இனி காலண்டரில் என் போட்டோ தான்.. திருமணத்தில் பிரியங்கா செய்த அட்ராசிட்டி! நெகிழ்ந்த விஜய் டிவி நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜே பிரியங்காவிற்கு வசி என்பவருடன் நேற்று எளிமையாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரியங்கா செய்த அட்ராசிட்டி வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. திருமணம் முடிந்ததும் போட்டோ சூட் எடுக்கும்போது தன்னுடைய புகைப்படங்களை கேலண்டரில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் விதவிதமாக போஸ்ட்கள் பிரியங்கா கொடுத்து இருக்கிறார்.

விஜய் டிவி பிரபலமான பிரியங்கா சோசியல் மீடியாவை பயன்படுத்தும் பலருக்கும் பரிச்சயமானவர்தான். விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சிகள் கொடுத்தாலும் அதை கலகலப்பாக மாற்றி ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். அதே நேரத்தில் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு மணிமேகலை பிரியங்கா குறித்து போட்ட போஸ்ட் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Vijay TV Priyanka

அடிக்கடி சர்ச்சை

பிரியங்காவை மணிமேகலையின் ரசிகர்கள் சிலர் திட்டி தீர்த்து வந்தனர். அப்போதும் கூட அதற்கு எந்த பதிவுகளும் வெளியிடாமல் பிரியங்கா அமைதி காத்து வந்தார். தன்னுடைய வழக்கமான வேலைகளை தொடர்ந்து பார்த்து வந்தார். இதனால் அவரை பலரும் பாராட்டி வந்தனர். அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொண்டபோது பிரியங்காவின் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வேண்டாம் என்று பலர் வேண்டுகோள் வைத்தனர்.

Vijay TV Priyanka

பிக் பாஸ் பிரபலம்

அதையும் தாண்டி பிரியங்கா கலந்து கொண்டார். ஆனால் ரசிகர்கள் பயப்பட்ட மாதிரி நெகட்டிவ் இமேஜ் இல்லாமல் பாசிட்டிவாக தான் வெளியே வந்தார். சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா அடிக்கடி தான் செய்யும் சின்ன சின்ன சேட்டைகளையும் தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். எந்த இடத்தில் இருந்தாலும் நான் இப்படித்தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் பிரியங்கா நேற்று இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார்.

எளிமையான திருமணம்

அவருடைய முதல் திருமணம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே விவாகரத்தில் முடிந்துவிட்ட நிலையில் இரண்டாவதாக டிஜே வசு என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இதில் பிரியங்காவின் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு பிரியங்கா போட்டோ சூட் எடுத்திருக்கிறார். அப்போது காலண்டரில் இடம்பெறும் சாமி புகைப்படங்கள் போல பிரியங்கா போட்டோஸ்க்கு போஸ் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிரூப் பதிவு

அதே நேரத்தில் பிரியங்காவின் திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட நிரூப் பிரியங்கா குறித்து நெகிழ்ந்து போஸ்ட் போட்டிருந்தார். பிரியங்காவின் வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்கள் இருந்திருந்தாலும் அவருடைய அதையெல்லாம் தாண்டி இனி அவருடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Vijay TV Priyanka

தோழியின் நெகிழ்ச்சி போஸ்ட்

அதுபோல பிக் பாஸ் தமிழ் சீசன் 8 பிரபலமும் குக் வித் கோமாளியில் பிரியங்காவுடன் கலந்து கொண்ட அன்ஷிதாவும் பிரியங்கா குறித்து நெகிழ்ச்சியாக போஸ்ட் போட்டு இருக்கிறார். பிரியங்காவின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவருடைய நண்பர்கள் எல்லோருமே அவருக்கு ஆசிர்வாதம் குவித்து வருகிறார்கள்.

க்யூட்டான தருணங்கள்

பிரியங்காவை அவருடைய நண்பர்கள் திருமண மேடைக்கு அழைத்துவரும் போது பிரியங்கா டான்ஸ் ஆடிக்கொண்டே வருகிறார்கள். மேடையில் அவருடைய கணவர் வசி நின்று கொண்டு பிரியங்காவை பார்த்ததும் கட்டி அணைத்து முத்தம் கொடுத்திருக்கிறார். அதுபோல வசி தாலி கட்டியதும் பிரியங்கா கண்கலங்கி அழ அவரை சமாதானம் செல்வதற்காக வசி பிரியங்காவின் நெற்றியில் முத்தம் கொடுத்து ஆறுதல் சொல்லி இருக்கிறார். இவர்களுடைய திருமணத்தில் பிரியங்காவின் இறந்து போன அவருடைய அப்பா புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது. இந்த வீடியோக்கள் இணையத்தில் இப்போது வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+