டாஸ்க்கில் பிரியங்காவாக மாறி இருக்கும் ராஜூ.. ராஜுவின் வார்த்தையை கேட்டு காண்டான பாவனி
சென்னை: கண்ணாடி டாஸ்க்கில் இரண்டாவது பாகத்தை தொடங்கிய பிக்பாஸ்.
இன்று பிரச்சனைக்கு பஞ்சமில்லாமல் வெடிக்கும் என புலம்பும் ரசிகர்கள்.
டாஸ்க் என்கிற பெயரில் மனதில் இருப்பதை ராஜூ கூறி விட்டாரே என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

வித்தியாசமான டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக இருந்து வருகிறது. இதில் பலர் முகமூடியைக் எடுத்துவிட்டு தங்களுடைய உண்மையான முகத்தில் விளையாட்டை ஆட தொடங்கிவிட்டனர் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனால்தான் ஒவ்வொரு டாஸ்க்கிலும் சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் தற்போது ஐந்தாவது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் வாரத்தில் இருந்த போட்டியாளர்களின் கேரக்டர் இப்போது இல்லையே என்று ரசிகர்களே திகைத்துப் போய் இருக்கிறார்கள்.

ராஜுவுக்கு பெருகும் ஆதரவு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதுமுகமாக பலர் அறிமுகமாகி இருந்தாலும் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான போட்டியாளர்கள் ஒரு சிலர் தான் இருந்து வந்தனர். தற்போது இந்த சீசனில் கலந்து கொண்ட அனைவரும் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து விட்டனர். ஆனாலும் ராஜூவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இவர் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னுடைய காமெடியால் அந்த இடத்தை கலகலப்பாக மாற்றி விடுகிறார் என்று இவருக்கு நாளுக்குநாள் ஆதரவு கூறி வருகிறது.

தொடரும் சண்டைகள்
ஒரு பக்கம் ஆதரவு கூடிக்கொண்டே இருக்கிறது என்றால் பிக்பாஸ் வீட்டிற்குள் இவருக்கும் ஒரு சில போட்டியாளர்களுக்கும் சண்டை சச்சரவுகள் முட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒருவர் பாவனி. தாமரையுடன் காயின் டாக்ஸ்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒவ்வொரு முறையும் ராஜு மற்றும் பாவனி இடையே கருத்து மோதல்கள் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுருதி இருந்தவரைக்கும் பாவனிக்கு சப்போர்ட்டாக இருந்து கொண்டிருந்தார். அவர் ராஜுவை தன்னுடைய சொந்த அண்ணனாக தான் முதலில் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட மன கசப்புக்கு பிறகு எல்லோருடைய உறவு முறையும் அப்படியே மாறிவிட்டது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
தற்போதைய கண்ணாடி டாஸ்க்கில் நேற்றைய எபிசோடில் ராஜுவின் கண்ணாடியாக பாவனி பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ராஜுவின் அவ்வளவு சேட்டைகளையும் அப்படியே பாவனி செய்து கொண்டு இருந்ததை பார்த்ததும் இவர்கள் இருவரின் சண்டைகள் எல்லாம் இனி காணாமல் போய்விடும் என்று ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய ப்ரமோவில் கதை வேறு விதமாக இருக்கிறது. உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியின் இரண்டாம் கட்ட நிலை என்று போட்டியாளர்கள் இன்று ஜோடி மாறி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அதில் பிரியங்காவின் கண்ணாடியாக ராஜு பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். அவர் அதில் பிரியங்கா பேசுவது போல பாவனி உங்களுக்கு ஒரு பட்டம் கொடுத்தாலே if u are bad i am your dad என்று ஏத்தி விடுகிறார். அமைதியா இருங்க என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்டதும் காண்டாகி இருக்கிறார் பாவனி. இதை பார்த்த ரசிகர்கள் இன்று தரமான சம்பவம் இருக்கு என்று கூறி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications