பிக் பாஸ் தாமரைச்செல்வி ஆசைப்பட்டது நிறைவேறி விட்டதாம்.. இது வேற லெவல் வளர்ச்சிதான்..!!
சென்னை: பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்ட தாமரை செல்வியின் ஆசை தற்போது நிறைவேறி இருக்கிறதாம்.
தாமரை செல்வி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது திரைப்படத்தில் நடிப்பதை பற்றி மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
திறமைக்கு எப்போதுமே மதிப்பு அதிகம் தான் என்று தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

திறமைக்கு எப்போதுமே மவுசு தான்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே பலருடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு விடும் என்று நம்பி தான் இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும்தான் அந்த மாதிரி ஒரு நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது. ஒரு சிலர் அதற்கு முன்பு இருந்த பெயரையும், புகழையும் கூட இந்த நிகழ்ச்சியில் இழந்து விடுகிறார்கள். ஆனால் திறமை இருக்கும் ஒரு சிலர் இதற்கு மேலே முன்னேறி விடுகிறார்கள்.

ரசிகர்களின் ஆதரவு
பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் பல போட்டியாளர்கள் இதற்கு முன்பு பலருக்கும் பரீட்சையும் இல்லாத புது முகமாக இருந்தனர். அதில் ஒருவராக தாமரை செல்வி இருந்து வந்தார். இவர் நாட்டுப்புற கலைஞராக ஒரு சிலருக்கு மட்டுமே பரிச்சயமானவராக இருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து விட்டார். இவருடைய கேரக்டர் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. இவருக்கு ஐந்தாவது சீசனில் கிடைத்த ஆதரவின் காரணமாக தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருந்தது.

தாமரை செல்வியின் ஆசை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் இவர் ஜெயிக்கவில்லை என்றாலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிஸியாக தான் தாமரை செல்வி இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய கணவரோடு ஆட்டம் போட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் திரைப்படத்தில் நடிப்பதாக ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது தனக்கு திரைப்படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாக தாமரை செல்வி கூறியிருந்தார்.

குவியும் வாழ்த்துக்கள்
திரைப்படங்களில் காமெடி கேரக்டராகவோ அல்லது அக்கா, தங்கை கேரக்டர் கிடைத்தாலும் எனக்கு போதும் என்று கூறியிருந்தார். அப்போது கூட இவரோடு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்த வருண் சீக்கிரம் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியிருந்தார். அதுபோல தற்போது இவர் நடிகர் சிங்கம்புலி மற்றும் ரோபோ சங்கர் ரோடு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மூவி ஷூட்டிங் என்று கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்து கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications