Jailer 2: டீக்கடை சீன் வேற லெவல்! ஜெயிலர் 2 பார்த்த ரசிகர்கள்… ரஜினிகாந்தை கொண்டாடும் ட்விட்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் 2 படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் நிலையில், படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், இரண்டாம் பாகம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்தது. இப்போது வெளியாகும் விமர்சனங்களைப் பார்த்தால், பல ரஜினி ரசிகர்கள் படத்தைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக, ரஜினியின் மாஸ் காட்சிகள், யோகி பாபுவுடன் வரும் காமெடி, அனிருத்தின் பின்னணி இசை என பல விஷயங்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதிலும் டீக்கடை காட்சி வேற லெவலில் இருப்பதாகச் சிலர் பதிவிட்டு வருவது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Jailer 2 Rajinikanth Nelson Yogi Babu review

கூஸ்பம்ப்ஸ் வருதே

ஜெயிலர் 2 படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், "வாத்தா! நெல்சா டேய்... எனக்கே இப்படி கூஸ்பம்ப்ஸ் வருதே! என்னடா பண்ணி வச்சிருக்கீங்க!" என்று உற்சாகமாகப் பதிவிட்டுள்ளார். அதோடு, "தலைவர் நிரந்தரம்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு ரஜினி ரசிகர்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, படத்தில் வரும் மாஸ் தருணங்கள் தியேட்டரில் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகின்றன என்பதை காட்டும் வகையில் ரசிகர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

மற்றொரு ரசிகர், முதல் பாகத்தின் மிடுக்கும் நக்கலும் இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது, ரஜினி அதிக வசனங்கள் பேசாமல், கண் அசைவுகளிலேயே ரசிகர்களை உற்சாகப்படுத்துவதாகவும், யோகி பாபுவுடன் வரும் காமெடி காட்சிகள் வயிறு வலிக்கச் சிரிக்க வைப்பதாகவும் பாராட்டியுள்ளார். நெல்சனின் டார்க் காமெடி பாணி, அதிரடி காட்சிகளுக்கு இடையே நல்ல பொழுதுபோக்கை கொடுப்பதாகவும், அனிருத்தின் பின்னணி இசை மாஸ் காட்சிகளுக்கு மேலும் ஸ்ட்ராங்காக இருப்பதாக அந்த விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது. ரஜினி ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு திருவிழா அனுபவமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Jailer 2 Rajinikanth Nelson Yogi Babu review

இடைவேளை பிளாக்

ஜெயிலர் 2 படத்தின் முதல் பாதி குறித்து வெளியாகும் பதிவுகளில் டீக்கடை காட்சி தனியாகப் பேசப்பட்டு வருகிறது. அந்தக் காட்சி வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல், இடைவேளைக்கு முன்பாக வரும் மாஸ் பகுதியும் சிலருக்கு மிகவும் பிடித்திருப்பதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. ரஜினியின் கிரீன் ப்ரெசென்ட் நெல்சனின் நகைச்சுவை பாணியும் இணைந்திருப்பதால், ரசிகர்களுக்கு உற்சாகமான தருணங்கள் கிடைப்பதாகப் பல பதிவுகள் தெரிவிக்கின்றன.

Jailer 2 Rajinikanth Nelson Yogi Babu review

குறிப்பாக, யோகி பாபுவின் வசனங்களும் நகைச்சுவை காட்சிகளும் படத்தின் பொழுதுபோக்கு அம்சத்துக்கு உதவுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். படத்தில் இடம்பெறும் ஒரு வசனமும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. வில்லன், "உன்னைவிட நான் பெரிய இடத்துல இருக்கேன்" என்று சொல்ல, அதற்குப் பதிலாக ரஜினி, "நீ போன இடத்துக்கு என்னால போக ஒரு நாள் ஆகாது... எனக்கு அதுக்கெல்லாம் ஆசை இல்லை" என்று சொல்வதாக ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். இந்த வசனம் ரஜினியின் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

Jailer 2 Rajinikanth Nelson Yogi Babu review

யோகி பாபு வரும் நகைச்சுவை பகுதியிலும் சிரிப்புக்கு குறைவில்லை என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இப்படியான வசனங்களும் காட்சிகளும்தான் படத்தின் மீதான ஆரம்பகட்ட உற்சாகத்தை அதிகரித்திருக்கின்றன.

Jailer 2 Rajinikanth Nelson Yogi Babu review

நெகட்டிவ் விஷயம்

ரசிகர்களில் பலர் படத்தைப் பாராட்டி வந்தாலும், எல்லோருடைய கருத்தும் ஒரே மாதிரியாக இல்லை. சிலர் முதல் பாதி மெதுவாக நகர்வதாகவும், சில காட்சிகள் பழக்கப்பட்ட பாணியில் இருப்பதாகவும் விமர்சித்துள்ளனர். இடைவேளைப் பகுதி எதிர்பார்த்த அளவுக்கு ஆச்சரியமாக இல்லை என்ற கருத்தும் சில பதிவுகளில் இடம்பெற்றுள்ளது.

Jailer 2 Rajinikanth Nelson Yogi Babu review

முதல் ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியனாக ரஜினி காட்டிய அதிரடி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதே கதாபாத்திரத்தை மீண்டும் பெரிய திரையில் பார்ப்பதற்காகவே பலரும் காத்திருந்தனர். இப்போது வெளியாகியுள்ள ஆரம்பகட்ட விமர்சனங்களில், ரஜினியின் மாஸ் காட்சிகளும் நெல்சனின் காமெடியும் அனிருத்தின் இசையும் ரசிகர்களுக்குப் பிடித்த அம்சங்களாகத் தெரிகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+