பிக் பாஸ் ப்ரோமோவில் எதிரொலித்த விஜயகாந்த் மறைவு வருத்தம்.. குவியும் கண்ணீர் கருத்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதற்கு அதிகமான ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை புறம் தள்ளி விட்டு நடிகர் விஜயகாந்தின் மறைவு குறித்து தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இன்று உடல்நிலை குறைவால் விஜயகாந்த் காலமாகி இருக்கும் நிலையில் ரசிகர்களும் பிரபலங்களும் தங்களுடைய கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
விஜயகாந்த் மறைவால் ரசிகர்களும், திரை பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய வருத்தங்களை கண்ணீரோடு வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் விஜயகாந்த் பற்றிய செய்திகள் தான் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.
இதுவரைக்கும் விஜயகாந்த் செய்த உதவிகள் மற்றும் அவருடைய நல்ல குணங்கள் பற்றி பலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். கம்பீரமாக வாழ்ந்து பலருக்கு ரோல் மாடலாக இருந்த விஜயகாந்த் இன்று இந்த பூமியில் இல்லை என்பது பலராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் ரசிகர்கள் மீண்டும் அவர் பழைய நிலைக்கு திரும்பி வந்து விட வேண்டும் என்று பல கோவிலில் வேண்டியவர்கள் ஏராளம்.
காரணம் விஜயகாந்த் ஒரு நடிகராகவோ, அரசியல் கட்சி தலைவராகவோ மக்களிடம் பழகாமல் எதார்த்தமாக ஒரு வீட்டில் உள்ள நபர் போலவே பல இடங்களில் தன்னுடைய கோபம் சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதுபோல பலருக்கும் உதவிகளையும் அள்ளி அள்ளி செய்திருக்கிறார். இதனால் இன்று அவருடைய உயிர் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து இருந்தாலும் அவருடைய புகழ் பல ஆண்டுகள் உலகத்தில் இருக்கும்.
எப்படி ஒரு காலகட்டத்தில் எம்ஜிஆர், காமராஜர் போன்றோர் வாழும்போது பல பேர் தூற்றினாலும் இப்போது அவர்களை குறித்து பெருமையாக பேசுகிறார்களோ அதுபோலத்தான் விஜயகாந்தை பற்றியும் பேசுவார்கள் என்பது இப்போது தெரிகிறது... அதாவது தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இதுவரைக்கும் இல்லாத அதிசயமாக இந்த ப்ரோமோக்கு கீழே வரும் கமெண்ட்களில் ரசிகர்கள் முழுமையாக விஜயகாந்த் உடைய இழப்பு பற்றிய வருத்தங்களை தான் தெரிவித்து வருகிறார்கள்.

இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி பலர் விமர்சித்து வரும் நிலையில் இன்று கண்ணீரோடு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய கவலைகளை கொட்டி வருகிறார்கள். ஒரு காலத்தில் பெயரும் புகழோடு இருந்த விஜயகாந்தை இதே சமூக வலைதள பக்கங்களில் பலர் மீம்ஸ் கண்டெண்டுகளாக உருவாக்கி அவரை கலங்கடித்ததும் உண்டு.

ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத விஜயகாந்த் மீண்டும் தன்னுடைய கெத்தான வாழ்க்கையில் திரும்பி இருந்தார். ஆனால் யார் கண்ணுபட்டதோ தெரியவில்லை. அவருடைய உடல் நல பிரச்சனை வந்து இன்று மக்களிடமிருந்து திரும்பி வர முடியாத இடத்திற்கு பிரிந்து போய் இருக்கிறார். பல ரசிகர்கள் தங்களுடைய தவறை புரிந்து தற்போது வெளியாகி இருக்கும் பிக்பாஸ் ப்ரோமோக்களில் தங்களுடைய வருத்தங்களை தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications