ஜிகு ஜிகு உடையில் இசைவாணி நாட்டிய ராணி ஆக மாறிய தருணம்... மிரண்டு போன ரசிகர்கள்
சென்னை:இசைவாணியின் ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் மனதும் ஆடி போய்விட்டது.
Recommended Video
பாடகியாக தெரிந்த இசைவாணி தற்போது டான்ஸில் பட்டையைக் கிளப்புகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இரவு நேரத்தில் ஜிகுஜிகு உடையில் இவருடைய தேவதை போன்ற கெட்டப்பை பார்த்து சிலர் அப்படியே மெய்மறந்து போய் இருக்கிறார்கள்.

ரொம்ப பிஸி தான்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிஸியாக இருந்து வரும் இசைவானி செய்த செயல் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பலபேருக்கு இசைவாணியின் லேட்டஸ்ட் கெட்டப்ப பார்த்ததும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். சூம் பண்ணி பார்த்த பிறகுதான் இசைவாணி என்று கண்டுபிடிக்க முடிந்தது என கூறி வருகிறார்கள். லேட்டஸ்ட் கெட்டப்பில் பாட்டு பாடி ஆட்டம் போட்டு அசத்தி வரும் இசை வாணியை பார்த்ததும் ரசிகர்கள் பலர் மெய்மறந்து போய் இருக்கிறார்களாம்.

திறமை மட்டும்தான் நம்பிக்கை
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சிலருக்குதான் நல்ல பிளாட்பாரம் கிடைத்து விடும். ஒரு சிலர் இருந்த இடம் தெரியாமல் இருந்து வருகிறார்கள். ஆனால் இசைவாணி இதில் தன்னுடைய திறமையை மட்டுமே நம்பி வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணாகத்தான் இருந்து வருகிறார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இவர் காண பாடகியாக பலருக்கும் பரிச்சயமானவர் தான். பாடகியாக அறிமுகமாகி திரைப்படங்களில் பின்னணி பாடகி ஆகி இருக்கிறார். இவருடைய குரல் அனைவருக்கும் பிடித்ததாக இருந்தாலும் பலருடைய ஃபேவரட்டாக இருந்து வருகிறது. கானா பாடல் மூலம் பல கருத்துக்களை கூறிவரும் இவருக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எது உண்மை என தெரியவில்லையே
இயக்குனர் பா ரஞ்சித் வழிவந்த பாடகியாக இவர் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய குரு மற்றும் அண்ணனாக நினைத்துக்கொண்டிருக்கும் ரஞ்சித் பெருமை சேர்க்கும் விதத்தில் இவர் நடந்து கொள்வார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இவர் பல நேரங்களில் பாடல் எதுவும் பாட வில்லை என்று இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அந்த வீட்டிற்குள் இருக்கும் போது தன்னுடைய திறமையை நிரூபிக்கும் விதமாக பல்வேறு பாடல்களை பாடி கொண்டிருந்தேன் என்று அவர் கூறியுள்ளார். தற்போது இந்த நிகழ்ச்சியை விட்டு இவர் வெளியேறி வெளிவந்தாலும் தன்னுடைய திறமையை மீண்டும் காட்ட தொடங்கி விட்டார்.

கலக்கல் டான்ஸ்
மார்கழி மாதத்தில் மதுரையில் நடக்கும் நாட்டுப்புற நிகழ்ச்சியில் கானா பாடலையும் சிறப்பாக ஒலிக்க செய்ய வேண்டும் என்ற பா.ரஞ்சித்தின் குழுவில் இசை வாணியும் இடம் பிடித்து பாட்டு பாடி அசத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் பல பாடல்களையும் தற்போது இவர் பாடியுள்ளார். அது விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் இவர் ஜிகு ஜிகு வென்ற ப்ளூ கலர் உடையில் டூ..டூ..டூ என்னும் பாட்டுக்கு அழகாக ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோக்களை இசைவாணி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரப்பி வருகின்றனர். அதை பார்த்து பல ரசிகர்கள் இசைவாணி நடன ராணியாக மாறிவிட்டாரா??என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications