பாவனி, அபிநய் பற்றி முதல் முதலில் புரணி பேசியது...பிரியங்கா தானா??ஆதாரத்தை எபிசோடோடு வெளியிடும் ரசிகர்கள்
சென்னை: பாவனி மற்றும் அபிநய் பற்றி ராஜு பேசியது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த நிலையில் பிரியங்கா தான் முதன்முதலில் இதைப் பற்றி பேசி இருக்கிறார் என்று ரசிகர்கள் ஆதாரத்தை வெளியிட்டு வருகின்றனர்.
ராஜுவின் ரசிகர்கள் பிரியங்காவின் செயல்தான் இந்தப் பிரச்சனைக்கு ஆரம்பம் என்று எபிசோடோடு நிரூபித்து வருகின்றனர்.
இதுவரைக்கும் ராஜுவின் மீது கோபத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது அட இவங்களுமா என்று குழப்பத்தில் இருக்கின்றனர்.

ராஜுவின் ரசிகர்களின் கேள்வி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில நேரங்களில் நடக்கும் சாதாரண செயல்கள் கூட பலருக்கும் பேசு பொருளாக மாறி விடும். அந்த மாதிரி தான் தற்போது டாஸ்கில் எதார்த்தமாக ராஜு பேசிய வார்த்தை பலருடைய மனதையும் பாதித்து விட்டது. ஆனால் அவர் பேசியதற்கு அவருடைய ரசிகர்கள் இந்த வார்த்தையை ராஜு பேசியது தவறு என்றால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் முதுகுக்குப் பின்னாடி பேசிக்கொண்டு இருப்பது சரியா என்று ராஜுவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

பாட்டில் டாஸ்க்
கடந்த வாரம் நடைபெற்ற ட்ரூத் ஆர் ட்டேர் நிகழ்ச்சியில் ராஜு அபிநயிடம் நீ பாவனியை காதலிக்கிறாயா?? என்று கேட்டுவிட்டார். இது அங்கு இருந்தவர்களை, மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. திருமணம் முடிந்த நபர்களை பற்றி இப்படி ஒரு வார்த்தை கேட்கலாமா என்று அனைவரும் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் ராஜுவுக்கு தான் செய்தது தவறு என்று புரிந்து இருந்தாலும், எதார்த்தமாக அதை பேசிவிட்டேன் என்று தன் தரப்பு நியாயங்களை கூறிக் கொண்டிருந்த நேரத்தில் அவரிடம் நீ செய்தது தவறு என்று முகத்துக்கு நேராக குறை கூறிக் கொண்டு இருந்தவர்களில் பிரியங்காவும் ஒருவர். ஆனால் ராஜு முகத்துக்கு நேராக பேசிய விஷயத்தை பிரியங்கா யாருக்கும் தெரியாமல் நிரூப்பிடம் பேசிக் கொண்டிருந்தார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர் .

13-வது எபிசோட்டில்
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நாட்களில் அபிநய் மற்றும் பாவனியை பற்றி போட்டியாளர்களுக்கு ஒரு சில கருத்துக்கள் தோன்றியிருக்கிறது. அதைத்தான் பிரியங்கா 13வது எபிசோட்டில் நிரூப்பின் கையில் எழுதி அவரிடம், அவள் கேட்டு விட்டாள் என்று கூறியிருக்கிறார். ஆனால் அது யாருக்கும் முதலில் தெரியாமலும், புரியாமலும் இருந்தது. பின்பு அனைவருக்கும் புரிந்து விட்டது. ஆனால் அதே பிரியங்கா தற்போது முகத்துக்கு நேராக ராஜு பேசும்போது ராஜு பேசியது தவறு என்று சொல்வது மட்டும் நியாயமா?? என்று ராஜுவின் ரசிகர்கள் பிரயங்கா அன்று நிரூப்பின் கையில் எழுதியதை குறும்படமாக வெளியிட்டு வருகின்றனர்.
Recommended Video

ராஜு வேறுவிதம் தான்
தற்போது பாவனி மற்றும் அமீர் இருவரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது க்ளோசப்பில் அபிநயை மட்டும் பிக் பாஸ் காட்டிக்கொண்டு இருப்பதைப் பார்த்து இது மட்டும் சரியான செயல்தானா??இப்படி செய்யலாமா??என்றும் பல ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பிக்பாஸ் இப்படி அபிநய் மற்றும் பாவனி பெயரைக் கெடுப்பதற்காக செய்துகொண்டிருக்கும்போது, பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் பலர் போல மனதிற்குள் வைத்துக்கொண்டு புறம் பேசாமல் நேரடியாக கேட்டுவிட்ட ராஜூ இதற்கு எவ்வளவோ மேல் என்று ராஜுவின் ரசிகர்கள் ராஜுவுக்கு ஆதரவாக ஒவ்வொரு ஆதாரங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications