நடிகர் ராஜ்கிரண் சொன்னது தான் இப்போது நடக்கிறதா? இதை தெரிந்து தான் அப்படி ஒரு பதிவை வெளியிட்டாரா?
சென்னை: நடிகர் ராஜ்கிரண் சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜா தன்னுடைய வளர்ப்பு மகளை நகை பணத்திற்காக தான் திருமணம் செய்திருக்கிறார் என்று கூறியபடி தான் இப்போது நடக்கிறதா? என்று நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜா மற்றும் அவருடைய மனைவி வெளியிட்ட வீடியோவிற்கு சமூக வலைத்தளத்தில் பல்வேறு தரப்பட்ட கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு
சின்னத்திரை நடிகர் ஆன முனீஸ் ராஜா நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய காதல் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டு பின்பு காதலாக மாறி இருக்கிறது. இருவரும் வெவ்வேறு மதமாக இருந்ததால் இர வீட்டாரும் ஆரம்பத்தில் சம்மதிக்காத நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து இருந்தனர். பின்பு முனீஸ் ராஜாவின் வீட்டினர் இவர்களை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் .இந்த நிலையில் ராஜ்கிரண் தன்னுடைய வளர்ப்பு மகளை சின்னத்திரை நடிகர் ஏமாற்றி திருமணம் செய்து இருக்கிறார். அவர் தன்னிடம் இருக்கும் நகை பணத்திற்காக தான் இப்படி ஒரு காதல் நாடகம் நடத்தி இருக்கிறார். என்றும் தன்னுடைய பெயரை கெடுக்கும் விதமாக முனீஸ் ராஜா இப்படி செய்திருக்கிறார் என்று facebook பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

ராஜ்கிரணின் முடிவு
அதுமட்டுமல்லாமல் இனி எனக்கும் என்னுடைய வளர்ப்பு மகள் பிரியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் என்னுடைய பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ஒரு சில மாதங்கள் கடந்து பிரியா தன்னுடைய அம்மாவிடம் தனக்கு சேர வேண்டிய நகைகளை கேட்டு இருந்தாராம். அதனைக் குறித்து பிரியாவின் அம்மாவான பத்மஜா இப்போது பிரியா மற்றும் முனீஸ் ராஜாவின் குடும்பத்தின் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார். தன்னுடைய வீட்டில் இருந்து 17 பவுன் நகைகளையும் தன்னுடைய குடும்ப சொத்தான தாலியையும் பிரியா எடுத்து சென்று விட்டார் என்று அந்த கம்ப்ளைன்டில் இருக்கிறதாம்.

இரண்டாவது மனைவியின் மகள்
முனீஸ் ராஜாவின் மனைவியான பிரியா ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஆவார். வளர்ப்பு மகள் என்றால் ராஜ்கிரணின் இரண்டாவது மனைவியின் மகள்.திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த இளங்கோவன் பத்ம ஜோதி தம்பதியரின் மகள் பிரியா கடந்த 2014ஆம் ஆண்டு இளங்கோவனை பிரிந்த பத்மஜோதி நடிகர் ராஜ்கிரணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பத்ம ஜோதியை கதீஜா என்றும் வளர்ப்பு மகளான பிரியாவை ஜனப்பிரியா என்றும் அழைத்து வந்திருக்கின்றார். இந்த நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு முனீஸ் ராஜாவோடு திருமணத்தை செய்து கொண்டு வீட்டை விட்டு பிரியா வெளியேறி இருக்கிறார் இந்த நிலையில் பிரியாவோடு தான் அவருடைய சொந்த அப்பா இளங்கோவன் இருந்து வருகிறாராம்.

சொன்னது தான் நடக்கிறதா
இந்த நிலையில் தற்போது ராஜ்கிரண் இரண்டாவது மனைவி கதீஜா சென்னையில் புகார் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறார். அதில் நகைகளை எடுத்துக்கொண்டு சென்ற பிரியா மற்றும் முனீஸ் ராஜா மற்றும் பிரியாவின் உண்மையான அப்பா இளங்கோவன் ராஜ்கிரணின் நற்பெயரை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், குறிப்பிட்டிருந்திருக்கிறார். இந்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானதும் ராஜ்கிரணின் ரசிகர்கள் பலர் ஏற்கனவே ராஜ்கிரண் சொன்னது போல தான் தற்போது நடந்திருக்கிறது. காதல் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் முன்பு வாழ்ந்து காட்ட வேண்டும். எதற்காக நகைக்காக போக வேண்டும் என்று சிலர் கேள்விகளை கேட்டு வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் ராஜ்கிரண் சினிமாவில் மட்டும்தான் காதலை ஏற்றுக் கொள்கிறார். நிஜா வாழ்க்கையில் காதலை ஏற்றுக் கொள்ளாமல் எதற்காக இப்படி வீம்பு பிடிக்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இவர்கள் இருவருடைய குடும்ப பிரச்சனை தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications