அண்ணாச்சி நீங்க பேசுனது தப்பாச்சி..சண்டையை தொடங்கிய போட்டியாளர்கள்.. அண்ணாச்சிக்கு குவியும் ஆதரவு
சென்னை: பிக்பாஸ் முதல் ப்ரோமோ ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் சண்டை சச்சரவை கிளப்பிவிட்டது.
எப்படியும் இதை செய்வார்கள் என்று தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இதை ஆரம்பிப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லையாம்.
சிரிச்சது ஒரு குத்தமாய்யா அதற்கு இவ்வளவு பெரிய அக்கபோரா என்று நெட்டிசன்கள் தங்களுடைய ட்ரோல்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

சண்டை தொடங்கியாச்சு
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனும் வெற்றி அடைவதற்கு காரணமே அதில் நடக்கும் சண்டை சச்சரவுகளும், காதல் காட்சிகளும் தான் என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில் இந்த ஐந்தாவது சீஸனில் அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கிறதே என்று ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் தற்போது முதல் ப்ரோமோவில் இதோ...ஆரம்பித்து விட்டோம் என்று போட்டியாளர்கள் தொடங்கிய சண்டை சச்சரவுகள் வைரலாக பரவி வருகிறது

சிரிச்சது குத்தமா
சண்டை ஆரம்பிப்பது எல்லாம் வழக்கம் போல தான் இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு சிரிச்சது குத்தமா என்று சிறுபிள்ளைத்தனமாக இந்த முறை பிரச்சனையை கிளப்பி இருக்கும் ப்ரோமோ தான் ரசிகர்களின் வாயில் விழுந்திருக்கிறது. ஐயோ என்ன ஆச்சு என்று பலர் இந்த ப்ரோமோவை பார்த்து நிகழ்ச்சிக்காக காத்திருக்கும் நிலையில், இந்தா வந்துட்டோம் நீங்க இப்படி ஆரம்பித்தா..நாங்க வேற மாதிரி ஆரம்பிக்கிறோம் என்று நெட்டிசன்கள் தங்களுடைய பாணியில் ப்ரோமோவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

ப்ரோமோக்கு சண்டையா
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களின் எப்படியும் பிரபலமாகி விட வேண்டும் என்பதில் தான் கவனமாக இருந்து வருகின்றனர். இதில் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டிருந்தவர்கள் தற்போது இமான் அண்ணாச்சி நார்மலாக பேசிய ஒரு சில வார்த்தைகள் தான் போட்டியாளர்கள் இடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன இவர் இப்படி சொல்லிவிட்டார் என்று ஏற்றுக்கொள்ள முடியாமல் ஒரு கூட்டம் துள்ளிக் கொண்டிருக்கும் போது, அவர் செய்தது சரிதான் என்று ஒரு கூட்டம் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறது.

அழுகாச்சி சீன்கள்
அனைவரும் தாங்கள் கடந்து வந்த கஷ்டமான காலங்களை சொல்லி அடுத்தவர்களை இம்ப்ரஸ் செய்யும் டாஸ்க் வந்ததும் நேற்றைய எபிசோடுகள் முழுக்க அடுத்தவர்களின் காதுகளில் இருந்து ரத்தம் வரும் வரைக்கும் தங்களுடைய கவலைகளை கூறி ரசிகர்களையும் போட்டியாளர்களையும் கண்ணீர் கடலில் மூழ்கடித்து கொண்டிருந்த போட்டியாளர்கள் இன்று கஷ்டத்தையும் கூட சந்தோசமாக சொல்லலாம் என்று முடிவெடுக்கின்றனர். இந்த நிலையில் இமான் அண்ணாச்சி தனக்கான நேரத்தில், அவர் தான் பட்ட கஷ்டங்களை சொல்லிக் கொண்டிருக்கும்போது அதனால்தான் இந்த முறை ஒரு காமெடி நடிகர் பிக்பாஸ் டைட்டிலை வின் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று சிரித்துக்கொண்டே பேசிவிட்டார்.

கச்சேரி ஆரம்பம்
இவர் சிரித்ததை பார்த்து சிபி நீங்கள் பேசும்போது சிரிச்சது தப்பா அண்ணே என்கிறார். அதற்கு, இமான் அண்ணாச்சி அதெல்லாம் இல்லையே, சிரிக்கலாமே என்று கூறியதும் அருகில் அமர்ந்திருந்த நிரூப் எனக்கு அது சரியா படல டா என்று கோபமாக கத்துகிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் இவர் ஆத்திரத்தில் வெளியே சென்று விடுகிறார். அவர் அருகில் அபிஷேக் நின்றுகொண்டு என்னவேணா பேசு என்று நிரூப் இடம் கத்துகிறார். இதையெல்லாம் பார்க்கும் போது நமிதா மாரிமுத்து சண்டை ஆரம்பிக்கப் போகுது வீட்டில என்கிறார். நேற்றைக்கு வரைக்கும் முஸ்தபா முஸ்தபா என்று ஆட்டம் போட்டு இருந்தவர்கள் இன்று கச்சேரியை ஆரம்பித்து விட்டார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications