• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எளிமையான இஞ்சி இடுப்பழகி... கம்பீரமா வீட்ல விஷேசங்க.. கூலிங் கிளாஸ்ல சற்குணத்தம்மா!

|
  அழகு, நாயகி, அரண்மனைக்கிளி சீரியல்களில் கலக்கும் ஹீரோயின்கள்- வீடியோ

  சென்னை: விஜய் டிவியின் அரண்மனைக் கிளி, சன் டிவியின் அழகு ரெண்டு தொடரிலும் எத்தனையோ இளம் நடிகைகள் குவிந்து கிடக்கிறார்கள்.. ஆனால் ரசிகர்களின் ஓட்டு என்னவோ அதில் வரும் அந்த இரண்டு சினிமா பிரபலங்களுக்குத்தான்.

  அட ஆமாங்க.. ஒருவர் நடிகை பிரகதி.இயக்குநர் பாக்யராஜின் வீட்ல விஷேசங்க படத்தின் மூலம் அறிமுகமானவங்க. அடுத்து நடிகை ரேவதி. இருவருமே பிரமாதமான வெள்ளித்திரை நடிகைகள்.. ஒரு காலத்தில்.

  ரேவதியைப் பற்றி சொல்லவே வேணாம். பாரதிராஜாவின் மண்வாசனை படத்துல அறிமுகமானவங்க. டிவியில் இன்று அழகு சீரியல் மூலம் மக்களின் மனங்களை வசீகரித்து வருகிறார்.

  அழகம்மை

  அழகம்மை

  ரேவதி, அழகு சீரியலில் எளிமையான குடும்பத்து அம்மாவாக அசத்துகிறார். ஏற்ற இறக்கத்துடன் மனதை உருக்கும்படி டயலாக் பேசி, வசியப்படுத்தி விடுகிறார். மண்வாசனை சிரிப்பு மக்களை அப்படியே சீரியல் வசம் கட்டிப்போட்டு விடுகிறது.

  மீனாட்சி அம்மா

  மீனாட்சி அம்மா

  மறுபக்கம், பிரகதி பணக்கார தொழிலதிபர் மீனாட்சி அம்மாவா நடிச்சு அசத்தறாங்க. மத்த சீரியலில் பணக்கார அம்மாக்கள் போல கண்ணா பின்னாவென்று நகைகள் போட்டுக் கொள்ளாமல், விலை உயர்ந்த புடவை, நீண்ட கைகள் வைத்த ஜாக்கெட் என்று அலட்டாமல், சிம்பிளாக, மதிப்புக்குரிய தொழிலதிபராக வருகிறார். கூடவே பாசக்கார அம்மாவும். கம்பீரம் பிளஸ் குழைவு என்று நடிப்பில் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு தனியாக கோலோச்சுகிறார்.

  சற்குணத்தமா

  சற்குணத்தமா

  நடிகை அம்பிகா... ஒரு காலத்தில் கமல்-ரஜினி என்று இருவருடனும் மாறி மாறி நடித்த உச்ச நட்சத்திரம். நாயகி சீரியலில் இப்போது அசத்துகிறார். இதன் இயக்குநர் குமரன், அம்பிகாவை கூப்பிட்டால் வருவாரோ மாட்டாரோ என்கிற கலக்கத்தில் இருந்தாராம். உதவி இயக்குனர் கணேஷ் தைரியம் சொல்ல, கூப்பிட்டதும் உடனடியாக ஒப்புக்கொண்டு விட்டாராம்.

  கண்ணுல பேசிடுவாங்க

  கண்ணுல பேசிடுவாங்க

  உடன் நடிக்கும் ஜூனியர் நடிகைங்க கிட்ட எல்லாம் குமரன் சொன்னது ஒண்ணே ஒண்ணுதானாம். அம்பிகா காம்பினேஷன் சீன்ல கண்ணுலயே நடிச்சுருவாங்க. நீங்க உங்க நடிப்பு வெளியில தெரியணும்னா கூடுதல் எஃபெக்ட் போடணும்னு.அப்படித்தான் போகுது சீரியலும்.

  ஒன்னும் பண்ண முடியாது!

  ஒன்னும் பண்ண முடியாது!

  வயசானாலும், மார்க்கெட்டைத் தக்க வச்சுக்கற டெக்னிக் எப்படின்னு சொல்லிக் குடுத்தா, வீட்ல போரடிச்சு உட்கார்ந்து இருக்கற பழைய நடிகைகள் பலருக்கு யூஸ்ஃபுல்லா இருக்குமே. சீரியல் வந்து சினிமாவை கெடுக்குதுன்னாங்க...இப்போ இதுல பிழைப்பு நடத்தறவங்க முக்கால்வாசி பேர் சினிமாவை சேர்ந்தவங்கதான்.. எதாலயும், எதையும் அழிக்க முடியாது. புரிஞ்சுக்கிட்டா சரி!

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  80s Heroines are now roaming in TV serials in rocking roles and People are love to see them again.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more