குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் பிரியங்கா.. 2வது பரிசு இவருக்கா? செம ட்விஸ்ட்.. குவியும் வாழ்த்து
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.. ஏற்கனவே யார் வெற்றியாளர் என்று அரசல் புரசலாக செய்திகள் வெளியான நிலையில், இன்று அதே போட்டியாளர்தான் வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 4 சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி, ரசிகர்களிடம் பிரபலமான நிலையில், 5 வது சீசனில் அப்படியே தலைகீழ் மாற்றமாகிவிட்டது. இதுவரை குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்த மணிமேகலை இந்த சீசனில் ஆங்கராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்த நிலையில், திடீரென விலகி பரபரப்பை கிளப்பினார்.

மணிமேகலை: மணிமேகலையின் விலகலுக்கு காரணம், பிரியங்கா தான் என்றும், பிரியங்காவை இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட உள்ளதால்தான், முன்கூட்டியே மணிமேகலை விலகியதாகவும் தகவல்கள் வெளியாகின...
அதன்படியே, இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில், இர்பான், விடிவி கணேஷ், பூஜா, ஜோயா, சுஜிதா, பிரியங்கா என 6 பேர் நுழைந்த நிலையில், பிரியங்கா - ராமர் ஜோடி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டுள்ளனர். பிரியங்காவுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.. கோமாளியாக ராமருக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
2வது பரிசு, சுஜிதா- புகழ் ஜோடி வெற்றி பெற்றுள்ளது.. இந்த ஜோடிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசாக பெற்றுள்ளார்கள்.. அதேபோல, குரேஷி - 1 லட்சம் சிறப்பு பரிசாக பெற்றுள்ளார்.
வெற்றியாளர்: முன்னதாக, வெற்றியாளர்கள் இவர்கள்தான் என்று காலையிலேயே ஒரு செய்தி திடீரென பரவியது. அதில், 'குக் வித் கோமாளி' சீசன் 5ன் வெற்றியாளர் பிரியங்கா தேஷ்பாண்டே என்றும், 2வது ரன்னர் அப் இர்பான் என்றும் செய்திகள் கசிந்திருந்தன.. இதைப்பார்த்ததுமே, இணையவாசிகள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.. ஆனால், தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி, பிரியங்கா முதலிடம், 2வது இடத்தை சுஜிதா பெற்றுள்ளார்.
நடிகர்கள் அரவிந்த்சாமி, கார்த்தி இருவருமே சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள்..
இந்த பரிசுப்போட்டி அறிவிப்பானது, 2 விதமான அதிருப்திகளை இந்த அதிருப்திகளை ஏற்படுத்தி வருகிறது. முதலிடத்தில் நிஜமாகவே பிரியங்கா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், மணிமேகலை வெளிப்படுத்திவிட்டு போன அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மைதானோ என்று சந்தேகத்தை உறுதிப்படுத்தி வருகிறதாம்.
வாழ்த்துக்கள்: அதுமட்டுமல்ல, உண்மையை சொல்லப்போனால், சுஜிதாதான் முதல் பரிசு வெற்றியாளராக அறிவிக்கப்பட வேண்டியர் என்றும், அவருக்கு 2வது இடமா? என்றும் பொருமல்கள் கிளம்பி உள்ளன. இதுஒருபுறமிருந்தாலும், வெற்றி பெற்ற 2 நபர்களுக்குமே வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications