இப்போதும் பட்டன் போன் பயன்படுத்தும் ஃபஹத் ஃபாசில்.. ஆனால், விலை இத்தனை லட்சம்!
சென்னை: தமிழ், மலையாளம் என்று பல மொழிகளிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ஃபஹத் ஃபாசில் சமீபத்தில் பயன்படுத்திய செல்போன் தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. Vertu என்று ஆடம்பரப் பிராண்டின் பட்டன் ஃபோனை தான் பஹத் ஃபாசில் பயன்படுத்துகிறார். ஆனால் அந்த போனின் விலை தான் இப்போது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
நடிகை நஸ்ரியாவின் கணவரான ஃபஹத் ஃபாசில் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியான போது இவரா நஸ்ரியாவின் கணவர் என்று அதிகமான கேலி கிண்டல்கள் செய்யப்பட்டன. ஆனால் ஃபஹத் ஃபாசில் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய பிறகு ஃபஹத் ஃபாசில் மனைவிதான் நஸ்ரியா என்று ரசிகர்கள் கூறத் தொடங்கிவிட்டனர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ஃபஹத் பயன்படுத்திய சிறிய போன் தான் மிகவும் ஹைலைட்டாக இப்போது சோசியல் மீடியாவில் பேசப்படுகிறது.

கைக்குள் அடங்கும் வகையில் சின்ன கீபோர்டு போனை தான் ஃபஹத் ஃபாசில் வைத்திருக்கிறார் என்று ஆரம்பத்தில் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அது ஆடம்பரமான பிராண்டட் போன் என்று பிறகு தான் தெரிந்தது. இதனால் இதன் விலை மற்றும் பிராண்ட் பற்றி தகவல்களை நெட்டிசன்கள் வலை வீசி தேடி கண்டுபிடித்து இருக்கின்றார். பார்க்க சின்னதாக இருந்தாலும் இதில் விலையும் அதிநவீன அம்சங்களும் அனைவரையும் பேச வைத்திருக்கிறது.
போன் பற்றிய தகவல்
வெர்டு (Vertu) நிறுவனம் இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு கைபேசி உற்பத்தி நிறுவனமாகும். இது 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் நோக்கியா நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்தது. வெர்டு கைபேசிகள், இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர் பகுதியில் இருந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டன.
இந்த நிறுவனம், கைபேசியின் தொழில்நுட்ப அம்சங்களை விட அதன் வடிவமைப்பு, கைவினைத்திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து விற்பனை செய்தது. நியூயார்க், துபாய், மாஸ்கோ, ஃபிராங்க்ஃபர்ட், ஹாங்காங், பாரிஸ், சிங்கப்பூர் போன்ற நகரங்களில் வெர்டு நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன.
வெர்டு (Vertu)
2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், நோக்கியா நிறுவனம் வெர்டு நிறுவனத்தை இக்விட்டி VI என்ற தனியார் நிறுவனத்திற்கு விற்றது. இருப்பினும், நோக்கியா நிறுவனம் 10% பங்குகளைத் தக்க வைத்துக் கொண்டது. 2013 ஆம் ஆண்டின் இறுதியில், வெர்டு நிறுவனத்திற்கு சுமார் 3,50,000 வாடிக்கையாளர்கள் இருந்தனர்.
2015 ஆம் ஆண்டில், இக்விட்டி நிறுவனம் வெர்டுவை ஹாங்காங்கைச் சேர்ந்த கோடின் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு விற்றது. பின்னர், 2017 மார்ச் மாதத்தில், கோடின் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெர்டுவை சைப்ரஸைச் சேர்ந்த பாஃபர்டன் லிமிடெட் என்ற துருக்கிய நிறுவனத்திற்கு விற்றது. ஆனால், 2017 ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் திவாலானது. புதிய உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் திவால் பாதுகாப்புக்காக மனு தாக்கல் செய்தனர்.
ஃபஹத் ஃபாசில் பட்டன் போன்
வெர்டு நிறுவனம் திவாலாகும் முன்பு கடைசியாக வெளியிட்ட கைபேசி மாடல் வெர்டு கான்ஸ்டலேஷன் (2017) ஆகும். 2018 ஆம் ஆண்டில், வெர்டு திவால் நிலையிலிருந்து மீண்டு அக்டோபர் மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆஸ்டர் பி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. 2022 அக்டோபரில் டூயல் ஏஐ மாடல்களை அறிமுகம் செய்தது. மேலும், வெப் 3.0 தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் வெப்3 கைபேசி இதுவென வெர்டு கூறியது. இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், பில்ட்-இன் இமேஜ் டூ என்எஃப்டி கன்வெர்ட்டர் உள்ளது.
சமீபத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசில் வைத்திருக்கும் கைபேசி வெர்டு அசென்ட் சீரிஸ் மாடல் என்பது தெரியவந்துள்ளது. இந்த கைபேசியின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஃபஹத் ஃபாசில் பட்டன் போனுக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்துள்ளாரா என்று சிலர் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். தமிழில் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் அவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்த மாமன்னன் திரைப்படத்திற்குப் பிறகு இப்போது வடிவேலுவுடன் மீண்டும் மாரிசன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற ஜூலை 25ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.












Click it and Unblock the Notifications