"நீங்க செஞ்சா மட்டும் நியாயமா”பாண்டியன் ஸ்டோர் சீரியலை கலாய்க்கும் ரசிகர்கள்.. ஆனாலும் இது ஓவர் தான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் கதையை தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
கண்ணன் லஞ்சம் வாங்கியதற்காக அவரை அடித்த மூர்த்தி தான் தற்போது நெட்டிசன்களின் வசம் மாட்டி இருக்கிறார்.
2000 ரூபாய் வாங்குனதுக்கு இவ்வளவு கோபம் என்றால் 50000 கொடுத்தது என்ன கணக்கு என்று கணக்கு வழக்குகளை ரசிகர்கள் துளைத்து வருகிறார்கள்.

அண்ணன் தம்பி கதை
பொதுவாக சீரியல் என்றாலே நெடுநாள் கதையை நகர்த்த வேண்டும் என்பதற்காக சில பொருத்தம் இல்லாத சீன்களை வைத்து வருவது வழக்கம் தான். ஆனாலும் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் கதைக்களம் ரசிகர்களை குழப்பும் வகையில் இருந்து வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அண்ணன் தம்பி கதைகளை மையமாகக் கொண்ட பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு பல வருடங்களாகவே அதிகமான ரசிகர்கள் தொடர்ந்து வருகிறார்கள்.

கண்ணனால் ஏற்பட்ட குழப்பம்
இதுவரைக்கும் இந்த சீரியலில் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருந்த நிலையில் தற்போது கதிர் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய சுய கௌரவம் முக்கியம் என்றும் தான் வாழ்க்கைகள் ஜெயித்துக் காட்டுவேன் என்று ஹோட்டல் நடத்தி வருகிறார். மீதமிருக்கும் மூன்று அண்ணன் தம்பிகளும் ஒத்துமையாக இருக்கும் நிலையில் தற்போது கண்ணன் செய்த செயலால் வீட்டிற்குள் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. காலேஜ் படிக்கும் போது திருட்டு கல்யாணம் செய்து கொண்ட கண்ணனுக்கு வேலைக்கு சேர வேண்டும் என்பதற்கு ஆக பணம் கொடுத்து உதவி செய்திருக்கின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
கதிரின் மனைவி முல்லையின் மருத்துவ செலவிற்கு அதிகமான பணம் செலவழித்ததாக தான் இவர்கள் வீட்டிற்குள் பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்து. தன்னுடைய மனைவியின் செலவுகளை தானே கவனித்துக் கொள்கிறேன் என்று கதிர் வீட்டை விட்டு கிளம்பி இருந்தார். ஆனால் கண்ணனை அதிகமாக படிக்க வைத்தது மட்டுமல்லாமல் அவருடைய வேலைக்காக தற்போது 50,000 ரூபாய் கொடுத்து இருக்கின்றனர். இந்த நிலையில் கண்ணன் வேலை செய்யும் இடத்தில் பணத்தை வசூலிக்க தெரியாமல் திணறி வருகிறார். இதனால் விரைவில் வேலையை விட்டு நின்று விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

அது என்ன கணக்கு
இந்த நிலையில் நேற்று கண்ணனிடம் அவருடைய மேல் அதிகாரி ஒருவரிடம் சென்று கவர் வாங்கி வர சொல்லி இருக்கிறார். அது போலவே கண்ணன் செய்ததால் அவருக்கு 2000 ரூபாய் கொடுத்து இருக்கிறார். கண்ணனுக்கு கிடைத்த 2000 ரூபாயில் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருள்களும், வீட்டிற்கு இனிப்பு பொருட்களும் கண்ணன் வாங்கிக் கொண்டு சந்தோஷமாக வீட்டிற்கு வந்தார். உனக்கு பணம் இவ்வளவு எப்படி வந்தது என்று மூர்த்தி கேட்கவும், அங்கே நடந்த கதையை கண்ணன் கூறி இருக்கிறார். உடனே கடும் கோபத்தில் மூர்த்தி கண்ணனை அடித்து நீ எப்படி லஞ்சம் வாங்கலாம் என்று பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறார், இதைத்தான் தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். 2000 ரூபாய்க்கு அவருக்கு அந்த அடி என்றால் நீங்கள் லஞ்சமாக 50000 கொடுத்திருக்கிறீர்களே? அதற்கு என்ன கணக்கு என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications