தி ராஜா சாப் பார்க்க முதலையுடன் வந்த பிரபாஸ் ரசிகர்கள்! தியேட்டர் நிர்வாகம் அதிர்ச்சி! இப்படி இறங்கிட்டாங்களே
சென்னை: நடிகர் பிரபாஸ் நடித்துள்ள மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் 'தி ராஜா சாப்' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு, நேற்று இரவு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இப்படத்தின் ப்ரீமியர் காட்சிகள் நடைபெற்றன. ஆனால் அந்த ப்ரீமியர் காட்சியின் போது நடந்த ஒரு வித்தியாசமான சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தியேட்டருக்குள் முதலையுடன் ரசிகர்கள்
படம் பார்க்க வந்த பிரபாஸ் ரசிகர்களில் சிலர், குட்டி முதலையை கையில் எடுத்துக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திடீரென முதலையை பார்த்ததும், தியேட்டர் நிர்வாகம் மற்றும் அங்கிருந்த மற்ற ரசிகர்கள் பதற்றமடைந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக விசாரிக்கப்பட்ட நிலையில், அவை உண்மையான முதலையல்ல, ரப்பர் மூலம் செய்யப்பட்ட டம்மி முதலையென தெரிய வந்தது.
இதையடுத்து அனைவரும் நிம்மதி அடைந்தாலும், அந்த காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியானதும் வைரலாகி, "பிரபாஸ் ரசிகர்களின் ரசிகத்தனம் எல்லை தாண்டுகிறது" என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.
'தி ராஜா சாப்' படத்தின் ட்ரெய்லரில், பிரபாஸ் முதலையுடன் மோதும் காட்சி இடம்பெற்றிருந்தது. அதில் அவர் மந்திர சக்திகளைப் பெறும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இதனை கொண்டாடும் வகையிலேயே, சில ரசிகர்கள் முதலை பொம்மையை எடுத்துக்கொண்டு தியேட்டருக்கு வந்ததாக கூறப்படுகிறது.
தி ராஜா சாப் படத்தின் கதை
மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி ராஜா சாப்', ஹாரர் - காமெடி கலந்த வித்தியாசமான கதையமைப்பைக் கொண்ட திரைப்படமாகும். ஒரு பழைய அரச மரபு, சாபம், மந்திர சக்திகள் மற்றும் அதனைச் சுற்றிய மர்மங்களே படத்தின் மையம். பிரபாஸ் இதில் இரண்டு விதமான கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் பிரபாஸுடன், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சஞ்சய் தத் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தை People Media Factory மற்றும் IVY Entertainment இணைந்து தயாரித்துள்ளனர்.
விமர்சனங்கள்
படம் வெளியாகும் முன்பே, முதல் நாள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. ப்ரீமியர் காட்சிகளை பார்த்த ரசிகர்கள், "பிரபாஸ் முழுமையான என்டர்டெய்னர் மூடில் திரும்பி வந்துள்ளார்" என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஹாரர் காட்சிகள், காமெடி டைமிங் மற்றும் பிரபாஸின் ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
'தி ராஜா சாப்' படம் வெளியாகிய முதல் நாளே, முதலையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் சம்பவம் மூலம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. படம் ஹிட் ஆகுமா, இல்லையா என்பது போக, பிரபாஸ் ரசிகர்களின் தீவிரம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications