மணிரத்தினத்தால் மட்டுமே முடியும்... அன்றைக்கே வந்திய தேவனாக கணித்த ஆண்டவர்
சென்னை; பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரஜினி மற்றும் கமல் முன்னிலையில் நேற்று ரிலீசான இந்த சமயத்தில், "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தை குறித்து 1989 ஆம் ஆண்டு கமல் கொடுத்துள்ள பேட்டி சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
சினிமா உலகின் என்சைக்ளோபீடியா என சொல்லப்படும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் சிகரம் தொட்ட கமல் மெய்யாலுமே ஆண்டவர் தான் என்று கமல் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பட்ட சினிமா ரசிகர்களும் புகழ்ந்து வருகின்றனர்.

நாவலை படமாக்க முயற்சி;
கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" நாவலின் சுவாரசியத்தை கருதி, அதனை படமாக்க பல இயக்குனர்களும், நடிகர்களும் முயன்றிருக்கின்றனர். அந்தக் காலத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர், அவர்கள் துவங்கி தற்பொழுது மணிரத்தினம் வரை பலர் அதற்கான முயற்சி மேற்கொண்டனர். இயக்குனர் மணிரத்தினம் இரண்டு மூன்று முறை படமாக்கும் முயற்சி மேற்கொண்டு கைவிடப்பட்டு இறுதியாக தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுத்துள்ளார்.இயக்குனர் மணிரத்தினம் மற்றும் கமல் இணைந்து இப்படத்தை உருவாக்குவதை குறித்து முதலில் தோன்றிய யோசனை குறித்து கமல் கூறியுள்ளார்.

கல்கியில் பேட்டி;
தீபாவளி சிறப்பிதழ் கல்கிக்காக 29.10.89 தேதி வெளியிட்ட இதழுக்கு கமல் கொடுத்துள்ள பேட்டியில்,தமிழ் சினிமாவில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பிறகு சொல்லும் அளவிற்கு சிறப்பான சரித்திர படங்கள் எதுவும் உருவாகவில்லை. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் கூட பாண்டியனை விட பளிச்சென்று தெரிந்தவர் எம்ஜிஆர் தான். இதனால் தமிழில் ஒரு நல்ல சரித்திர படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வளர ஆரம்பித்தது. இது விஷயமாக இயக்குனர் மணிரத்னம் மற்றும் கேமராமேன் பி.சி.ஸ்ரீராம் உடன் பலமுறை விவாதித்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு விவாதத்தின் போது தான் இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்தால் என்ன..!!?? என்றார்.

மணிரத்தினம் போட்ட விதை;
மணிரத்னம் அவ்வாறு கூறும் முன்பு வரை நான் பொன்னியின் செல்வன் நாவலை படித்து ரசித்ததோடு சரி, அதை படமாக்குவதை பற்றி துளியும் சிந்தித்ததில்லை. நாவலின் நீளம் ஐந்து பாகங்களைக் கொண்டது. அதை எவ்வாறு 3 மணி நேரத்திற்குள் எடுக்க முடியும்..!!? அல்லது காட்பாதர் திரைப்படத்தை போன்று இரண்டு பாகங்களாக எடுத்து விடலாமா..? என்றெல்லாம் சிந்தித்தோம். இறுதியில் ஒரே திரைப்படமாக எடுப்பது தான் சிறந்தது என்று முடிவு செய்து இருந்தோம்.

கதைக்கேற்ற தொழில்நுட்பம்;
வர்னைகள் அதிகம் நிறைந்த பொன்னியின் செல்வன் நாவலில், "பாய்மரக் கப்பலில், மின்னல் வெட்டியது" என்ற ஒரு காட்சியை மிக சுலபமாக எழுத்தில் கொண்டு வந்து விட்டார் கல்கி. ஆனால் அதை அப்படியே திரையில் காட்ட வேண்டும் என்றால் மேலைநாட்டு நிபுணர்கள் வரவழைத்து தந்திர காட்சிகள், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், எல்லாம் அமைக்க வேண்டும். கம்ப்யூட்டர் யுகத்தில் உள்ள ரசிகர்களை,கதை நடந்த அந்த சரித்திர காலத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். சரித்திர காலத்தை பதிவு செய்வதால் எதுவும் தவறு நடந்து விடக்கூடாது என்பதற்காக தொல்பொருள் ஆராய்ச்சியார்களிடமும் விரிவாக பேசி விவாதித்து வைத்திருந்தோம்.

கதாபாத்திரங்கள் தேர்வு;
தற்பொழுது உள்ள பிரபல நடிகைகளை நாவலில் வரும் கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தினால்,அது நாவலில் உள்ள கதாபாத்திரத்தை பின்னுக்கு தள்ளி விடக்கூடாது என்பதற்காக புது நடிகைகளை நடிக்க வைக்க வேண்டும். சத்யராஜ், பிரபு போன்ற நண்பர்களுக்கு முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க வேண்டும் என்றும் பேசி இருந்தோம். இளையராஜா பிரத்தியேக முயற்சி எடுத்து படத்திற்கு இசையமைத்து கொடுப்பார் என்றும் நம்பி இருந்தோம். ஐந்து பாகங்களையும் சுருக்கி திரைக்கதை ஆக்கும் பணி தான் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. திரைக்கதை, வசனம் தயாரானதும் தீவிரமான பொன்னியின் செல்வன் வாசகர்களிடம் படிக்கச் சொல்லி, ஏதேனும் நிறை குறைகள் இருந்தால் அதை சரி செய்த பின் படப்பிடிப்பு துவங்கும் என கூறியுள்ளார்.

வந்திய தேவனாக கமல்;
பட டிஸ்கஷன் மேக்கிங் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை அந்த நேரத்தில் கூறியுள்ள கமல் வந்திய தேவனாக தான் நடிப்பதாக மறைமுகமாக கூறியுள்ளார். தன் சொந்த தயாரிப்பில் பொன்னின் செல்வன் படத்தை தயாரிக்க விரும்பியுள்ளார் கமல்.அந்த பேட்டியில் அவர் பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்னம் மட்டுமே எடுக்க முடியும் என்று கூறி இருந்தார். அதைப்போலவே தற்போது வரை பலரும் முயன்றும் இறுதியில் மணிரத்தினமே அந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதை பார்த்த சினிமா ரசிகர்கள் கமலை சினிமாவின் தீர்க்கதரிசி என்று சொல்வதில் மிகையில்லை என்று கூறி வருகின்றனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications