என் ஃபேன்ஸ் அப்பவே சொன்னாங்க...கதறிய பிரியங்கா..ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு தன் ரசிகர்கள் சொன்னதைக் கேட்கவில்லை என பிரியங்கா வருத்தத்தோடு தெரிவித்து இருக்கிறார்.
கலகலப்பாகவும் ஜாலியாகவும் இருந்த பிரியங்கா தற்போது வேதனையோடு பேசியிருப்பது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இனியாவது விளையாட்டை விளையாட்டாக நினைத்து விளையாடுவாரா?? என நெட்டிசன்கள் ஒருபக்கம் கலாய்த்து வருகின்றனர்.

திடீர் என்ட்ரி
தொகுப்பாளராக அறிமுகமாகி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை தன்வசப்படுத்தி இருக்கும் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானதும் அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இவர் வர மாட்டார் என பலர் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் இவருடைய என்ட்ரி அதிர்ச்சியைக் கொடுத்து இருந்தது. ஆனாலும் வந்தபிறகு கலகலப்பாக எப்போதும் போல இவர் இருப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றம் தான். தொகுப்பாளராக இருப்பதற்கும் தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது என பலர் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் ஆதரவு
ஐந்தாவது சீசன் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி இருந்ததை பார்த்த ரசிகர்கள் முன்பு உள்ள சீசன் களை விட வித்தியாசமாக இருக்கும் என ரொம்பவே எதிர்பார்த்து இருந்தனர். காரணம் கலகலப்பான பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் இருப்பதால் தான். ஆனால் டாஸ்க் தொடங்குகின்ற வரைக்கும்தான் கலகலப்பு எல்லாம் இருந்தது தவிர தொடங்கியதும் எல்லாம் மாறி போய்விட்டது என பலர் கூறி வருகின்றனர். ஆனால் இவருடைய தீவிரமான ரசிகர்கள் அவரவருடைய கேரக்டரில் சிறப்பாகத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார். பார்க்கும் ரசிகர்களின் பார்வையில் தான் வேறுவிதமாக இருக்கிறது என்று பலர் கொந்தளித்து வருகின்றனர்.

எலிமினேட்டானான அபிஷேக்
இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா முதலில் யாருடனும் சேர்வதற்கு முன்பு வரைக்கும் ஜாலியாக இருந்தார். ஆனால் அபிஷேக் மற்றும் நிரூப்புடன் இருக்கும்போது இவருடைய கேரக்டர் மாறிவிட்டது என பல குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷனில் அபிஷேக் வெளியேறிவிட்டார். இது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பிரியங்காவிருக்கும் பேரிழப்பாக தான் இருந்திருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அபிஷேக் உடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்த இவர் நாட்கள் செல்ல செல்ல தம்பியாகவும் சக நண்பனாகவும் மாறிவிட்டார். இதனால்தான் அபிஷேக்கின் எலிமினேஷன் பிரியங்காவை ரொம்பவே பாதித்து வி

ரசிகர்களை நினைத்து ஃபீலிங்
தொகுப்பாளர் என்றாலே ஒரு சிலர் முகம் தான் நினைவிற்கு டக்கென்ற வரும். அந்த வகையில் பிரியங்காவும் ஒருவர்.
ஆனால் தற்போது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை என பலர் கூறிக் கொண்டிருக்கும் போது நேற்றைய எபிசோட்டில் கமல் இவர் செய்த நிறை குறைகளை எடுத்து காட்டிவிட்டார். இதனால் இவர் ரொம்பவே அப்செட் ஆகி விட்டார். அந்த நேரத்தில் தான் தனது அம்மாவையும் நினைத்து அழுது கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் என்னுடைய ரசிகர்கள் எவ்வளவோ சொன்னார்கள் பிக் பாஸ் போக வேண்டாம் என்று ஆனால் நான்தான் கேட்காமல் வந்துவிட்டேன். ...என இவர் அழுவதை பார்த்து இவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஆறுதல் கூறி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications