பிக் பாஸ் வீட்டிற்குள் "அதை” மட்டும் என்னால் மறக்க முடியாது.. முதல் முறையாக மனம் திறந்த மணிகண்டன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய மணிகண்டன் முதல் முறையாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருந்த போட்டியாளர்கள் மற்றும் வாய்ப்பு தந்தவர்களுக்கும் ரசிகர்களுக்கும் மனம் உருகி மணிகண்டன் நன்றி கூறி இருக்கிறார்.
மணிகண்டன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி பேசியதை குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

எதிர்பாராத வெளியேற்றங்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு கடந்த வாரம் மணிகண்டன் யாரும் எதிர்பார்க்காத நிலையில் வெளியேறி இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து அதிகமான முறை எலிமினேஷன் லிஸ்டில் வராமலே தப்பி வந்த மணிகண்டன் இந்த முறை வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் சில நாட்கள் இவரும் ஏடிகேயும் மாறி மாறி இருந்து வந்தனர். இதனால் ஏடிகே அதிகமாக வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர். ஏற்கனவே இதற்கு முன்பு ஒரு வாரம் இதே நிலைமைதான் நிலவி வந்தது. ஆனால் அந்த வாரத்தில் ஜனனி எதிர்பார்க்காமல் வெளியேறினார்.

எதிர்பார்ப்பு ஏமாற்றம் ஆகிவிட்டது
இதுவரைக்கும் பிக் பாஸ் வரலாற்றிலேயே யாரும் செய்யாத சாதனையை மணிகண்டன் இந்த சீசனில் செய்திருந்தார். ஐந்தாவது வாரமாக தலைவர் பதவி வகித்து கூல் தலைவர் எனும் ஒரு பட்டத்தையும் மணிகண்டன் பெற்றிருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற ப்ரீஸ் டாஸ்க்கில் மணிகண்டனின் குடும்பத்தினர் வந்த நிலையில் மணிகண்டன் எப்படியும் கடைசி ஐந்து இடங்களுக்குள் வந்துவிடுவார் என்று தான் ரசிகர்கள் கூறிவந்தனர். ஆனால் அவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தலைவர் பதவிக்கு ஒவ்வொரு வாரமும் போராடி வெற்றி பெற்று வந்த மணிகண்டன் இந்த டாஸ்கையும் வெற்றி பெற்று கடைசியாக பைனலுக்கு போய் விடுவார் என்று ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர். ஆனால் அந்த அது ஏமாற்றமாக மாறிவிட்டது.

பணப்பெட்டி மிஸ் ஆகிட்டே
அதுமட்டுமல்லாமல் இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் பணப்பெட்டி வந்துவிடும் அதில் எவ்வளவு பணம் இருக்கும் என்று ஆரம்பத்தில் இருந்து மணிகண்டன் யோசித்துக் கொண்டே இருந்தார். அப்படியே பணப்பெட்டி வந்தாலும் மணிகண்டன் எடுத்துக்கொண்டு வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் ரசிகர்கள் கருத்துக் கொண்டு வந்தனர். கடந்த வாரம் கமல் முன்னிலையில் கூட பணபெட்டி பற்றி பேசியதை கதிரும், மணிகண்டனும் ஒத்துக்கொண்டனர். இந்த நிலையில் தற்போது மணிகண்டன் வெளியேற்றத்திற்கு பிறகு முதல் முறையாக பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார்.

உருக்கமான முதல் பதிவு
அதில் பிக்பாஸில் எனது பயணம் நிகழ்வுகள் நிறைந்தது மற்றும் மறக்க முடியாதது. அது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். நான் தங்கி இருந்த காலத்தில் நான் அதிகம் கற்றுக் கொண்ட எனது மற்ற வீட்டு தோழர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அதே சமயம் நானும் இத்தனை நாள் ஜாலியாக அந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தேன். இந்த நேரத்தில் பிக் பாஸ் குழு, ஸ்டார் விஜய் டிவி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டும் அல்லாமல் கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல என் மீதுள்ள விலை மதிப்பு அற்ற அன்பு மற்றும் அபரி விதமான நம்பிக்கைக்கு எனது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இருவரையும் தங்களின் அமோகம் மற்றும் அசைக்க முடியாத ஆதரவின் மூலம் வெளிப்படுத்தினார். அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும் நம்பிக்கையும் என்னால் முடிந்ததை செய்து மேலும் உங்களை அடைய என்னை தூண்டுகிறது, என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். இது வெளியிட்ட சில நிமிடங்களுக்குள் லைக்குகள் அதிகரித்து வருகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications