தாமரையை பற்றி இசைவாணியின் பகுதி மக்கள் இப்படி தான் பேசிக் கொள்கிறார்களாம்
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் தாமரைக்கும் இசைவாணிக்கும் கடைசி நேரத்தில் ஏற்பட்ட வாக்குவாதங்கள் அனைவரும் அறிந்தது தான்.
இசைவாணிக்கு ஆதரவு கொடுத்து வந்த அவருடைய பகுதி மக்கள் தாமரையை பற்றி பேசி இருப்பது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கடைசியாக வெளியே வரும்போது தாமரைக்கு இசைவாணி அறிவுரை கூறியதை பார்த்து இசை வாணியின் ரசிகர்கள் பெருமையாக கூறி வருகிறார்களாம்.

எதிர்பார்க்காத கேரக்டராக இருக்கிறது
ஐந்தாவது சீசனில் நாட்டுப்புற கலைஞர்களின் சார்பாக தாமரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தற்போது போட்டியாளர்களை அனைவரையும் ஆட்டம் காண செய்து வருகிறார். இவர் ஒரு கிராமத்துப் பெண்ணாக இருந்தாலும் தற்போது பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி வருகிறார். இவருடைய கேரக்டரை பார்த்து இவரை திட்டி தீர்த்தாலும், பலருக்கும் இவருடைய எதார்த்தமான நடிப்பு இல்லாத குணம் பிடித்துவிட்டது என்றும் கூறிவருகின்றனர். என்னதான் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினைகள் ஏற்பட்டு இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறும்போது தாமரையிடம் நல்ல விதமாகத்தான் இசைவாணி பேசிவிட்டு வந்தாராம்.

இசைவாணியே சொல்லிவிட்டாரே
இசைவாணியிடம் அவருடைய பகுதி மக்கள் தாமரையைப் பற்றி நல்ல விதமாக தான் பேசி வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் ரொம்பவே பாவம் வெகுளியாக இருக்கிறார் என்றும் கூறிவருகிறார்கள் என்று கூறியிருக்கிறார். நானும் அதை தான் நினைக்கிறேன், சில நேரங்களில் முகத்துக்கு நேராக அவர் பேசி விடுவதால் பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் எனக்கு கூட ஒரு சில நேரங்களில் அப்படித் தோன்றியது ஆனால் இவர் எந்த நடிப்பும் இல்லாமல் இருக்கிறார் என்றுதான் நான் வெளியில் வரும்போது பேசிக் கொண்டு வந்தேன் என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து கொண்டு வருகிறது
இசைவாணி நிகழ்ச்சியை விட்டு வெளியேறும்போது தாமரையிடம் நல்லவிதமாகப் பேசி விட்டு வந்ததைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் நீ நல்ல காரியம் செய்தாய் என்று கூறியிருக்கிறார்கள். தாமரைச்செல்வி ஆரம்பம் முதலே ஒரு சிலருடன் கருத்து வேறுபாடு காரணமாக காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். அது முதல் முதலில் நமிதா மாரிமுத்துவிடம் தொடங்கி தற்போது பிரியங்காவிடம் வந்து நிற்கிறது. ஒவ்வொரு ப்ரமோவிலும் தாமரைச் செல்வியின் அடாவடியான சண்டைகள் இடம்பெற்று வருகிறது.

இதை எதிர்பார்க்கலயே
கண்ணாடி டான்ஸ்கில் இசை வாணியை கடுப்பேற்றும் விதமாக தாமரைச்செல்வி நடந்துகொண்டது பலருக்கும் என்னதான் நடக்குது என்று சொல்லும் படியும் தான் இருந்துள்ளது. ஆனால் விளையாட்டை விளையாட்டாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று இப்போது பல ரசிகர்கள் தாமரை செல்விக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் போது என்ன தான் இவருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு தாமரைச்செல்வி பற்றி நல்ல விதமாக இசைவாணி கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications