எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரியா இவர்..?? பல நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் கலக்குறாரே..!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் கனிஹா தன்னுடைய பல நாள் கனவு ஆசையை நிறைவேற்றிக் கொண்டதாக கூறியிருக்கிறார்.

எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடிக்கும் கனிஹாவா இது என்று அவருடைய லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் வியந்து போய் இருக்கிறார்கள்.

இப்போ இல்லை என்றால் எப்போது??அதனால் தான் இப்படி ஒரு முடிவு என்று கனிஹா போட்ட கேப்ஷன் பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

பல நாள் ஆசை

பல நாள் ஆசை

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் படு பவ்யமாக ரசிகர்களை கவர்ந்து வரும் கனிஹா தற்போது மார்டன் உடையில் இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இவருடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரா?? இவர்?? என்று வியந்து போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் பல நாட்களுக்குப் பிறகு என்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டு விட்டேன் என்று தான் மூக்கு குத்தி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தன்னுடைய க்யூட்டான அழகை காட்டி இருக்கிறார்.

எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரியா இவர்..?? பல நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் கலக்குறாரே..!!

இன்னொரு முகம்

இன்னொரு முகம்

தொகுப்பாளராகவும், திரைப்பட நடிகையாகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும், சீரியல் நடிகையாகவும் பன்முகத் திறமை கொண்ட கனிஹா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். நடிப்பை தாண்டியும் இவருக்கு சமூக வலைத்தளத்திலும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதனால் இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இவர் சீரியலில் எப்போதும் அமைதியின் சொரூபமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் இவர் கேரக்டர் அதுதானா என்று நினைத்து விட்டார்களாம். ஆனால் தனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பதை சமூக வலைத்தளத்தில் காட்டி வருகிறார்.

ரசிகர்களின் கருத்துக்கள்

ரசிகர்களின் கருத்துக்கள்

கனிஹா இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான திருவிளையாடல் புராணத்தில் தேவி கேரக்டரில் நடித்திருந்தார். அப்போதே இவருக்கு அதிகமான ரசிகர்கள் தோன்றி விட்டார்கள். இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வரலாறு திரைப்படத்தில் அஜித் ஜோடியாக நடித்த இவரா?? இப்போது சீரியலில் நடிகர் மாரிமுத்துவின் மனைவியாக நடிக்கிறார் என்று ஆரம்பத்தில் இவருடைய ரசிகர்கள் பலர் ஃபீல் பண்ணி இருந்தனர். ஆனால் தற்போது இவருடைய கேரக்டர் பார்த்த ரசிகர்கள் பலர் சரியான முடிவு எடுத்திருப்பதாக கூறி வருகின்றனர்.

மூக்குக்குத்தி

மூக்குக்குத்தி

சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கும், அன்னியன் திரைப்படத்தில் சதாவுக்கும், சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கும் இவர் தான் டப்பிங் கொடுத்துள்ளார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது. ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் இவர் அதிகமாக வாய் திறந்து பேசவே இல்லையே என்று பலர் பீல் பண்ணி வருகின்றனர். அதைத்தான் சமூக வலைதளத்தில் இவரிடம் கேள்விகளாக கேட்டு வருகின்றனர். எப்போது நீங்கள் குணசேகரனை எதிர்த்து பேசுவீர்கள் என்று கேட்கும் கேள்விகளுக்கு சிரிப்பை மட்டும் பதிலளித்து இருக்கிறார். தற்போது இவர் மூக்குக்குத்தி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தட்டி விட்டதும். ரசிகர்கள் இது கூட க்யூட்டாகத்தான் இருக்கிறது என்று லைக் பட்டனை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+