என்னாது வானத்தை போல சீரியல் நடிகை டான்ஸரா.. ஈசன் படத்தில் வந்தனமா வந்தனமா பாடலில் நடித்துள்ளாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வானத்தை போல சீரியலில் வரும் கோமதி கேரக்டரை பார்க்கும் ரசிகர்கள் இவங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என யோசிக்கத் தொடங்கினார்கள். பிறகுதான் தெரிந்தது அவர் ஒரு டான்ஸர் என்பது! அவர் பெயர் சுஜாதா.

சன் டிவியில் டிஆர்பி ரேட்டில் முன்னிலையில் இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்று வானத்தை போல! ராஜபாண்டி- துளசி- சின்ராசு இவர்களை பழிவாங்கும் கேரக்டர். அதாவது ராஜபாண்டியின் அத்தைதான் கோமதி. ஏதோ குடும்ப தகராறில் ராஜபாண்டியின் தந்தையும் கோமதியும் பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

திடீரென ராஜபாண்டியின் திருமணத்திற்கு தங்கையை அழைத்து செல்ல ராஜபாண்டியின் தாயும் தந்தையும் வருகிறார்கள். அவர்கள் கையோடு கோமதியையும் அவரது மகள் வள்ளியையும் கையோடு அழைத்து கொண்டு செல்வார்கள். அங்கு ராஜபாண்டியை பார்த்ததும் வள்ளிக்கு ஆசை வருகிறது.

கோமதி கேரக்டர்

கோமதி கேரக்டர்

இதை பார்த்த கோமதி வசதியான தனது அண்ணன் மகனை எப்படியாவது தனது மகளுக்கு கட்டி வைக்க வேண்டும் என்பதற்காக துளசிக்கும் ராஜபாண்டிக்கும் சண்டையை மூட்டி ராஜபாண்டியே துளசியை வீட்டை விட்டு விரட்டினால் தனது மகளை எப்படியாவது திருமணம் செய்து வைத்து விடலாம் என்ற கனவில் இருக்கிறார். இந்த சீரியலில் இவருக்கு வில்லி கேரக்டர்.

அடையாளம்

அடையாளம்

இவரை முதல் முறை பார்த்ததுமே ரசிகர்கள் அடையாளம் கண்டுவிட்டனர். ஈசன் படத்தில் வரும் வந்தனமா வந்தனமா எல்லோருக்கும் வந்தனம் என்ற பாடலில் நடனம் ஆடிய சுஜாதா. இந்த பாடல் மிகவும் பிரபலம். சுஜாதா நன்றாக நடனம் ஆடியிருப்பார். இவர் ஒரு நடன இயக்குநரும் கூட! சினிமாவில் குரூப் டான்ஸராக சேர்ந்து நடனம் ஆடினார். பின்னர் டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் குரூப்பில் இணைந்து ரஜினியின் தளபதி படத்தில் வரும் ராக்கம்மா கைய தட்டு, காடடுக்குயிலு மனசுக்குயிலு பாடல்களுக்கு குரூப் டான்ஸராக ஆடியுள்ளார்.

ரகு மாஸ்டர்

ரகு மாஸ்டர்

இதையடுத்து ரகு மற்றும் சுந்தரம் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவருக்கு தமிழில் முதல் படம் காதல் தேசம். இதில் எல்லா கல்லூரி ஃபேர்வெல் பார்ட்டிகளிலும் ஒலிக்கும் முஸ்தபா முஸ்தபா பாடலுக்கு இவர்தான் நடன இயக்குநர். இதில் வெற்றி பெற்றதும் பகைவன், நேசம் உள்ளிட்ட 200 -க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

சினிமாத் துறை

சினிமாத் துறை

சினிமாத் துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறார். மேலும் இவர் கில்லி படத்தில் த்ரிஷாவுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு நடனம் அமைத்துத் தரத்தான் அழைக்கிறார்கள் என நினைத்தார். ஆனால் அவரை அம்மா ரோலுக்கு அழைத்தனர். எனினும் அவருக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த படத்திற்கு த்ரிஷாவுக்கு அம்மாவாக நடித்தார். தற்போது சீரியலில் கலக்கி வருகிறார். இந்த நிலையில் இவருடைய வந்தனமா வந்தனமா எல்லோருக்கும் வந்தானம், மணம் மணமா சந்தனம்... பாடல் மீண்டும் வைரலாகி வருகிறது. இந்த படம் விஜிபியில் சூட்டிங் செய்தார்கள். இந்த பாடலுக்கு ஆட வேண்டுமா என சுஜாதா நினைத்தாராம். பிறகு அது ஹிட்டானதும் அவர் மகிழ்ச்சி அடைந்ததாக பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இந்த பாடலை தஞ்சை செல்வி பாடியுள்ளார். அது போல் நான் அவனில்லை பார்ட் 2 படத்திலும் நடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+