
விட்டிருந்தா கேன்சர் கட்டியாயிருக்கும்.. அதான் சர்ஜரி செய்துட்டேன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் சின்னத்திரை நடிகை ஹேமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சின்னத்திரை டிஆர்பி ரேட்டின் முன்னணியிலிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பத்தில் 4 அண்ணன்கள், அவர்களது மனைவிகளிடையே நடக்கும் அன்பு, பாசம், போராட்டம், மோதல் உள்ளிட்டவை குறித்து சொல்கிறது இந்த சீரியல்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நடிக்கும் அனைவருமே பிரபலம்தான். தனம், முல்லை, மீனா உள்ளிட்டோர் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டார்கள்.

சீரியல்
இந்த சீரியல் இப்போதைக்கு முடியாது, அப்படியே முடிந்தாலும் ராஜா ராணியை போல் இன்னொரு வெர்ஷன் வரும் என தெரிகிறது. இந்த சீரியலில் நடித்து வரும் ஹேமா, மீனா எனும் கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும், இவர் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸில்தான்.

பேன்ஸ் அதிகம்
இவருக்கு இணையத்தில் ஃபேன்ஸ் பக்கங்களும் உண்டு. கொரோனா லாக்டவுன் சமயத்தில் யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வந்தார். அதில் குறிப்பாக மேக்கப் குறித்த வீடியோக்களை பகிருவார். எந்த ஸ்கின்னுக்கு எந்த மேக்கப் போடுவது, எந்த பிராண்டை வாங்குவது உள்ளிட்டவை குறித்து நேயர்களுக்கு விளக்கமளிப்பார்.

யூடியூப் சேனல்
இந்த நிலையில் இவர் தனது யூடியூப் சேனலில் மருத்துவமனையில் அட்மிட் ஆனது, பரிசோதனைகள் செய்தது, ஆபரேஷன் செய்தது என பல காட்சிகளை ஷேர் செய்திருந்தார். கடைசியில்தான் என்ன ஆபரேஷன் என்ற விஷயத்தை தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

கட்டி
சில மாதங்களாக ஹேமாவின் கழுத்துக்கு கீழ் பகுதியில் 4 செ.மீ. அளவில் ஒரு கட்டி இருந்ததாம். இதை மருத்துவரிடம் சோதனை செய்ததில் இது கேன்சர் கட்டியாக மாறிவிடும் என்றதால் அதை நினைத்து தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து அந்த கட்டியை நீக்க முடிவு செய்தார்.

அறுவை சிகிச்சை
இதையடுத்து அந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளார். ஹேமாவை அவரது தங்கை உடனிருந்து கவனித்து கொள்கிறார். மேலும் பெண்கள் தங்கள் உடல் பகுதியில் எங்கு கட்டிகள் இருந்தாலும் அலட்சியம் காட்டக் கூடாது, மருத்துவரை உடனடியாக பார்ப்பது நல்லது என்றும் அறிவுரை வழங்கியுள்ளார் ஹேமா. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் விரைவில் ஹேமா பூரண நலம் பெற வேண்டும் என பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.