Madhrasi 1st day Box Office: சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியாம்!
சென்னை: (Madhrasi Box Office Collection)நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மதராஸி திரைப்படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. இந்த திரைப்படம் முதல் நாளே நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் இப்போது வெளியாகி இருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
'மதராஸி'திரைப்படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன், ருக்மினி வசந்த், வித்யூ ஜமால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆயுதக் கடத்தல் செய்யும் ஒரு சர்வதேச கும்பலுக்கும், அதைத் தடுக்க முயலும் தேசிய பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடக்கும் மோதல்கள்தான் படத்தின் கதை. இந்த மோதலில் மாட்டிக்கொள்ளும் ஒரு குடும்பத்தை சிவகார்த்திகேயன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் மையக்கரு. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஆக்ஷன் காட்சிகளிலும், வித்தியாசமான கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

வசூல் எதிர்பார்ப்பு
'மதராஸி' படத்தைப் பற்றி விமர்சகர்கள் சிலர் இரண்டாம் பாதி குறித்து அதிருப்தி தெரிவித்த போதிலும், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பே, ₹100 கோடி வசூலிக்கும் என்று பேச்சு பரவலாக எழுந்தது. தயாரிப்பு நிறுவனம் பட வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி மற்றும் செயற்கைக்கோள் உரிமை மூலம் பெரிய தொகையை ஈட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் ஓடிடி உரிமை பிரைம் வீடியோவுக்கு ₹40 கோடிக்கும், செயற்கைக்கோள் உரிமை ₹26 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாம். இதனால், படம் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு 'மதராஸி' பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாள் வசூல் நிலவரம்
'மதராஸி' திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ₹13 கோடி வசூலித்துள்ளதாக சாக்னில்க் (Sacnilk) தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ₹10 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனிக்கிழமை இரண்டாவது நாளுக்கான முன் விற்பனையில் படம் ₹4 கோடிக்கு மேல் வசூலித்து வலுவான நிலையில் உள்ளது.
மற்ற படங்களுடன் ஒரு ஒப்பீடு
சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் ₹44.5 கோடி வசூலித்தது. உலக அளவில் 'கூலி' ₹151 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்தது. 'மதராஸி' திரைப்படம் 'கூலி'யின் சாதனையை நெருங்க முடியாவிட்டாலும், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
சிவகார்த்திகேயனின் முந்தைய படமான 'அமரன்' திரைப்படம், முதல் நாளில் உலகம் முழுவதும் ₹35 கோடி வசூலித்தது. இது 2024 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் நான்காவதாக அதிக வசூலை அள்ளிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், 'மதராஸி' திரைப்படம் வசூல் ரீதியாக ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயனின் நட்சத்திர அந்தஸ்து மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications