ஞாயிற்றுக்கிழமை வசூலில் மாஸ் காட்டிய ஜெயிலர் 2! 4 நாட்களில் எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படம் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. முதல் நாளில் கிடைத்த பிரம்மாண்டமான வசூலுக்கு பிறகு 2வது நாளில் சற்று சரிவை சந்தித்த படம், அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை கிடைத்த வசூல் இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் டைகர் முத்துவேல் பாண்டியனாக நடித்திருக்கும் இந்த படத்துக்கு, வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் சுமார் ரூ.59.70 கோடி நெட் வசூல் கிடைத்ததாக கணிக்கப்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமையான இரண்டாவது நாளில் வசூல் ரூ.37.10 கோடியாக குறைந்தது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் படம் எப்படி வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஜெயிலர் 2 வசூல் நிலவரம்
ஆனால், சனிக்கிழமையில் வசூல் மீண்டும் உயர்ந்து ரூ.47.25 கோடியை தொட்டது. அதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.55.85 கோடி நெட் வசூல் கிடைத்துள்ளதாக Sacnilk தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது, சனிக்கிழமையைவிட ஞாயிற்றுக்கிழமை வசூல் சுமார் 18 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், வார இறுதி நாட்களில் வசூல் தொடர்ந்து அதிகரித்திருப்பதுதான்.
4வது நாள் வசூல்
முதல் நாளில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் முதல் காட்சிகளுக்கான வரவேற்பும் ஓப்பனிங்கை கொடுத்திருக்கும். ஆனால், அதற்கு பிறகும் சனி, ஞாயிறு நாட்களில் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது படத்தின் வசூலுக்கு உதவுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்தியாவில் ரூ.55 கோடிக்கு மேல் வசூல் வந்திருப்பது படத்தின் பாக்ஸ் ஆபீஸ் பயணத்தில் முக்கியமான விஷயமாக இருக்கிறது.
இப்போது 4 நாள் வசூல் கணக்கை பார்த்தால், இந்தியாவில் படத்தின் நெட் வசூல் சுமார் ரூ.199.90 கோடி. இந்தியாவின் மொத்த கிராஸ் வசூல் ரூ.234.25 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலும் படம் நல்ல வசூலை பெற்றுள்ள நிலையில், அங்கு கிடைத்த மொத்த கிராஸ் வசூல் சுமார் ரூ.190 கோடி. இதையெல்லாம் சேர்த்தால் ஜெயிலர் 2 படத்தின் உலகளாவிய கிராஸ் வசூல் ரூ.424.25 கோடியை எட்டியிருக்கிறது.
அதிகரிக்கும் வசூல்
அதாவது, படம் வெளியாகி 4 நாட்களிலேயே உலகளவில் ரூ.400 கோடி வசூல் மைல்கல்லைக் கடந்துள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. இது ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகமான செய்திதான். இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். வார இறுதி முடிந்துவிட்டதால், இன்று திங்கட்கிழமை முதல் வசூல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதுதான். ஆனால் இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. வார நாட்களில் வசூல் எந்த அளவுக்கு நிலைத்து நிற்கிறது என்பதை வைத்துத்தான் படத்தின் அடுத்தடுத்த பாக்ஸ் ஆபீஸ் பயணத்தை ஓரளவுக்கு கணிக்க முடியும். ஞாயிற்றுக்கிழமை வசூல் அதிகரித்திருப்பது நல்ல அறிகுறியாக இருந்தாலும், அந்த வேகம் தொடர்ந்து நீடிக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். மொத்தத்தில், ஜெயிலர் 2 படத்துக்கு முதல் நாளில் கிடைத்த பெரிய ஓப்பனிங்கை தொடர்ந்து, வார இறுதி நாட்களிலும் வசூல் உயர்ந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
