Mammootty: எனக்கு மம்முட்டினு பெயர் வைத்ததே இவரு தான்! மேடையில் கூப்பிட்டு வைத்து ரகசியங்களை உடைத்த நடிகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் பலருடைய ஃபேவரிட் ஆக வலம் வரும் நடிகர் மம்முட்டி தன்னுடைய பெயருக்கு பின்னாடி இருக்கும் ரகசியத்தை பற்றி மேடையில் பேசி இருக்கிறார். அதாவது தான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தன்னுடைய பெயரை மம்முட்டி என்று மாற்றியது தன்னுடைய நண்பர் தான் என்று அந்த நண்பரை மேடையில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.

சினிமாவில் பல நடிகர்கள் தங்களுடைய நிஜப் பெயரால் சினிமாவில் அறிமுகமாகி இருக்க மாட்டார்கள். ஆனால் சினிமாவில் வந்த பிறகு அவர்களுடைய நிஜ பெயரே இதுதானோ என்று ரசிகர்கள் நினைக்கிற மாதிரி இடம் பிடித்து விடுகிறார்கள். ஒரு சிலர் அறிமுகமாகும்போது ஒரு பெயர் வைத்திருப்பார்கள் ஒரு படம் அல்லது இரண்டு படம் வெற்றி கொடுக்கவில்லை என்றால் அடுத்த பெயரை மாற்றி விடுவார்கள்.

Mammootty Malayalam cinema

சமீபத்தில் கூட நடிகர் ரவி மோகன் தன்னுடைய பெயரை மாற்றி இருந்தார். அவர் ஜெயம் படத்தில் நடித்து பிரபலமானதும் ஜெயம் ரவி என்று வைத்திருந்தார் ஆனால் கடந்த வருடத்தில் தன்னுடைய பெயரை ரவி மோகன் என்று மாற்றியிருந்தார். அதேபோல நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக்கும் கௌதம் ராம் கார்த்திக் என்று மாற்றி இருக்கிறார். இப்படி பலர் பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல மலையாள சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் மம்முட்டியும் தன்னுடைய ஒரிஜினல் பெயரை வைக்காமல் இன்னொரு டூப்ளிகேட் பெயரால் தான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அவரை மம்முட்டி அல்லது மம்முக்கா என்று சொன்னால் பலருக்கும் தெரியும். அவருடைய நிஜ பெயர் "முகமது குட்டி இஸ்மாயில் பணிபரம்பில்" என்பது ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும். (இவ்வளவு பெரிய பெயரா? இந்த பெயரை எழுதினால் ஸ்கிரீனே நிறைந்து விடுமே) என்றெல்லாம் உங்கள் மனதிற்குள் எண்ணம் ஓடலாம்.

ஆனால் மம்முட்டி சினிமாவிற்கு வந்து பெயரை மாற்றவில்லை. அதற்கு முன்பே மாற்றிவிட்டாராம். சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட மம்மூட்டி இது பற்றி பேசி இருக்கிறார். நம்மில் பலரே நம்ம அம்மா அப்பா ஆசையாக வைத்த பெயர் இது நமக்கு பிடிக்கலையே என்று புலம்பி இருப்போம். பழைய பெயராக வைத்திருந்தால் ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது நண்பர்களின் கிண்டல், தொந்தரவால் ஏன்டா இந்த பெயரை எனக்கு வச்சீங்கன்னு புலம்பி இருப்போம்.

நாம புலம்பலனா கூட நம்முடைய நண்பர்களில் யாராவது ஒருவர் புலம்பி நாம பார்த்திருப்போம். அதுபோலத்தான் மம்முட்டியும் தன்னுடைய முகமது குட்டி என்ற பழைய பெயரை விரும்ப இல்லையாம். காலேஜ் படிக்கும் போதே என் பேரு ஓமர் ஷெரிப் என்று கூறி இருக்கிறார். அது ஒரு அரேபிய நடிகரின் பெயராம். அதான் உண்மைன்னு காலேஜ் பசங்க எல்லாம் நம்பி இருக்காங்க.

ஒரு நாள் தன்னுடைய காலேஜ் ஐடி கார்டு தெரியாம கீழே விழுந்து இருக்கு. அதை எடுத்து பார்த்த இவருடைய நண்பர் உன்னோட உண்மையான பெயர் ஓமர் ஷெரிப் இல்லையா என்று அதிர்ச்சியாகி இருக்கிறார். அதற்கு இவரு ஆமா முகமது குட்டி என்ற என் பெயர் எனக்கு பிடிக்கல அதனால தான் இப்படி மாற்றி வைத்திருக்கிறேன் என்று சொல்லி இருக்காரு... அதற்கு நண்பர், சரி அப்போ உன்னோட நிஜ பெயரான முகமது குட்டியை வைத்து இன்னொரு பெயர் வெச்சிடலாம்னு சொல்லி அந்த பெயரை சுருக்கி மம்முட்டி என்று கிண்டலாக கூப்பிட்டு இருக்கிறார். அந்த பெயர் தான் பிறகு இவருடைய அடையாளமாகவே மாறிவிட்டதாம்.

மம்முட்டி பெயரை வச்சது இவருதான் என்று அங்கு கூட்டத்தில் ஒருவரை நோக்கி மம்முட்டி கை காட்ட அனைவரும் யார் அவர் என்று ஆர்வத்தோடு பார்த்திருக்கிறார்கள். அப்போது அங்கு ஒரு நபர் என்ன சொல்ல என்று தெரியாமல் சிரித்தபடியே இருந்திருக்கிறார். பிறகு அவரை மம்முட்டி மேடைக்கு வரச் சொல்லி கட்டிப்பிடித்து இவர்தான் சசிதரன், எனக்கு மம்முட்டி என்று பெயர் சூட்டி பெருமை சேர்த்தவர் என்று சந்தோஷமாக பேசியிருக்கிறார். இத்தனை வருஷம் ஆனாலும் மம்முட்டி தன்னுடைய நட்பை மறக்கலையே என்று பலரும் பாராட்டிட்டு வராங்க.

நீங்க இதுபோல பெயரை மாற்றி வச்சிருக்கீங்களா? அல்லது உங்க நண்பருக்கு பெயரை மாற்றி வைத்து ரசித்து இருக்கிறீர்களா பாஸ்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+