கமல் மீது ஒருதலை காதல்? ஸ்ரீதேவியின் ரகசியங்கள்.. ரஜினியின் மனதிலும் இப்படியா? குட்டி பத்மினி சொன்ன விஷயம்
சென்னை: இந்திய சினிமாவின் கனவுக்கன்னி என்று அழைக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் தன் நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர். குறிப்பாக, நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து அவர் நடித்த படங்கள், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இந்த நிலையில், ஸ்ரீதேவிக்கு கமல்ஹாசன் மீது ஈர்ப்பு இருந்ததாக, நடிகை குட்டி பத்மினி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள கருத்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கமலுடன் ஒரு கெமிஸ்ட்ரி
16 வயதினிலே, மூன்றாம் பிறை, கல்யாணராமன், சமயம் எனப் பல படங்களில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களின் கெமிஸ்ட்ரி, திரையில் மாயாஜாலத்தை ஏற்படுத்தியது. இதனால், ரசிகர்கள் பலர், "ஏன் ஸ்ரீதேவி கமலைத் திருமணம் செய்து கொள்ளவில்லை?" என்று இன்றும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.
ஆனால், ஒருமுறை கமல்ஹாசன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், "ஸ்ரீதேவி மீது எனக்குக் காதல் ஏற்படவே இல்லை" என்று கூறியிருந்தார். இதைக் கேட்ட ரசிகர்கள், "இவ்வளவு அழகாக இருந்த ஒரு நடிகை மீது எப்படித்தான் காதல் வராமல் இருந்ததோ?" என்று ஆச்சரியப்பட்டனர்.
குட்டி பத்மினி பகிர்ந்த ரகசியம்
குட்டி பத்மினி அளித்த ஒரு பேட்டியில், "கமல் சாருடன் ஸ்ரீதேவி தொடர்ந்து நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்தது. அந்தப் படத்தில் நானும், ஸ்ரீதேவியும் கதாநாயகிகள். அந்த நேரத்தில் ஸ்ரீதேவிக்கு கமல் சார் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. சின்ன வயதில் வரும் ஒரு infatuation என்று கூட சொல்லலாம்.
அப்போது, பாலிவுட் நடிகை ரேகா வந்திருந்தார். அவருக்கும், கமல் சாருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி, அவர்களைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் பரவத் தொடங்கின. இதனால், ஸ்ரீதேவி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானாள். அப்போது நான், 'சும்மா இருடி, அவர் வாணி கணபதியை தான் திருமணம் செய்யப் போகிறார். மற்ற எல்லோருக்கும் அவர் டேக்கா கொடுத்துவிடுவார்' என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். அந்த நேரத்தில் கமல் சாரைக் காதலிக்காத கதாநாயகிகளே இல்லை என்று சொல்லலாம்" என்று குட்டி பத்மினி கூறியுள்ளார்.
ரஜினி மற்றும் ஸ்ரீதேவி
கமல்ஹாசன் மட்டுமல்லாமல், நடிகர் ரஜினிகாந்த்திற்கும் ஸ்ரீதேவி மீது ஒரு பெரிய ஈர்ப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ரஜினிகாந்த், ஸ்ரீதேவியுடன் இணைந்து போக்கிரி ராஜா, பிரியா, தர்மயுத்தம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில், ஸ்ரீதேவியை பெண் கேட்டு ரஜினிகாந்த் அவரது வீட்டிற்குச் சென்றதாகவும், அப்போது ஏற்பட்ட மின் தடை காரணமாக, அது ஒரு கெட்ட சகுணம் என்று நினைத்து, தனது காதலைச் சொல்லாமல் திரும்பி வந்ததாகவும் ஒரு தகவல் பரவியது.
ஸ்ரீதேவியின் திருமணம் மற்றும் வாழ்க்கை
கமல்ஹாசன், ரஜினி எனப் பலரின் மனதில் இடம்பிடித்திருந்தாலும், ஸ்ரீதேவி, இந்திப் படங்களில் நடிக்கும்போது தயாரிப்பாளர் போனி கபூர் மீது காதல் வயப்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, அவர் மும்பையிலேயே செட்டில் ஆனார். கமல்ஹாசன், நடனக் கலைஞர் வாணி கணபதியைத் திருமணம் செய்து, அவரைப் பிரிந்த பிறகு, நடிகை சரிகாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணமும் நிலைக்காமல், பின்னர் விவாகரத்தில் முடிந்துவிட்டது.
குட்டி பத்மினியின் இந்தத் தகவலைக் கேட்ட ரசிகர்கள், "அய்யோ பாவம்! ஸ்ரீதேவியின் காதல் நிறைவேறாமல் போய்விட்டதே" என்றும், "அந்த நாட்களில் கமல் ஹாசன் மீது எத்தனை கதாநாயகிகளுக்குக் காதல் இருந்திருக்கிறது" என்றும் பேசி வருகின்றனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications