சர்வைவரின் செல்லப்பிள்ளை உமாபதி...விதவிதமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கும் உமாபதிக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளத்தில் இவருடைய ரசிகர்கள் இவர்தான் இந்த சர்வைவர் நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்று ஆசிர்வாதங்களையும் அளித்து வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடைய சமூக வலைத்தள அட்மின் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.

ரியாலிட்டி ஷோவில் அறிமுகம்
வெள்ளித்திரையில் காமெடி நடிகராக கலக்கிக்கொண்டு இருக்கும் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா தற்போது, சின்னத்திரையில் அதுவும் ஜீ தமிழில் ரியாலிட்டி ஷோவில் ரசிகர்களின் மத்தியில் நல்ல இடத்தை பிடித்து விட்டார். இதற்கு முன்பு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் கூட அந்த அளவிற்கு பிரபலம் ஆகாமல் இருந்து கொண்டு இருந்தார். ஆனால் தற்போது இவர் சர்வைவர் நிகழ்ச்சி மூலமாக பட்டிதொட்டியெலலாம் பிரபலம் அடைந்து விட்டார்.

ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்
இதற்கு முன்பு வரைக்கும் இவர் தம்பிராமையாவின் மகன் என்று பெயர் கூறி இவருக்கு அடையாளம் கூறிக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட தற்போது உமாபதி ராமையாவின் தந்தைதான் தம்பி ராமையா என்று சொல்லும் அளவிற்கு இவர் ரசிகர்களின் மனதில் நன்றாக பதிந்து விட்டார். சர்வைவர் நிகழ்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தாலும் தன்னுடைய தனித்தன்மையையாலும் சிறப்பான நகைச்சுவை கேரக்டரிலும் எப்போதுமே நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

டாஸ்க்கில் கலக்கல்
டாஸ்க் என்று வந்தால் வெறித்தனமாக இறங்கி தன்னுடைய திறமையை காட்டுவதில் இவர் வல்லவனுக்கு வல்லவன் என்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டார். அதுமட்டுமல்லாமல் என்னதான் நெகிழ்ச்சியான ஒரு தருணமாக இருந்தாலும் அந்த இடத்தில் தனக்கே உரிய டைமிங் காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்து ரசிகர்களை மனதையும் கவர்ந்து விடுகிறார். அதனாலேயே இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிகர்களாக மாறிவிட்டார்கள்.

குவியும் வாழ்த்துக்கள்
சக போட்டியாளர்களை கலாய்த்து தள்ளுவதிலும் சரி, அவர்களுக்கு சோகமாக இருக்கும் நேரங்களில் ஆறுதல் சொல்வதும் சரி, இவருக்கு நிகர் இவர்தான். தற்போது இவர் சர்வைவர் நிகழ்ச்சியில் இருப்பதால் இவருடைய அட்மின் இவருக்கு வாழ்த்துக்களை கூறும் ரசிகர்களுக்கு நன்றி கூறி இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். அதில் சர்வைவர் நிகழ்ச்சியில் இவர் செய்யும் சாகசங்களை குறிப்பிடுவதாக பல வீடியோக்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதைப்பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications