போகும் இடமெல்லாம் இப்படியா ஆகணும்... ஏன் இந்த திடீர் முடிவு..??குழப்பத்தில் ரட்சிதா ரசிகர்கள்
சென்னை: சின்னத்திரை நடிகையான ரட்சிதாவின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கவும் நிகழ்வுகள் ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளதாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சி ஆக பல சீசன்களாக வலம் வளர்ந்தவருக்கா இப்படி நடக்க வேண்டும் என்று பலர் வேதனையோடு பதிவிட்டு வருகிறார்கள்.
கன்னட திரைப்படத்திற்கு கதாநாயகியாக நடிக்க துவங்கியிருந்த ரட்சிதா தற்போது சின்ன திரைக்கு மூடு விழா கொடுத்து விட்டாரா என்று அவருடைய தீவிரமான ரசிகர்கள் பீல் பண்ணுவதில் சமூக வலைத்தளமே தத்தளிக்கிறதாம்.

பிரபலமான மீனாட்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலமாக பலருக்கும் பரிச்சயமான ரட்சிதா அந்த சீரியலின் பல சீசனங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். முதல் சீசனில் மட்டும்தான் செந்தில் மற்றும் அவருடைய மனைவியான ஸ்ரீஜா இருவரும் நடித்திருந்தனர்.முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது மூன்றாவது சீசன்கள் என வந்த சீசன்கள் எல்லாமே ரட்சிதா தான் மகளுக்கு மீனாட்சி ஆக வலம் வந்து கொண்டிருந்தார். இதனாலே தற்போது வரைக்கும் இவரை பலரும் மீனாட்சி என்று கூப்பிட்டு வருகிறார்கள்.

காதல் திருமணம்
முதல் முதலாக பிரிவோம் சந்திப்போம் எனும் சீரியலில் கருப்பான தேவதையாக கிராமத்து பெண்ணாக ரட்சிதா அறிமுகம் ஆகி இருந்தார். முதல் சீரியலில் இவரை ரசிகர்கள் அடையாளம் கண்டுள்ளார்களோ இல்லையோ இவர் காதலித்து திருமணத்தை செய்து கொண்டு புது பொலிவோடு அடுத்தடுத்த சீரியல்களில் அமர்க்களப்படுத்தி விட்டார். ஆரம்ப காலகட்டத்தில் இவருக்கு திருமணம் முடிந்ததே பலருக்கும் தெரியாத வகையில் தான் இருந்து வந்தது. பின்பு இவரும் இவருடைய கணவரான தினேஷும் நாச்சியார் புரம் என்னும் சீரியல் மூலம் மீண்டும் இணைந்த பிறகு பலருக்கும் தெரிந்திருந்தது. அது மட்டுமல்லாமல் இவர் இவருடைய கணவரோடு பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து இருந்தார்.

சீரியல் இருந்து விலகல்
ஒரு சில காலமாகவே ரட்சிதாவுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பாக அமையவில்லை என்று பலரும் கூறி வருகிறார்கள். சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் செந்திலோடு நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது. இந்த சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று சீரியலை விட்டு விலகிவிட்டார். இது பலதரப்பட்ட ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அப்போது இவர் திரைப்படம் ஒன்றில் கமிட்டாகி இருப்பதால் அதனால் தான் இவர் சீரியலை விட்டு விலகி இருக்கிறார் என்ற செய்திகளும் பரவி வந்தது.

ஏன் இப்படி நடக்கணும்
விஜய் டிவியில் இருந்து இப்போது கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் இவர் சீரியல் பக்கம் வந்ததும் இவருடைய ரசிகர்கள் அதிகமான சந்தோஷத்தில் இருந்தார்கள். ரட்சிதாவின் ரசிகர்கள் பலர் ரட்சிதாவிற்காக தான் இந்த சீரியலை பார்த்து வந்தார்களாம். ஆனால் தற்போது இந்த சீரியல் கடைசி கட்டத்தில் நெருங்கி விட்டது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதை பார்த்ததும் பலரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். ஏன் இப்படி ரட்சிதா செல்லும் இடமெல்லாம் சீரியல் முடிந்து விடுகிறதே என்று ஃபீல் பண்ணி வருகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications