பிரியங்காவின் மனக் கவலைகளையும் வலிகளையும் நீக்க வந்தவர் இவர் தானாம்... இனி இவர்தான் உலகமாம்
சென்னை:முதன்முறையாக தனது தம்பி மகளின் முகத்தை காட்டி போட்டோ போட்டுள்ள பிரியங்காவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்க்கு பாவணி ரெட்டி, விஜய் டிவி ரித்திகா, உட்பட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது போதும் எனக்கு என்று கேப்ஷனுடன் பதிவு செய்துள்ள பிரியங்கா போஸ்ட்க்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
தனது கலகலப்பான பேச்சால் பலரது கவலைகளை மறக்கச் செய்த பிரியங்காவிற்கு தம்பி மகளே கவலை மற்றும் வலிகளை மறக்கச் செய்வதாக உணர்வுபூர்வமாக கூறியுள்ளார்.

தனக்கென ஒரு கூட்டம்
நீண்ட நாட்களாக சின்னத்திரை தொகுப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் விஜய் டிவி பிரியங்கா. விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கியதில் முதல் சாய்ஸ் ஆக இருந்து வருகிறார். பிரியங்கா தொகுத்து வழங்குவதற்காகவே அந்த நிகழ்ச்சி பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அந்த அளவிற்கு தனது கலகலப்பான பேச்சுக்களால் குடும்ப ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ளார். காமெடி, டான்ஸ், பாடல் போட்டி,என்று எந்த விதமான நிகழ்ச்சியாக இருந்தாலும் தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளை சலிப்பு தட்டாமல் கொண்டு செல்வதில் தேர்ந்தவர் பிரியங்கா.

சொல்ல விரும்பாத ஸ்டோரி
பெரிய அளவில் நட்பு வட்டாரத்தில் இருக்கும் பிரியங்கா சூட்டிங் செட்டிலும் சரி வெளியிடங்களிலும் சரி தன்னை சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக ஜாலியாக வைத்திருப்பார்.ஆனால் பிரியங்காவிற்கு அவருடைய திருமண வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சிகரமாக அமையவில்லை என்று கூறப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா தன்னுடைய வாழ்க்கையின் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் போது கூட தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து அவ்வளவாக பேசவில்லை. சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா பலமுறை பல வீடியோக்கள் போட்டோக்களை ஷேர் செய்திருந்த போதும், ஒரு முறை கூட தன்னுடைய கணவரை பற்றியோ கணவர் உடன் இருந்த புகைப்படத்தையோ ஒரு முறை கூட ஷேர் செய்திருந்ததில்லை. இவ்வாறு எந்த இடத்திலும் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியதில்லை.

வேற லெவலில் தம்பி பாசம்
தன்னுடைய சிறுவயதிலேயே தன்னுடைய தந்தை போலவே தம்பி தங்களை பார்த்துக் கொள்வதாகவும், தன்னுடைய தம்பி தான் குடும்பத் தலைவன் போன்றவர் என்றும், தம்பி தான் தனக்கு இன்னொரு அப்பா என்று கூறி இருக்கிறார். தம்பி மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கும் பிரியங்காவிற்கு தம்பிக்கு ஒரு மகள் பிறத்தால் எப்படி இருக்கும்..!! சில நாட்களுக்கு முன்பு தனது தம்பி மகளை தங்களது இல்லத்திற்கு வரவேற்று போஸ்ட் செய்திருந்த பிரியங்கா தம்பி மகளுக்கு இஹா என பெயர் வைத்திருந்ததாகவும் மகிழ்ச்சி பொங்க பதிவிட்டிருந்தார்.

இஹா தான் உலகம்
இதற்கு முன்பு தன்னுடைய தம்பி மகள் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருந்த போட்டோவில் தம்பி மகளின் முகத்தை காட்டாமல் இருந்த பிரியங்கா, தற்பொழுது முகத்தை காட்டி போட்டோவை பதிவிட்டுள்ளார். "பரபரப்பான ஒரு வாரத்திற்கு பின் தன்னுடைய தம்பி மகள் இஹாவை பார்த்ததும் மன கவலைகளும், வலிகளும், பறந்து விட்டன,இது மிகப் பெரிய மகிழ்ச்சியான தருணம். இஹா தான் என்னுடைய உலகம். இது போதும் எனக்கு"என்று கேப்ஷனுடன் போஸ்ட் செய்துள்ளார். இதைப் பார்த்த பிரியங்கா ரசிகர்கள் மட்டுமின்றி பல விஜய் டிவி செலிபிரிட்டிகளும் பிரியங்காவின் மகிழ்ச்சி தொடர தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications