரு இளைஞராக நடித்திருந்தார். அதற்குப் பிறகு ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று என்று சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் ஸ்ரீயின் மாற்றம்
ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை குறைந்து ஸ்ரீ தற்போதைய உருவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. ஸ்ரீயா இப்படி மாறிவிட்டார் என்று பலரும் வருத்தத்தை பகிர்ந்து வந்தனர். ஸ்ரீ மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும், அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும், அவருக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மிஸ்கின் போன்ற இயக்குனர்கள் உதவி செய்ய வேண்டும் என்று பலர் இவர்களை டேக் செய்து வந்தனர்.
நடிகர் ஸ்ரீ பதிவு
பிறகு குடும்பத்தை விட்டு பிரிந்து தனி அறையில் வசித்து வந்த ஸ்ரீயை ரசிகர்கள் ஆசைப்பட்டது போலவே அவருடைய குடும்பத்தினர் சமாதானம் செய்து அவரை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து சென்றிருக்கின்றனர். மருத்துவ சிகிச்சையில் ஸ்ரீ இருப்பதாகவும் அவர் மீண்டும் நலம் பெற்று வருவார் என்று அவருடைய குடும்பத்தினர் பெரிய அறிக்கை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருந்தார்.
லோகேஷ் கனகராஜ் அறிக்கை
லோகேஷ் கனகராஜ் அறிக்கை வெளியிட்டு சில வாரங்களை கடந்துவிட்ட நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஸ்ரீ குறித்து லோகேஷ் கனகராஜ் பேசுகிறார். அதில் அடுத்து என்ன திரைப்படத்தை நீங்க இயக்கப் போறீங்க என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு நான் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்க போகிறேன். ஏற்கனவே ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பதால் கொஞ்சம் மன அழுத்தமும் இருக்கிறது.
நடிகர் ஸ்ரீ பற்றி லோகேஷ் பேட்டி
அதனால் இன்னும் கொஞ்சம் நாளைக்கு எந்த வேலையும் இல்லாமல் ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் தொடங்கப் போகிறேன் ஏற்கனவே நடிகர் ஸ்ரீ உடைய உடல்நிலை பற்றி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. அதுவெல்லாம் என்னை ரொம்ப பாதித்தது. அதனால் நான் இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு தான் மீண்டும் வேலையை தொடங்க போறேன் என்று சொல்லி இருக்கிறார்.
நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை
அதற்கு செய்தியாளர்கள் ஸ்ரீ உடைய தற்போதைய நிலை எப்படி இருக்கிறது என்று கேட்க, அதற்கு லோகேஷ் கனகராஜ் இப்போது நல்லா இருக்கிறார், சிகிச்சை பெற்று தான் வருகிறார். ஆனால் விரைவில் சரியாகி விடுவார் என்று கூறி இருக்கிறார். அப்போது இன்னொரு செய்தியாளர் நீங்க ஸ்ரீயை நேரில் பார்த்தீர்களா சார் என்று கேட்க, அங்கு என்ன நடந்தது என்பதை இன்னொரு பேட்டியில் சொல்கிறேன். ஆனா இப்போது அவர் நல்லா இருக்கிறார், என்று அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications