இனி மூன்றாம் உலகத்தில் முட்டபோகுது பிரச்சனை... இதுல யாரு பாவம்னு தெரியலையே
சென்னை : சர்வைவர் ஷோவில் இந்த வார எலிமினேஷனில் ராம். சி மூன்றாவது உலகத்திற்கு வந்து இருக்கிறார்.
இன்று இரவு தான் இந்த வாரத்தில் நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்வது யார் என்று தெரியும்.
நிகழ்ச்சியை விட்டு யார் வெளியே சென்றாலும் அதற்கு முன்பு மூன்றாம் உலகத்தில் பிரச்சனைகள் களைகட்ட தொடங்கிவிட்டது.

பெரிய ரியாலிட்டி ஷோ
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கும் போது இது பிக்பாஸ் நிகழ்ச்சியினை போன்று இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக தான் இருந்து வருகிறது. இதில் போட்டிகள் எல்லாமே வெறித்தனமாகவும், கடினமாகவும் தான் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் தங்களுடைய மன வலிமையும், உடல் வலிமையும் ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

கருத்து வேறுபாடுகள்
சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒரு சிலருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டு சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டு இருந்தாலும், அதிகமான நேரங்களில் என்ஜாய் பண்ணி கொண்டு தான் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் இரண்டு அணியாக காடர்கள், வேடர்கள் என்று பிரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

மூன்றாம் உலகத்தில் ராம். சி
இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகி இருக்கின்றனர். மூன்றாவது வாரத்தில் யார் எலிமினேஷன் ஆகப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் தங்களது அணியினரால் எலிமினேஷனில் அதிக ஓட்டுகளை பெற்று மூன்றாவது உலகத்திற்கு வந்திருக்கிறார். வந்ததும் அவரை கண்டுகொள்ளாத பார்வதி மற்றும் ஐஸ்வர்யா தூங்குவது போல படுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இப்படி சொல்லலாமா
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பல ரசிகர்கள் உருவாகி விட்டாலும் ராம் சி, சில போட்டிகளில் தனது திறமையை சரியாக வழிகாட்ட தெரியவில்லை என்று பல ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அவர் பேசுவது எரிச்சலாக இருக்கின்றது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் அவருடைய ரசிகர்கள் அவர் ஒரு வெகுளியாக இருக்கிறார் என்று அவருக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மூன்றாவது உலகத்திற்கு வந்த இவரை பற்றி பார்வதி ஐயோ ராமா தூங்க விடாம தூக்கத்தை கெடுத்து விட்டானே என்று புலம்புவதை பார்த்ததும் ரசிகர்கள் காண்டாகி இருக்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications