ஜனநாயகன் இல்ல ஜவ்வு நாயகன்.. கதை இதுதான்! ஓட கூட முடியல... சாட்டை துரைமுருகன் கலாய் ரிவ்யூ
சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக உருவான ஜனநாயகன் திரைப்படம் நேற்று பிரமாண்டமாக தியேட்டரில் ரிலீஸ் ஆனது. கடந்த ஏழு மாதமாக இந்த படத்திற்காக காத்திருந்த ரசிகர்கள் இதை திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். ஆனால் இந்த படத்தை பார்த்த சாட்டை துரைமுருகன் பேசியது சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ஜனநாயகன் படம் எப்படி இருக்கிறது? அதில் என்னவெல்லாம் குறை என்பது பற்றி அவர் சொல்லி இருக்கிறார்.
நேற்றில் இருந்து சோசியல் மீடியா முழுக்க ஜனநாயகன் படத்தைப் பற்றிய விமர்சனங்களும் அந்த படத்தின் காட்சிகளும் தான் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. twitter பக்கத்தில் போகவே வேண்டாம் அங்கே ஜனநாயகன் படத்தில் இண்ட்ரொடக்ஷன் காட்சியை தான் போட்டு தலைவா... என்று கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.
ஜனநாயகன் ரசிகர்கள் கொண்டாட்டம்
இதுவரைக்கும் விஜய் படத்தில் வந்ததை விடவும் இந்த படத்தில் டைட்டில் கார்டு தான் ஒர்த் என்று சொல்லி வருகிறார்கள். இப்படி விஜய் ரசிகர்கள் எல்லோரும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆரம்பத்தில் இருந்தே விஜயை கலாய்த்து கொண்டிருக்கும் சாட்டை துரைமுருகன் என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்த்தால் அவர் வழக்கம் போல ஜனநாயகன் படத்தையும் கலாய்த்து வைத்திருக்கிறார்.

சாட்டை துரைமுருகன் ஜனநாயகன் ரிவ்யூ
இதனால் விஜய் ரசிகர்கள் அவரை திட்டி வருகிறார்கள். ஆனால் விஜய்க்கு பிடிக்காதவர்கள் இந்த வீடியோக்களை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் சாட்டை துரைமுருகன் பேசும்போது, ஜனநாயகன் படத்தின் கதை என்னென்ன 50 லட்சம் பொம்மையை தமிழ்நாட்டுக்குள் வில்லன் அனுப்பி வைக்கிறார். அந்த 50 லட்சம் பொம்மைகளும் 50 லட்சம் துப்பாக்கி இருக்கிறது. அதை பார்த்ததும் கதாநாயகி மமீதாவிற்கு பயம் வருகிறது.
அதற்கு காரணம் என்னவென்றால் மமீதா சின்ன பொண்ணாக இருக்கும்போது ஒரு பொம்மைக்குள் துப்பாக்கி இருப்பதை பார்க்கிறாங்க. அதே துப்பாக்கியால தான் அம்மா இறந்து போறாங்க. அதனால அம்மா சாவுக்கு காரணமான துப்பாக்கியை பார்த்ததும் மமீதாவிற்கு பயம் வந்துவிடுகிறது. அந்த பயத்தை யார் போக்குவாங்க? என்ற கேள்வி தான் எல்லாருக்கும் வருகிறது.

ஜனநாயகன் கதை
அதே போல இந்த துப்பாக்கி கலாச்சாரத்தால் இந்து, முஸ்லிம் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் மக்கள், யாரு வந்து இந்த பிரச்சனைகளை எல்லாம் சரி பண்ணுவாங்க என்று காத்து இருக்காங்க. அந்த நேரத்தில் தான் விஜய் அங்க வராரு, "ராவணன் மகன்டா..." என்ற பாட்டை போடுறாங்க. அதை பார்க்கும்போது நமக்கு அழுதுகிட்டே பாடுற மாதிரி தான் தோணும். காரணம் படம் முழுக்க ஜனநாயகன் இல்ல ஜவ்வு நாயகனாகத்தான் இருக்கிறது.
எல்லா இடத்திலும் ரத்தம், தெரிக்குது, தல துண்ட போகுது, கை துண்டாக பறக்குது இதையெல்லாம் பார்க்கும் போது நம்ம மனசும் துண்டாக போகுது. என்ன விடுங்கடா வெளியே போயிடலாம்னு நெனச்சாலும் வெளியேவும் வர முடியாது. அதனாலதான் மூணு மணி நேரம் அந்த அறுவையை இருந்து பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்துடுச்சு.
ரசிகர்கள் கருத்து
இந்த படத்தைப் பார்த்த மினிஸ்டர் எல்லாம் அழுதாங்க, அத பார்க்கும்போது எல்லோரும் ரொம்ப ஃபீல் பண்ணிட்டாங்கன்னு நினைச்சா... அதெல்லாம் இல்ல என்ன இப்படி படம் எடுத்து வச்சிருக்காங்களே என்று அழுது இருப்பாங்க என்று நெகட்டிவ் ஆகவே பேசி இருக்கிறார். இவர் இப்படித்தான் பேசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தாலும் இவர் இப்படி பேசியதையும் சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
Jana nayagan Review: ஜனநாயகன் ரிவ்யூ.. பகவந்த் கேசரிதானா? விஜய்யின் புது அவதாரமா? முழு படம் எப்படி இருக்கு?
எப்போதும் படங்களை நெகட்டிவாகவே ரிவ்யூ செய்து கொண்டிருக்கும் ப்ளூ சட்டை மாறன் கூட இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்யூ கொடுத்திருக்கிறார். ஆனால் சாட்டை துரைமுருகன் படத்தைப் பற்றி சொன்ன விஷயங்கள் முற்றிலும் தவறு என்று விஜய் ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். சரி நீங்க ஜனநாயகன் பாத்துட்டீங்களா? இல்ல சோசியல் மீடியாவில் வரும் கமெண்ட் வைத்து நீங்க என்ன நினைக்கிறீங்க.


Click it and Unblock the Notifications
