For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னடா புள்ளீங்கோ.. இடுப்புக்கு கீழ பேன்ட்டை... ஒரு டீசன்ஸி வேணாம்...?

Google Oneindia Tamil News

சென்னை: ஆதித்யா சானலில் ஃபைனலி கலாட்டா என்கிற ஒரு நிகழ்ச்சி வாராவாரம் ஒளிபரப்பாகி வருது. இதை அடிக்கடி ஆதித்யா டிவி மறுமுறை என்று ஒளிபரப்பியும் வருகிறது.

பீயிங் மெட்ராஸ்னு ஒரு டைட்டிலில் ஒரு எபிசோட். சென்னைக்கு வந்து தங்கி இருக்கும் வெளியூர் நண்பன், சென்னைக்கு கல்யாணம் ஆகி வந்து இருக்கும் ஒரு பெண்.. அவள் அண்ணன்... இப்படி இவர்கள் எங்க ஊரில்.. எங்க ஊரில் என்று செய்யும் அலப்பறை எபிசோட் இது.

மாப்பிள்ளை ஏரியில் வீடு கட்டி இருக்கான்னு பெருமையா பொண்ணை குடுத்தால் .. இங்கே குழாயில் தண்ணியே வர மாட்டேங்குதுன்னு சொல்றா தங்கச்சி.. நிகழ்ச்சி இப்படி சுவாரஸ்யமா இருக்கு.

நாலு தெருதான்

நாலு தெருதான்

டேய் மச்சான். இங்கே நேசமணி பொன்னையா தெரு எங்கடா இருக்குன்னு கேட்கிறான் ஊரில் இருந்து வந்த நண்பன். எனக்கு தெரியாதுடா.. இப்போதுதான் நான் அப்படி ஒரு தெரு இருக்கறதையே கேள்விப்படறேன்னு சொல்றான். டேய்...எங்க ஊரில் மொத்தம் நாலு தெருதான் இருக்கு. யார் எப்போ எந்த தெருவை கேட்டாலும் உடனே சொல்லிடுவேன்.. மெட்ராஸ் வந்து எத்தனை வருஷமாச்சு.. இன்னும் நேசமணி பொன்னையா தெரு தெரியலையான்னு கேட்கிறான் வெளியூர் நண்பன்.

அண்ணாச்சி கடையாம்ல

அண்ணாச்சி கடையாம்ல

என்னங்க இந்த ஊரில் சாமான் வாங்கறதுக்கு எல்லாம் காசு கேட்கறாங்க.. பேருதான் அண்ணாச்சி கடை.. எங்க ஊர் அண்ணாச்சி கடையில் எவ்ளோ சாமான் நான் ஆட்டைய போட்டு வந்திருக்கேன் தெரியுமான்னு பெருமை பீத்திக்கறா கல்யாணம் ஆகி வந்த பெண். அதோடு.. ஒரு கட்டை பை வாங்கினா கூட காசு கேட்கறாங்க.. இதுக்கு பேர் அண்ணாச்சி கடையாம்ல.. என்று சலிச்சுக்கறா.

என்னடா புள்ளீங்கோ

என்னடா புள்ளீங்கோ

என்னடா புள்ளீங்கோ.. இடுப்புக்கு மேல போடற பேன்ட்டை இடுப்புக்கு கீழே போட்டுக்கறீங்க...கொஞ்சம் கூட டீசன்ஸி இல்லைன்னு சொல்லிகிட்டே லுங்கியை கழுத்துகிட்டே தூக்கிகிட்டு நிற்கிறான் கிராமத்தான். என்ன மாப்ளே இது சாம்பல் கலரை சுவற்றில் பெயிண்ட் அடிச்சு வச்சு இருக்கீங்க.. மங்களகரமா மஞ்சள், பச்சைன்னு அடிக்கக் கூடாதுன்னு கேட்கிறான்.

சர்க்கரை டீத்தூள்

சர்க்கரை டீத்தூள்

எங்க ஊரில் சர்க்கரை, டீத்தூள்ன்னு எது வேணும்னாலும் கேட்டா குடுப்பாங்க. பக்கத்துக்கு வீட்டு அம்மாகிட்டே 2 கிலோ அரிசிதான் கேட்டேன். அதுக்கு இப்படி மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு போகுதுன்னு சொல்றா சென்னை மருமகள். அடுத்து.. என்ன இந்த ஊரில் எல்லாரும் அரைச்சு விற்கும் மாவை வாங்கிகிட்டு போறாங்க. வீட்டில் அரிசி ஊற வச்சு அரைக்கறதில்லையான்னு கேட்டுகிட்டு இருக்கும்போது.. தங்கச்சி இந்தா நீ இட்லி கேட்டியேன்னு அண்ணன் வாங்கிட்டு வந்து தர்றான்.

English summary
a show called finally galata is being aired weekly on aditya Channel. It is often broadcast as aditya tv repeat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X