Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் மீண்டும் ஜெயிக்கும் வேடர்கள்...இவுங்க கிட்ட என்னமோ இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலில்ருவது எல்லாம் பெருசு இல்லை யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் பெருசு என்று வேடர்கள் காட்டிவிட்டார்கள்.
முழு முயற்சியோடு தங்களது திறமையை வெளி காட்டிய காடர்கள் இந்தமுறையும் நூலிழையில் தோற்று விட்டனர்.

என்னதான் அடிச்சு கிட்டாலும் வேடர்களை ஜெயிக்க முடியவில்லையே என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

கலக்கும் ரியாலிட்டி ஷோ

கலக்கும் ரியாலிட்டி ஷோ

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் ரியாலிட்டி ஷோ ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி உலக அளவில் புகழ் பெற்ற நிகழ்ச்சியை தமிழில் புதியதாக ஒளிபரப்பி வருகின்றனர். இதுவரைக்கும் பல மொழிகளில் சர்வைவர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்திருந்தாலும் தற்போது தமிழ் சர்வைவருக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பலருக்கும் பரிச்சயமான நபர்களாக இருப்பதால் பட்டி தொட்டி எல்லாம் இந்த நிகழ்ச்சி பிரபலமாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிகர்கள் முதல் மாடலிங், விளையாட்டு வீரர்கள் வரை என பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். போட்டிகள் எல்லாமே வெறித்தனமான தான் இருந்து வருகிறது.

இரண்டு அணியும் வெறித்தனம்

இரண்டு அணியும் வெறித்தனம்

இந்த நிகழ்ச்சி தொடங்கும் போது ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் தொடங்கிய முதல் நாளிலிருந்து இப்ப வரைக்கும் ஒவ்வொரு போட்டியும் வெறித்தனமாக இருப்பதை பார்த்து இது எந்த நிகழ்ச்சியின் சாயலிலும் இல்லை இது வேறு விதமாக இருக்கிறது என்று கூறிவருகின்றனர். அதுவும் காட்டுக்குள்ளே இவர்கள் அடிப்படை தேவைகள் ஒவ்வொன்றுக்கும் போராடி பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இவர்களைப் பார்ப்பதற்காகவும் காட்டின் இயற்கையை ரசிக்கும் ரசிகர்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் அதில் காடர்கள் வேடர்கள் என்று இரு அணியாக பிரித்திருக்கின்றனர். காடர்கள் அணியில் விக்ராந்த்,சரண், ராம்.சி, இந்திரஜா சங்கர், லேடி கேஷ், விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, உமா பதி போன்றோர் இருக்கின்றனர். வேடர்கள் அணியில் லக்ஷ்மி ப்ரியா, அம்ஜத் கான், நந்தா, ஸ்ருஷ்டி டாங்கே, லக்கி நாராயணன், பெசன்ட் ரவி, ஐஸ்வர்யா, விஜே பார்வதி போன்றோர் இருக்கின்றனர். இதில் இரண்டு அணியில் இருந்தும் மூன்றுபேரை மூன்றாம் உலகத்திற்கு எலிமினேஷன் செய்து அனுப்பி வைத்துவிட்டனர்.

வெறித்தனமான பயிற்சி

வெறித்தனமான பயிற்சி

மீதமுள்ள போட்டியாளர்கள் தங்களுடைய அணியோடு போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றனர். இதுவரைக்கும் பல டாஸ்க்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் அதில் வேடர்கள் அணி வெற்றி பெற்று கொண்டிருக்கிறது. காடர்கள் அணி இது வரைக்கும் டாஸ்க்கில் கூட வெற்றி பெறவில்லை. அதனால் இந்த வாரத்தில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று வெறித்தனமாக உடற்பயிற்சிகள் முதல் ஆலோசனைகளை நடத்தி வந்தனர். தங்கள் அணிக்கு வெற்றிக்கு தடையாக இருக்கும் காரணங்கள் என்ன என்று தீவிரமாக விசாரித்து வந்தனர். இவர்களின் பயிற்சியையும் விடாமுயற்சியையும் பார்த்த ரசிகர்கள் இந்த வார டாஸ்க் இவர்கள் வெற்றி பெற்றுவிட வேண்டும் எனறு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

வெற்றிபெற்ற வேடர்கள்

வெற்றிபெற்ற வேடர்கள்

ஆனால் வேடர்கள் அணியில் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றுக் கொண்டு இருந்தாலும் இவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் தான் ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டிருக்கிறது. அதுவும் விஜே பார்வதி இவர்களை அனைவரை விடவும் வித்தியாசமாக இருக்கிறார். யாருடனும் அதிகமாக செட் ஆகவில்லை என்று இவர்களுக்கு உள்ளேயே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தலைவர் பதவியில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் தொடங்கி ஒவ்வொரு நாளும் சின்னச் சின்ன விஷயங்களில் கூட இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. ஆனாலும வெற்றி பெறுவதில் கவனமாகத்தான் இருந்து கொண்டிருந்தனர். அர்ஜுன் அனைவரையும் வரச் சொல்லி போட்டியை தொடங்கியதும் ஆரம்பத்திலிருந்தே காடர்கள் அணிதான் முன்னணியில் இருந்து கொண்டிருந்தது. ஆனால் வேடர்களின் சமயோசித புத்தியினால் கடைசியாக வேடர்கள் அணி இந்த முறையும் வெற்றி பெற்றுவிட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்காக சந்தோஷப்படுவதா அல்லது இவ்வளவு போராடி கடைசியில் தோல்வி அடந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதா என்று தெரியாமல் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+