பாண்டியன் ஸ்டோர்ஸ் மயில் அப்பா செஞ்ச வேலையை பாருங்க! மகள் வாழ்க்கை தெருவில் நிற்கிறது! இவர் போடும் ஆட்டம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மயில் பற்றிய உண்மை தெரிந்ததும், இப்போது பாண்டியன் குடும்பத்தினர் மயில் குடும்பத்தை வீட்டை விட்டு அடித்து துரத்தி இருக்கின்றனர். இந்த பரபரப்பான சமயத்தில் மயிலின் அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கும் சைவம் ரவி வெளியிட்ட பதிவுதான் இணையத்தில் பலருடைய கவனத்தை பெற்று வருகிறது.
சீரியலில் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் பல பிரபலங்கள் நிஜத்தில் நாங்கள் அப்படியெல்லாம் இல்லை, சீரியலில் தான் நாங்கள் அடித்து கொள்வோம் நிஜத்தில் ரொப்பவும் ஜாலியாக என்ஜாய் பண்ணுகிறோம் என்று வீடியோக்கள் வெளியிடுவார்கள். இதை நாம பார்த்திருப்போம். சோசியல் மீடியாவில் சூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்டு அங்கு நடக்கும் அட்ராசிட்டியை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டு இருப்பார்கள்.

அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அதிகமானோர் சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை வெளியிட்டு அடப்பாவிங்களா நீங்க இப்படிப்பட்டவங்களா? என்று சொல்ல வைத்து விடுவார்கள். இந்த சீரியலில் வில்லனாக குமாராக நடித்துக் கொண்டிருக்கும் சக்திவேல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் ஆக்ரோஷமாக போடும் சண்டைக்கு பின்னால் இருக்கும் சுவாரசியமான சம்பவங்கள், பிறகு சண்டை முடிந்ததும் இந்த நடிகர்கள் போடும் ஆட்டம் பாட்டம் என அனைத்தையும் வீடியோவாக வெளியிட்டுக் கொண்டிருப்பார்.
அதேபோல இந்த சீரியலில் மயிலின் அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சைவம் ரவி தான் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்கள் போன்றவற்றையும் பகிர்ந்து வருவார். அதுபோல அவர் சமீபத்தில் நடிகர் ஆர்யாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஆர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார். இந்த போட்டோ தான் இப்போ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சைவம் ரவி அந்த போட்டோவில் ஹேண்ட்சமாக இருக்கிறார். அந்த பதிவிற்கு மயிலாக நடிக்கும் சரண்யா கூட நீ அடித்து ஆடு கபிலா என்று கமெண்ட் கொடுத்து இருக்கிறார். இந்த சீரியலில் மயிலுக்கு அப்பாவாக வயதான கெட்டப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சைவம் ரவியின் போஸ்ட் பார்த்ததும் மயில் உடைய அப்பாவா இது? என்று சிலர் கமெண்ட் கொடுத்து இருக்கின்றன.

இன்னும் சிலர் மயில் வாழ்க்கையே இப்போ தெருவில் நிற்கிறது இந்த நேரத்தில் இவர் இப்படி இருக்கிறாரே என்று கூட சிலர் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். நடிகர் சைவம் ரவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மட்டுமல்லாமல் ஒரு சில சீரியல்கள் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் இவருக்கு சைவம் படத்திற்கு பிறகு பிரபலம் கிடைத்ததால் தன்னுடைய பெயரை அந்த படத்தின் பெயரோடு இணைத்து வைத்திருக்கிறார்.
அதுபோல ஆர்யாவின் நெருங்கிய நண்பராம். ஆர்யா மூலமாகத்தான் சினிமாவில் அடிஎடுத்து வைத்திருக்கிறார். தன்னுடைய ஷாப்புக்கு வந்த ஆரியா அங்கு அதிகமான கடன் வைத்து தன்னுடைய ஷாப்பையே விற்க்க வேண்டிய சூழ்நிலை வந்தது, ஆனால் இன்னும் அந்த கடனை மட்டும் ஆர்யா தரவில்லை என்று ஒரு பேட்டியில் ஜாலியாக பேசியிருந்தார். ஆனாலும் இவர்கள் இருவருக்கும் இருக்கும் நட்பையும் அடிக்கடி சைவம் ரவி வெளிப்படுத்தி வருகிறார்.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications