மதுரை வீரன் தானே.. மதுரை முத்து குறித்து பரவும் பரபர தகவல்.. உண்மையா? நல்லா தான் இருக்கும்ணே!
சென்னை : தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் பட்டிமன்றங்கள் காமெடி ஷோக்கள், தற்போது திரைப்படங்கள் வரை உயர்ந்துள்ள மதுரை முத்து குறித்து தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. உண்மையிலேயே அது உண்மைதானா என பலரும் அவரை கேட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இருக்கும் தற்போது நகைச்சுவை நடிகர்களை அனைவராலும் அறியப்பட்டவர் என்றால் கண்டிப்பாக மதுரை முத்துவை குறிப்பிடலாம் அந்த அளவுக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் அசத்தி வருகிறார்.
மிமிக்ரி, குழு நாடகம் என தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருந்த நிலையில் தனியாக நின்று காமெடி செய்ய முடியும் என நிரூபித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் மதுரையைச் சேர்ந்த மதுரை முத்து.

மதுரை முத்து
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பிரபல தொலைக்காட்சிகளான சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு, காமெடி ஜங்ஷன், ராஜு வூட்ல பார்ட்டி, குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு சாம்பியன்ஸ், உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று கலக்கினார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சன் டிவியில் இருந்த இவர் அதன் பிறகு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

காமெடி நிகழ்ச்சி
நகைச்சுவை பேச்சாளர் மட்டுமல்லாது பட்டிமன்ற நிகழ்ச்சிகளிலும் நடுவராக அசத்தி வருகிறார் மதுரை முத்து. தனது காமெடி பயணத்தின் அடுத்த கட்டமாக திரைப்படங்களிலும் நடித்து வரும் மதுரை முத்து மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள அரசப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் இவருக்கு லேகா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். மனைவி லேகா 2016 ஆம் ஆண்டு கார் விபத்தில் பலியான நிலையில் மகளுக்காக தனது மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தீயாய் பரவும் தகவல்
மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்த அவர் அதன் பிறகு அதைவிட உத்வேகத்துடன் கம்பேக் கொடுத்தார். குழந்தைகளுக்காகவே திருமணம் செய்து கொண்டேன் என பல மேடைகளில் உருக்கமாக பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில் தான் மதுரை முத்துவின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவ்வாறு அது உண்மையாக இருந்தால் இனி தினமும் இரவு காமெடி அதகளம் தான் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பிக் பாஸ் 6 சீசன்
அது என்னவென்றால் விஜய் டிவியின் பலரின் ஆதரவை பெற்று 5 சீசன்கள் முடிந்த நிலையில், விரைவில் தொடங்கவுள்ள பிக் பாஸ் சீசன் 6ல் மதுரை முத்து கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் பல தகவல்கள் உலா வருகின்றன. மற்ற பங்கேற்பாளர்களை விட விஜய் டிவி நட்சத்திரங்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால் இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்கின்றனர். சிலரோ அண்ணன் மதுரை முத்து வந்தால் இனி ஜாலி தான் என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications