Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடக்கடவுளே கடைசியா ரவீந்தர் பயந்த மாதிரியே நடந்துடுச்சே.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஆன தயாரிப்பாளர் ரவீந்தர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ அப்படியே நடந்து விட்டதே என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.

சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியை திருமணம் செய்த ரவீந்தர் பற்றி பரவி வரும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

என்னதான் இருந்தாலும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா?? ஒரு மனுஷன் அவ்வளவு பயப்பட்டு சொல்லியும் இப்படி செஞ்சுட்டாங்களே என ரசிகர்கள் ரவீந்தருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார்கள்.

பிக் பாஸ் ரிவ்யூவர்

பிக் பாஸ் ரிவ்யூவர்

சமூக வலைதளத்தில் பலராலும் பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்வுகளில் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி உடைய திருமணமும் ஒன்று. தயாரிப்பாளர் ரவீந்திரன் லிப்ரா ப்ரோடக்ஷன் மூலமாக ஒரு சில திரைப்படங்களை தயாரித்துள்ளார். ஆனால் அப்போ எல்லாம் அவருடைய பெயர் இந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகரிக்க ஆரம்பித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ரவிந்தர் ரிவ்யூ செய்வதை பார்ப்பதற்காக இவரை அதிகமானோர் பாலோ பண்ணி வந்தனர். தனக்கே உரிய நக்கல் நையாண்டித்தனத்தோடு இவர் கொடுக்கும் ரிவ்யூ பலருக்கும் பிடித்து போய் இருக்கிறது. ஒரு சில நேரங்களில் இவர் பேசுவது காண்டாக இருக்கிறது என்று கடுப்பானவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அதையெல்லாம் கண்டுக்கிறது இல்லை

அதையெல்லாம் கண்டுக்கிறது இல்லை

பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து கொண்டிருந்த ரவீந்திரருடைய வாழ்க்கையை தற்போது ரசிகர்கள் பலர் ரிவ்யூ செய்து வருகின்றனர். ரவீந்தர் சீரியல் நடிகையான மகாலட்சுமியை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துள்ளார். தற்போது இதுதான் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்ததாம். ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திடீர் திருமணம் பலருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் கொடுத்து இருந்தது. ஆனாலும் இவருக்கு அதிகமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் சிலர் இவருடைய உடல் அமைப்பை வைத்து கலாய்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய உடல் அமைப்பை வைத்து கலாய்ப்பவர்களை கண்டுகொள்ளாத ரவீந்தர் இப்போதும் கண்டுகொள்ளவில்லை.

கண்டன்ட் மன்னர்

கண்டன்ட் மன்னர்

சமூக வலைத்தளங்களில் எந்த பக்கம் திரும்பினாலும் ரவீந்தர் புகைப்படங்களும் அவரைப் பற்றிய மீம்ஸ்களும்தான் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மேலும் நெட்டிசன்களுக்கு கலாய்ப்பதற்கு ஏதுவாக ரவீந்தரும் அப்பப்போ கன்டென்ட் கொடுத்து கொண்டு இருக்கிறார். ரவீந்தரின் வாயிலிருந்து வரும் ஒரு சில வார்த்தைகளை எடுத்துக் கொண்டு நெட்டிசன்கள் தங்களால் என்ன அளவுக்கு முடியுமோ அந்த அளவிற்கு மீம்ஸுகளை வெளியிட்டு வருகிறார்கள். இந்த வகையில் திருமணம் முடிந்த ஒரு சில நாட்களுக்குப் பிறகு ரவீந்தர் வெளியிட்ட போட்டோக்கள் தற்போது அவர் எதிர்பார்த்த மாதிரியே கலாய்க்கப்பட்டு வருகிறது.

இப்படி பண்ணிட்டாங்களே

இப்படி பண்ணிட்டாங்களே

ரவீந்தர் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மகாலட்சுமியோடு தன்னுடைய குலதெய்வ கோயிலுக்கு செல்லும்போது ஒரு புகைப்படத்தை எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்திற்கு கேப்டன் கொடுக்கும் போது கூட இதை வைத்து யாரும் நாங்கள் ஹனிமூனுக்கு சென்று விட்டோம் என்று பரப்பி விடாதீர்கள் என்று சொல்லித்தான் அனுப்பி இருந்தார். ஆனால் இவர் என்ன சொன்னாலும் நாங்கள் அதை கண்டுக்க மாட்டோம் என்று, ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து துபாயில் இருப்பது போல சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் பரப்பி இருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை யூட்யூபர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, என்ன ப்ரோ ஹனிமூன் துபாயா?? என்று ரவீந்தரை பேக் செய்து கேள்வி கேட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ரவீந்தர் பயப்பட்ட மாதிரியே பண்ணிட்டாங்களே பாவிகளா? ?என்று நொந்து போய் பேசி உள்ளார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+