ஒரு வழியா முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல்.. கடைசி நேரத்தில் சேனலில் கூறிய அந்த வார்த்தை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் கடைசி அத்தியாயத்தில் என்ற பிரமோ வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே ரசிகர்கள் ஆர்வத்தோடு பலமுறை பாரதி கண்ணம்மா சீரியல் எப்போது முடியும் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.

பாரதிக்கு ஏற்கனவே பழசு எல்லாம் மறந்து விட்டது என்று டாக்டர் கூறியிருக்கிறார்.

கண்ணம்மா பாரதியோடு சேர்ந்து பழகி வந்தால் தான் அவருடைய நினைவுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதற்கு கண்ணம்மா அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

முடிவுக்கு வந்த டிஎன்ஏ பிரச்சனை

முடிவுக்கு வந்த டிஎன்ஏ பிரச்சனை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக டிஆர்பியில் முன்னணியில் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியின் அடிப்படையில் முதல் இடத்தில் இந்த சீரியல்தான் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த சீரியல் நிலையில் இந்த சீரியல் எப்போது முடிவடையும் என்று நெட்டிசன்கள் பல வருடங்களாகவே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். காரணம் இந்த சீரியலின் கதை மொத்தமாக டிஎன்ஏ என்ற ஒரே ஒரு டெஸ்ட்டை மட்டுமே மையமாகக் கொண்டு இருந்து வந்தது. நெட்டிசன்கள் அதிகமாக கேள்வி எழுப்பி வந்ததன் விளைவாகவே கடந்த வருடம் கடைசியில் பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் பாரதியின் குழந்தைகள் தான் என்று தெரிய வைத்து விட்டனர்.

மாறிப்போன கதை

மாறிப்போன கதை

இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்த சீரியல் இனி முடிவடைந்து விடும் என்று நினைத்திருந்த நேரத்தில் இந்த சீரியலில் இப்படியே முடிவடைந்தால் நன்றாக இருக்காது கண்ணம்மா இதுவரைக்கும் பட்ட கஷ்டங்களுக்கு பாரதிக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். பாரதியை உடனே ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்காது என்று ரசிகர்கள் கருத்து கூறினார்களாம். அதனாலே இயக்குனர் கதையை மாற்றி பாரதியை ஏற்றுக்கொள்ளாமல் கண்ணம்மா மீண்டும் கிளம்பி தனியாக வாழப்போகிறேன் என்று சொந்த ஊருக்கு வந்து இருந்தார் .ஆனால் அந்த ஊருக்கும் பாரதி வந்து தன்னுடைய தப்பை சரி செய்யும் பொருட்டு ஊரில் எவ்வளவோ பிரச்சனை வந்தாலும் அதையெல்லாம் தாங்கிக் கொண்டு தன்னுடைய கண்ணம்மா மற்றும் குழந்தைகளை கூட்டிக் கொண்டுதான் ஊருக்கு செல்வேன் என்று பிடிவாதமாக இருந்தார்.

பழசு எல்லாம் மறந்து போச்சு

பழசு எல்லாம் மறந்து போச்சு

இந்த நிலையில் அந்த ஊரில் இருந்த பாண்டியால் கண்ணம்மாவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அதை மன்னிப்பு கேட்க கூறி அவரோடு குஸ்தி சண்டையிட்டு அவர் தலையில் அடித்ததால் தற்போது பழசை எல்லாம் பாரதி மறந்து தன்னுடைய சொந்த குடும்பத்தையும் யார் என்று தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தூக்கத்தில் கூட கண்ணம்மாவின் பெயரை மட்டும் தான் உளறிக் கொண்டிருக்கிறார். இதனால் டாக்டர் கண்ணம்மா பாரதியோடு நெருங்கி பழகி வந்தால் பாரதிக்கு விரைவில் பழசு எல்லாம் நினைவுக்கு வந்துவிடும் என்று கூறி இருக்கிறார். ஆனால் அதற்கு கண்ணம்மா சம்மதம் தெரிவிக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார் இந்த நிலையில் இன்று புதிய பிரமோ வெளியாகி இருக்கிறது. .

இறுதி அத்தியாயம்

இறுதி அத்தியாயம்

அதில் தமிழ்நாட்டின் முன்னணி மெகா தொடர் பாரதி கண்ணம்மா பரப்பரப்பான கதைக்களத்துடன் இறுதி அத்தியாயத்தை நோக்கி என்று குறிப்பிட்டு இருக்கின்றனர். இதைக் குறித்து நெட்டிசன்கள் பலவிதமாக கலாய்த்து வருகின்றனர். ஒரு வழியாக இந்த சீரியலுக்கு எண்ட் போடப்பட்டது என்று பெருமூச்சு விடுவதா? அல்லது தமிழ்நாட்டின் முன்னணி மெகா தொடர் என்று கூறியதை கேட்டு சிரிப்பதா என்று தெரியவில்லை என்று நக்கல் நையாண்டித்தனத்தோடு கேள்வி எழுப்பி சிரித்துக் கொண்டும் இருந்தாலும், இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்கள் அட இவ்வளவு சீக்கிரமாகவா முடிக்க போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் இருவேறுபட்ட கருத்துக்கள் குவிந்து வரும் நிலையில் இந்த சீரியலில் முதல் பாகம் தான் முடிவடைய இருக்கிறது. இரண்டாவது பாகம் வெளியாக இருக்கிறது என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+