• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட்வைஸ் செய்த காரணத்திற்காக அன் லைக் கொடுத்த ராஜூ...இப்படி செய்யலாமா??

Google Oneindia Tamil News

சென்னை: முகத்துக்கு நேராக பேசி தான் செய்த தவறை சுட்டிக்காட்டியதற்காக இப்படி செய்தார் என்று ராஜுவை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

அடுத்தவர்களின் நிஜக்கதை தனக்கு ஒரு திரைக்கதையாக தெரிந்தால் தான் லைக் கொடுப்பேன் என்று சொல்லியவர் அக்ஷராவுக்கு மட்டும் லைக்கை வாரி வழங்கியது எதற்காக என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

என்னதான் நியாயமாக பேசிக்கொண்டு இருந்தாலும் இவரும் இப்படி செய்து விட்டாரே என்று ராஜூவுக்கு எதிராக ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நெகட்டிவ் கமெண்டுகள் வராத ஒரே போட்டியாளர் இவர்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நெகட்டிவ் கமெண்டுகள் வராத ஒரே போட்டியாளர் இவர்தான்

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோ என்றாலே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடும். அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சொல்லவே வேண்டாம். இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் வெற்றி பல மடங்காக அதிகரித்து வருகிறது. அதனாலேயே தற்போது இந்த நிகழ்ச்சி இந்த 5வது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆகிவிடுவதால், இதில் பலர் கலந்து கொள்வதற்காக போட்டி போட்டு வருகின்றனர். அதில் ஒரு சிலருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைத்து கொண்டு இருக்கிறது.

சின்னத்திரை காமெடி ஹீரோ

சின்னத்திரை காமெடி ஹீரோ

சின்னத்திரையில் காமெடி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஜு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான பிறகு தான் அவர் ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டர் மற்றும் பல்வேறு திறமைகளை உள்ளடக்கி இருக்கிறார் என்பதே பலருக்கும் தெரிந்திருக்கிறது. இவர் மிமிக்ரி செய்வதிலும் வல்லவராக தான் இருந்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இவருடைய பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று இவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் இவரும் தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொண்டே தான் இருக்கிறார். தன்னுடைய கேரக்டரில் அப்படியே இருக்கிறேன் என்று இவர் கூறி இருக்கிறார்.

பிடிக்காத கதைக்கு டிஸ்லைக்

பிடிக்காத கதைக்கு டிஸ்லைக்

பிக்பாஸ் 5வது சீசன் தொடங்கிய முதல் நாளில் இருந்து இப்ப வரைக்கும் இவர் செய்யும் காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பிரபலமடைந்து வருகிறது. இந்த நிலையில் இவர் செய்த ஒரு சில செயல்களும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இவரா இப்படி செய்தார்??என்று அவருடைய ரசிகர்களே இதைப்பற்றிய ஆழமாக பேசி வருகின்றனர். முதல் நாள் தங்களுடைய சொந்த கதைகளை போட்டியாளர்கள் சுவாரசியமாக கூறிக் கொண்டிருக்கும் போது, இமான் அண்ணாச்சியின் கதை எனக்கு அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று டிஸ்லைக் கொடுத்துவிட்டார். அதற்குப்பிறகு சின்னப்பொண்ணு கதையை கேட்டு அனைவரும் ரொம்பவே பீல் பண்ணி விட்டனர். ஆனால், அதுவும் தனக்கு பிடிக்கவில்லை என்று டிஸ்லைக் கொடுத்துவிட்டார்.

  Akshara Reddy ஒரு குழந்தை | Akshara அம்மா & அண்ணன் Shravan
  அக்ஷராவுக்கு மட்டும் புது சலுகை

  அக்ஷராவுக்கு மட்டும் புது சலுகை

  ஆனால் நேற்று அக்ஷரா தான் செல்லமாக வளர்ந்தது மற்றும் தந்தை அண்ணன் மீது வைத்திருக்கும் பாசம் அவர்கள் தான் என்னுடைய உலகம் என்று பேசியது அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது என்று லைக் கொடுத்திருப்பது தான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலர் கண்ணீரோடு தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை கூறியது எல்லாம் இவருக்கு பீல் பண்ண வைக்கவில்லையாம் ஆனால் இவர் எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க முடியாது என்று பேசியிருப்பது, அதுதான் இவருக்கு பிடித்திருக்கிறதா??என்று பலர் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் அக்ஷராவை இவருக்குப் பிடிக்கும் என்ற காரணத்தினால் தான் இவருக்கு லைக் பட்டன் கொடுத்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

  English summary
  In the fifth season of Bigg Boss, many people are telling their own sad story. The contestants are giving it their likes, hardins, dislikes, etc. At this stage, raju has given a like to Akshara's story like no other than ever before and it has been virally talked about on the social media.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X