நிரூப்,பாவனி இடையில் கொழுந்துவிட்டு எரியும் புது பிரச்சனை.. ரசிகர்களுக்கு புரியவில்லையே
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நிரூப் பாவனி இடையில் சண்டை முட்டிக்கிட்டு இருக்கிறது.
ஒரு வழியாக பிரச்சனைகள் பிக்பாஸில் தொடங்கிடுச்சி என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கூறிவருகின்றனர்.
நெட்டிசன்கள் நிரூப்பின் பார்வை தற்போது பாவனியின் பக்கம் ஹெவியாக திரும்பியிருக்கிறது போல என்று கலாய்த்து வருகின்றனர்.

பிரச்சனைகள் தொடங்கிடுச்சி
பிக்பாஸ் ஐந்தாவது சீசன் அந்த அளவிற்கு சுவாரஸ்யம் இல்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி கொண்டிருக்கும்போது, போட்டியாளர்கள் தாங்கள் சுவாரசியத்தை கூட்டுவதற்காக செய்யும் சிறு சிறு வேலைகள் தற்போது பிரச்சனைகளை தொடங்கியிருக்கிறது. அமைதியாக இருந்த போட்டியாளர்கள் கூட தற்போது தங்களுடைய சுயரூபத்தைக் காட்டத் தொடங்கி விட்டார்கள் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆரம்பத்தில் அனைவராலும கொண்டாடப்பட்ட பாவனி தற்போது இருப்பிடம் சண்டை போடுவதை பார்த்து இதில் யார் பக்கம் தப்பு என்று தெரியவில்லையே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கடந்த வார பிரச்சனை
பாவனி ரெட்டி சின்னத்திரை நடிகையாக பலருக்கும் பரிச்சயமான நபராக இருந்தாலும் ,இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மேலும் பிரபலம் அடைந்து விட்டார். இவருக்கு ஆரம்பத்தில் அதிகமான ரசிகர்கள் பேன்ஸ் பேஸ்களை உருவாக்கி இவருக்கு சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கடந்த வாரம் இவருக்கும் தாமரைக்கும் நடந்த பிரச்சனையை பார்த்த பிறகு பலரும் இவரை திட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர் செய்யும் செயல்கள் சிலருக்கு வெறுப்பு ஏற்றுவதாக இருக்கிறது என்றும் கூறிவருகின்றனர்.

சண்டை புரியவில்லையே
இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டின் முழு ஆளுமையை பெற்ற நிரூப்பிடம் கோபமாக கத்தி பேசிக்கொண்டிருக்கும் முதல் ப்ரமோவை பார்த்ததும் ரசிகர்கள் இதில் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. என்ன சண்டை என்று தெளிவாக காட்டவில்லை என எடிட்டர் மீது குறை கூறிக் கொண்டிருந்தாலும், தற்போது அதிகமானோர் பாவனியை குறை கூறி வருகின்றனர். பாவனி அதிகமாக கோபப்படுவதும், தன்னை நியாயப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருந்து, ரசிகர்கள் தன்னை தப்பாக நினைத்துவிட கூடாது என்று செயல்பட்டு வருகிறார் என்று பலர் கூறி வருகின்றனர்.

நிரூப் டார்கெட் பாவனியா
முதல் ப்ரமோவில் தூங்காத ஆட்களை வெளியே போகச் சொல்லுங்க என்று பாவனி கூறவும், அதற்கு நீ வெளியே சென்று டிசைட் செஞ்சிட்டு அதற்கு பிறகு வந்து இதை தூங்க வச்சுக்கோ என்று நிரூப் கூறியிருக்கிறார். இதற்கு ஒரு ரீசன் கொடுத்து தூங்க வைங்க வேண்டுமென்று சொல்லி இருக்கிறார் என்று இவர் கூற ரீசன் சரியா குடுங்க சார் என்று பாவனி வெடுக்கு என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு நிரூப் காரசாரமான பதிலளித்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரின் சண்டையை பார்த்ததும் ரசிகர்கள் இன்னைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்பவம் இருக்கு போல, நெருப்பின் டார்கெட் அக்ஷரா இல்லை பாவனி தான் என்று பலர் கூறி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications