பாண்டியன் ஸ்டோர்ஸ்: ராஜிடம் நறுக்குன்னு கேட்ட கதிர்! இது பலருக்கு பாடம்.. பாண்டியன் எடுக்கும் முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், குடும்ப உறவுகளின் சிக்கல்களையும், அன்பையும் உணர்வுபூர்வமாகக் காட்டி வருகிறது. சமீபத்தில், ராஜி டான்ஸ் போட்டியில் கலந்துகொண்டதால், அவருடைய வாழ்க்கையில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு, அதை முத்து எப்படிச் சமாளித்தார் என்பதே நேற்றைய எபிசோடில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

Pandian Stores Vijay TV

கஷ்டத்தில் ராஜி - பக்கபலமாக நின்ற கதிர்

டான்ஸ் போட்டியில் ராஜி எதிர்பார்த்ததுக்கு மாறாக, ஆபாசமான பாடலுக்கு நடனமாட வேண்டும் என நடுவர்கள் வற்புறுத்தியதால், மன உளைச்சலில் இருந்தார். அவர் மறுக்கவே, நடுவர்கள் ராஜியை மிரட்டி, ஒரு ரூமில் அடைத்து வைத்தார்கள். "பணம் 10 லட்சம் கொடு, இல்லைனா நாங்கள் சொல்வதைச் செய்" என்று மிரட்ட, ராஜி கதறி அழுது "கதிர்" என்று கத்த, சரியாக அதே சமயத்தில் கதிர் அங்கு வந்துவிட்டார். கதவை உடைத்து, ராஜியை அங்கிருந்தவர்களிடமிருந்து காப்பாற்றினார் கதிர்.

கதிர் ராஜியின் வலியைப் புரிந்துகொண்டு, "இவர்கள் நல்லவர்களே கிடையாது, கெட்டவர்கள். தெரியாமல் வந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு" என்று ராஜி கதற, கதிர் அங்கிருந்தவர்களை அடித்துவிட்டு அங்கிருந்து அழைத்து வந்தார்.

காதல் சொன்ன கதிர் - ஒரு புதிய உறவு

இன்றைய எபிசோடில், ராஜி நடனப் போட்டியில் நடந்த சம்பவங்களை நினைத்து அழுதுகொண்டிருக்கிறார். அவருக்குக் கதிர் ஆறுதல் சொல்கிறார். அப்போது, ராஜி செய்த வேலைக்காகத் திட்டிய கதிர், "இனி எனக்காக எதுவும் செய்யாதே" என்று சொல்கிறார். அதன் பிறகு, ஒரு ஹோட்டலுக்கு இருவரும் சாப்பிடுவதற்குச் செல்கிறார்கள்.

அப்போது, கதிர் ராஜியின் கையைப் பிடித்து, தன் மனதில் இருக்கும் எண்ணங்களைச் சொல்கிறார். இதைக்கேட்டு ராஜி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார். கிட்டத்தட்ட, கதிர் ராஜியிடம் தனது காதலைச் சொல்லும் விஷயம் இதில் வெளிப்படையாகக் காட்டப்பட்டுள்ளது.

வீட்டிற்கு இருவரும் சந்தோஷமாகத் திரும்புகிறார்கள். இது ராஜிக்கும் கதிருக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கிறது.

அரசியின் அக்கறை - கோமதியின் கோபம்

மறுபுறம், பாண்டியனுக்குக் கால் வலி ஏற்பட்டதால், அரசி அவரைப் பார்த்துப் பார்த்து கவனித்துக் கொள்கிறார். மற்றொரு பக்கம், கோமதிக்கு அவருடைய அம்மா அப்பத்தா கோவிலுக்கு வரச் சொல்கிறார். கோவிலில் அப்பத்தா, குமாரின் நிலையை எடுத்துச் சொல்லி, கேஸை வாபஸ் வாங்கச் சொல்கிறார். ஆனால், கோமதி கோபப்பட்டுத் தன் அம்மாவைத் திட்டுகிறார். அப்பத்தா விடாமல் குமார் கேஸைப் பற்றித் தொடர்ந்து பேசுகிறார். கோமதி கோபத்தில் எதுவுமே பேசாமல் சென்றுவிட்டார்.

இந்தச் சம்பவங்கள் எல்லாம், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+