மாதம்பட்டி ரங்கராஜனின் அடுத்த ரொமான்ஸ் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிறிஸ்டில்லா! கேப்ஷனை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்லா விவகாரம், மகளிர் ஆணையத்தின் விசாரணை, ரங்கராஜின் மறுப்பு அறிக்கை எனப் பல்வேறு திருப்பங்களைக் கண்டு வருகிறது. "மிரட்டலின் பேரிலேயே தன்னைத் திருமணம் செய்து கொண்டதாகவும், குழந்தையை ஏற்றுக் கொள்ளவில்லை" என்றும் ரங்கராஜ் கூறியிருந்த நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஜாய் கிறிஸ்டில்லா ஒரு ரொமான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Madhampatty Rangaraj vijay tv cook with comali

ஜாய் கிறிஸ்டில்லா புகார்

ஏற்கெனவே திருமணமான ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஜாய் கிறிஸ்டில்லா காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். சமீபத்தில் நடந்த மகளிர் ஆணைய விசாரணையின்போது, ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்ததையும், அவரது குழந்தை தன்னுடையது என்பதையும் ஒப்புக் கொண்டதாக ஜாய் கிரிஸில்டா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

ரங்கராஜின் மறுப்பு

ஆனால், இந்த அறிவிப்புக்குப் பதிலளித்த ரங்கராஜ், "மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை" என்று மறுத்தார். மேலும், "நான் ஜாய்யை தன்னிச்சையாகத் திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை" என்றும், "இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது" என்றும் கூறினார்.

ரங்கராஜ், தான் ஒருபோதும் டி.என்.ஏ பரிசோதனையை மறுத்ததில்லை என்றும், குழந்தை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அதன் வாழ்நாள் செலவை ஏற்றுக்கொள்வதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

ஜாய் கிரிஸில்டாவின் பதில்

ரங்கராஜின் மறுப்பு அறிக்கைக்கு பிறகு பேசிய ஜாய் கிறிஸ்டில்லா, "நான்கு சுவர்களுக்குள் ஒரு மாதிரியும், வெளியே வந்து வேறு மாதிரியும் பேசுகிறார்" என்று குற்றம் சாட்டியிருந்தார். "உண்மையை நிரூபிக்க நானே டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கலாம் என்று 4 முறை வற்புறுத்தினேன். ஆனால் ரங்கராஜ் 'வேண்டாம், அது என் குழந்தை தான்' என்று ஒப்புக்கொண்டார்" என்று ஜாய் கிரிஸில்டா வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

ஆதாரங்கள்

"அவரை மிரட்டி கல்யாணம் பண்ணதா சொல்கிறார். ஆனால், நான் வெளியிட்ட போட்டோவில் அவர் கோபமாகவோ, சோகமாகவோ இருக்கமாட்டார். 'லவ்யூ பெண்டாட்டி, உன் மடியில் தான் நான் சாவேன்' என்று பல மெசேஜ்கள் அனுப்பியுள்ளார்" என்றும் ஜாய் கிரிஸில்டா கூறியிருந்தார்.

வைரலாகும் ரொமான்ஸ் வீடியோ

தற்போது, ரங்கராஜ் வெளியிட்ட அறிக்கையின் 'மிரட்டல்' கூற்றுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜாய் கிறிஸ்டில்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் மாதம்பட்டி ரங்கராஜ், "என் பொண்டாட்டி! நீ அவ்வளவு அழகு சொல்ல வார்த்தையே இல்லை. உன்னைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம். நான் உன்னை மிஸ் பண்றேன். சீக்கிரமா வந்துரு. நான் ஷூட்டுக்கு ரெடியா இருக்கிறேன்" என்று மிகவும் ரொமான்ஸாகப் பேசியுள்ளார்.

ஜாயின் கேள்வி

இந்த வீடியோவைப் பகிர்ந்த ஜாய் கிறிஸ்டில்லா, "இந்த வீடியோ என்னை மிரட்டலின் பெயரில் அனுப்பியதா? மிஸ்டர் ஹஸ்பேண்ட் மாதம்பட்டி ரங்கராஜ்" என்றுப் பதிவிட்டுள்ளார். மேலும், "மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க - இதுல லவ்வ்ல பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா? கேட்கிறவன் கேனையனா இருந்தா, கேப்பையில் நெய் வைத்தியம் சொல்ற மாதிரி இருக்கு" என்று கேலியும் கோபமுமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

ரங்கராஜ் மிரட்டல் என்று மறுத்த நிலையில், அவர் ரொமான்ஸாக பேசிய இந்த வீடியோ, இந்த விவகாரத்தில் ரங்கராஜின் முரண்பாடுகளைத் தெளிவாக எடுத்துக் காட்டுவதாக உள்ளது. சட்டரீதியான இந்தச் சண்டை எந்த முடிவை எட்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+