வடிவேலு பாலாஜியின் கெட்டப்பில் மாறி இருக்கும் அறந்தாங்கி நிஷா...உருகும் ரசிகர்கள்
சென்னை: வடிவேலு பாலாஜியின் மறைவுக்குப் பிறகு அவருடைய ரசிகர்கள் அவரை நினைத்து அதிகமாக பீல் பண்ணி வருகின்றனர்
பல வருடங்களுக்குப் பிறகு அவரைப் போலவே அவருடைய கெட்டப்பில் வளம்பெறும் அறந்தாங்கி நிஷாவை பார்த்ததும் ரசிகர்கள் அசந்து போய் இருக்கின்றனர்.
பார்த்ததும் ஒரு நிமிடம் அனைவருக்கும் வடிவேலு பாலாஜியின் நினைவுகள்தான் எட்டிப்பார்க்கிறதாம்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகம்
விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிய பாலாஜி.. ஒரு சிறந்த மிமிக்கிரி கலைஞர் ஆவார். அதோடு மட்டுமின்றி தன் உடல் மொழியிலும் நகைச்சுவை செய்யும் விதத்திலும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை போன்று அச்சு அசலாக செய்ததால் வடிவேல் பாலாஜி என்று மக்களிடம் மிகவும் பிரபலமானார். தனது காமெடி திறமையின் மூலம் ஒரு கட்டத்தில் விஜய் டிவியின் அனைத்து விதமான காமெடி ரியாலிட்டி ஷோக்களிலும் தவிர்க்க முடியாத நபராக பங்குபெற்று ஒரு கலக்கு கலக்கி வந்தார்.

மதுரைக்காரர்
மதுரையில் பிறந்த பாலாஜி மதுரை மண் வாசம் வீசும் தனது பேச்சாலும், சக கலைஞர்களுடன் நிகழ்ச்சிகளில் அவர் பெர்பாமன்ஸ் பண்ணும் வெகுளித்தனத்துக்காகவும் அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டு வந்தார்.பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்த வடிவேல் பாலாஜி தன்னுடைய சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தார். யார் கண் பட்டதோ என்னவோ..? கொரோனா முதல் அலை இவரது வாழ்க்கையில் புயலைக் கிளப்பியது. சிறப்பாக இல்லாவிட்டாலும் சீராக சென்று கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் கொரோனா ஊரடங்கு மற்றும் படப்பிடிப்பு தடை போன்றவற்றால் ஏற்பட்ட பொருளாதாரத் தடையால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார்.

மரணம் வரை கொண்டு சென்ற மன அழுத்தம்
அதிக மன அழுத்தம் இவரை ஹார்ட் அட்டாக்கில் கொண்டு விட்டது முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜி, போதிய பண வசதி இல்லாததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையில் இருந்த பொழுது யாரும் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு சக கலைஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. செலிபிரிட்டிகள் ,நடிகர்கள் என்றாலே வசதியாக தான் இருப்பார்கள் என்று போலி பிம்பத்தை இவரது மரணம் தோலுரித்தது. சினிமா கலைஞர்கள் அனைவரும் வசதியானவர்கள் அல்ல அவர்களிலும் பின்தங்கிய நிலையில் இருக்கும் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் இவரது மரணம் உணர்த்தியது.

நிஷாவின் அசத்தல் கெட்டப்
இவர் இறந்த நேரத்தில் விஜய் டிவியில் இவருக்காக நடத்தப்பட்ட துக்க அனுசரிப்பு நிகழ்ச்சியில் சக கலைஞர்கள் வடித்த கண்ணீரை வைத்து வடிவேல் பாலாஜியின் நல்ல குணங்களை நாம் அறிந்து கொள்ளலாம். தற்பொழுது அறந்தாங்கி நிஷா அவர்கள் ஒரு காமெடி ஷோவில் பங்கேற்பதற்காக வடிவேலுவின் தலைநகரம் படத்தில் வரும் நாய் சேகர் கெட்டப் போட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி செட்டில் உள்ளவர்கள் கூட ஏற்கனவே இந்த கெட்டப்பில் கலக்கிய வடிவேல் பாலாஜி அப்படியே அச்சு. அசலாக.. உரித்து வைத்தார் போல் இருப்பதாக உணர்ச்சி பொங்க கூறியுள்ளனர். இந்த போட்டோக்களை வடிவேலு பாலாஜின் சக கலைஞரும் நண்பருமான அறந்தாங்கி நிஷா இதனை நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளது.. அனைவருக்கும் வடிவேலு பாலாஜியை ஒரு நிமிடம் கண்முன்னே கொண்டு வந்தது போல் உள்ளது...
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications