இந்தியாவிற்கே தேவையான மலையாள சினிமா தமிழில் ரிலீஸ்.. கொண்டாடும் கருத்தியல் சினிமா ரசிகர்கள்
சென்னை: மலையாள சினிமாவின் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படங்களுள் ஒன்றான "நாந தான் கேஸ் கொடு" படத்தின் தமிழ் ஓடிடி ரிலீஸை வரவேற்க தயாராகி வருகின்றனர்.
நல்ல சினிமாக்களை நேசிக்கும் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக உள்ளது.
டிஸ்னி ஹாட் ஸ்டார்ன் இந்த அறிவிப்பு எதார்த்த சினிமாக்களை எடுப்பதில் கைதேர்ந்த மலையாள சினிமா உலகுக்கு இந்த படம் மேலும் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது என்று இந்தப் படத்திற்கு புகழ் மாலை சூட்டி வருகின்றனர். ஐ.எம்.டி.பி எனப்படும் பிரபல தனியார் ரேட்டிங் இணையதளம் இப்படத்திற்கு 8.5 ரேட்டிங் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதாபாத்திரங்கள்
குஞ்சாகோ பாபன்- காயத்ரி இணைந்து நடித்துள்ள இந்த படத்தை ரதீஷ் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். படத்தில் நீதிமன்றம் மற்றும் சட்டம் சம்பந்தமான பல காட்சிகளில் பேசப்படும் வசனங்கள் இயக்குனரின் எழுத்து திறமையை காட்டுவதாக இருக்கிறது என்று பலர் விமர்சனம் செய்திருந்தனர்.

கலக்கல் காமெடி
மிகவும் சீரியசான சீன்களை கூட காமெடி கலந்து கொண்டு செல்வதில் கைதேர்ந்த மலையாள இயக்குனர்கள் கைவண்ணம் இந்தப் படத்தில் தொடர்ந்து உள்ளதாகவும் இப்படம் பல விருதுகளை கண்டிப்பாக குவிக்கும் என்றும் இப்படம் வெளிவந்திருந்த சமயத்தில் பலர் தனியார் சேனல்கள் ரிவ்யூ வழங்கி இருந்தது.

கதை சுருக்கம்
நீண்ட நாட்களாக திருடனாக இருந்த ஒருவன் திருந்தி திருமணத்தை முடித்து இயல்பு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.அவன் திருந்தி இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு திருட்டு வழக்கிற்காக கைது செய்யப்படுகிறான். அந்த தப்பே பண்ணாதவன் தான் தப்பே பண்ணவில்லை என்று நிரூபிப்பதற்கு சட்டத்தில் எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது என்பதை காட்டுவதாக உள்ளது என்று இப்படத்தை குறித்து கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தது .பல இடங்களில் பேசும் அரசியல் நையாண்டி சேட்டன்களின் குசும்பிற்கு ஓர் உதாரணம் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஹாட் ஸ்டார் ஒடிடி வெளியீடு
அனைத்து தரப்பினராலும் எந்தவித நெகட்டிவ் விமர்சனங்களும் இன்றி பாராட்டப்பட்ட இந்தப் படத்தை ஹாட்ஸ்டார் இணையதளம் தனது ஓடிடி தளத்தில் தமிழ் மொழியில் டப் செய்து வெளியிடுகிறது. இன்றைய சட்டத்தில் உள்ள குறைபாடுகள் சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து இப்படம் அதிகம் பேசுவதாக இப்படத்தைப் மலையாளத்தில் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மிகவும் சீரியசான ஒரு விஷயத்தை காமெடி கலந்து கூறியுள்ள இப்படம் கண்டிப்பாக சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாய் அமையும்.












Click it and Unblock the Notifications