சைஸை பார்த்தா அப்படி தெரியலையே...வயசை கேட்டு வாயடைத்துப் போன ரசிகர்கள்
சென்னை: ஆளுக்கும் வயசுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வார்கள் அது இப்போ பவானி ரெட்டிக்கு செட் ஆகிவிட்டது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை பற்றிய பல சுவாரஸ்யங்களை ரசிகர்கள் தெரிந்து கொண்டு வருகின்றனர்.
அந்த மாதிரிதான் நேற்று நடந்த நிகழ்வில் கூட பவானி ரெட்டி பற்றி தெரிந்து கொண்ட ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

ஐந்தாவது சீசன் தொடக்கம்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனும் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்போடு தான் தொடங்கப்பட்டு வருகிறது. முதல் சீசன் ஆரம்பிக்கும் போது இது என்ன வித்தியாசமான நிகழ்ச்சியாக இருக்கிறதே என்று கூறிவந்த ரசிகர்கள் பின்பு நிகழ்ச்சியை பார்த்துவ100 நாளும் தங்களுடைய ஆதரவினை கொடுத்து வந்தனர். ரசிகர்களின் பேராதரவினால் தற்போது ஐந்தாவது சீசனை எட்டியிருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் பலர் பிரபலம் ஆகி விடுகின்றனர்.

சின்னத்திரை கதாநாயகி
தற்போது ஐந்தாவது சீசனில் பல போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தாலும் இதில் ஒரு சிலர் தான் ரசிகர்களுக்கு நன்றாக பரிச்சயமான நபராக இருந்து வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையின் கனவுக் கன்னியாகவும், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் இளைஞர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பவானி ரெட்டி இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாவார் என்று ரசிகர்கள் ஏற்கனவே எதிர்பார்த்து தான் இருந்தனர்.

சின்னத்திரை கதாநாயகி
தற்போது ஐந்தாவது சீசனில் பல போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தாலும் இதில் ஒரு சிலர் தான் ரசிகர்களுக்கு நன்றாக பரிச்சயமான நபராக இருந்து வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையின் கனவுக் கன்னியாகவும், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் இளைஞர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் பவானி ரெட்டி இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாவார் என்று ரசிகர்கள் ஏற்கனவே எதிர்பார்த்து தான் இருந்தனர்.

சோகமான காதல் கதை
ஆனால் இவர் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் ரசிகர்கள் பலர் இதே கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தாலும் எந்த பதிலையும் கூறாமல் அமைதியாக இருந்தார். முதல்நாள் இவரை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல் நாளிலேயே ரசிகர்களின் கண்களை குளமாக்கி இவருடைய சோகமான காதல் கதை பலருக்கும் வேதனையை கொடுத்திருந்தாலும், இவருடைய தரிசனத்தை பார்த்து மனதை தேற்றிக் கொண்டனர். இந்தநிலையில் இவரைப் பற்றி தெரிந்துகொள்ள இவருடைய சக போட்டியாளர் இவரிடம் பேசிக் கொண்டிருந்ததுதான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

என்ன சொல்றீங்க! !??
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் மற்றும் பிடிக்காத போட்டியாளர்களையும் ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருவார்கள். அந்த வகையில் பலருக்கும் பரிச்சயமான மற்றும் பிடித்த போட்டியாளராக இருக்கும் பவானி ரெட்டி அவருடைய சக போட்டியாளர் ஆன தாமரையுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது தாமரை எதார்த்தமாக பவானி ரெட்டியின் வயதை கேட்கிறார். ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்று பவானி கூறவும், ஒரு பதினேழு பதினெட்டு இருக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறி ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்திருக்கிறார். இவர் இப்படி சொல்லியதும் பவானி ரெட்டி தன்னுடைய மகிழ்ச்சியையும் சிரிப்பையும் கட்டுப்படுத்த முடியாமல் தனக்கு 34 வயது ஆவதை கூறியிருக்கிறார்.

ரசிகர்களுக்கும் அதிர்ச்சிதான்
இவருடைய வயதை கேட்டு அதிர்ச்சி அடைந்தது தாமரை மட்டுமல்லாமல், பவானி ரெட்டியின் ரசிகர்களும் தான். தற்போது ட்விட்டரிலும் சரி இன்ஸ்டாகிராமில் சரி இவரைப்பற்றிய செய்திகள் வைரலாக பரவி வருகிறது. இதில் இவருடைய வயது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. பார்த்தா அப்படி தெரியலையே!! என்று தான் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அதற்கு பவானியும் கூலாக நீங்களும் என்னை மாதிரி உடை அணிந்தால் இப்படித்தான் இருப்பீர்கள் என்று தாமரைக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications