ஐக்கி பெர்ரியின் அசத்தலான வெற்றி.. ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்... இது வேற லெவல் திறமை
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஐக்கி பெர்ரி சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்து உள்ளார்.
தன்னுடைய பாடல்கள் மூலமாக இவருடைய திறமை பலருக்கும் தெரிந்துள்ளது.

தஞ்சாவூரு பொண்ணு தாங்க...
பன்முகத் திறமை கொண்ட ஐக்கி பெர்ரி ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவரைப் பார்த்ததும் பல ரசிகர்கள் இவர் வெளிநாட்டில் சேர்ந்தவராக இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவர் ஒரு தஞ்சாவூரை சேர்ந்த பெண் என்பது பின்புதான் பலருக்கும் தெரிந்தது. ஆரம்பத்தில் இதை நம்புவதற்கு கூட பல ரசிகர்கள் இயலவில்லை என்று கூறியுள்ளனர். அந்த அளவிற்கு தன்னுடைய உடை முதல் அலங்காரம் வரை அனைத்தையும் டோட்டலாக வெளிநாட்டு சாயலில் மாற்றியிருந்தார்.

வெற்றிக்கு காரணம் விடாமுயற்சி
ஒரு மருத்துவர் ஆகவும், ராப் பாடகராகவும், டான்ஸராகவும், மாடலிங் பெண்ணாகவும், தன்னால் எல்லாத்துறையிலும் கலக்க முடியும் என்று இவர் நிருபித்துக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஏற்பட்ட தன்னுடைய காதல் தோல்வியால் இவர் துவண்டு போய்விடாமல் தன்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார். இவருக்கு குடும்பத்திலிருந்து எந்த ஒரு சப்போர்ட் கிடைக்காவிட்டாலும் தன்னுடைய விடாமுயற்சியால் இவர் ஜெயித்து கொண்டிருக்கிறார்.

ஐக்கியின் வெற்றிகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான நெகட்டிவ் கமெண்டுகள் பெறாமல் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாளர்களில் ஒருவராக ஐக்கி பெர்ரி இருந்து வருகிறார். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே அதிகமான ரசிகர்கள் இருந்தனர். இவருடைய க்யூட்டான நடவடிக்கை பலரையும் கவர்ந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இவர் இவருடைய வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது சமூக வலைத்தளத்தில் ஐக்கியின் வெற்றிகள் தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இண்டிபெண்டன்ஸ் மியூசிக் ராணி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே ராப் பாடகியாக இருக்கும் ஐக்குக்கு தற்போது அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு ஏலே எனும் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து வருகின்றனர். இவருடைய பாடலைப் பார்த்து ரசிகர்கள் பலர் இண்டிபெண்டன்ஸ் மியூசிக் ராணி என்று இவரை அழைத்து வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் இவருடைய பாடலுக்கு அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் இவர் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications