ராதிகா வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! சிவகார்த்திகேயன், திரிஷா என்ட்ரி.. விஷயம் இதுதானா?
சென்னை: இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி சினிமா பிரபலங்கள் போட்டி போட்டுக்கொண்டு போஸ்ட் போட்டு வருகிறார்கள். அதில் பலர் கிறிஸ்மஸ் உடையுடனும், கிறிஸ்மஸ் வாழ்த்துக்களுடனும் அதிரடி காட்டி கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகை ராதிகா சரத்குமார் வீட்டு கிறிஸ்மஸ் கொண்டாட்டம் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழ் திரையுலகில் ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் பிரபலங்களில் வீடுகளில் நடைபெறும் கொண்டாட்டங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகை நடிகை ராதிகா சரத்குமார் இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை திரிஷா உள்ளிட்டோரும் இந்த ஃபங்ஷனில் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த கொண்டாட்டத்தின் போது எடுத்தபுகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ராதிகா சரத்குமார், தமிழ் சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி உலகிலும் பல தசாப்தங்களாக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். கதாபாத்திரங்களுக்கேற்ற நடிப்பாலும், துணிச்சலான கருத்துகளாலும் ரசிகர்களிடம் தனி மரியாதை பெற்ற நடிகையாக விளங்குகிறார்.
சமீப காலமாக சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் ராதிகா, இந்த கிறிஸ்மஸ் பண்டிகை தொடர்பாக உணர்ச்சிபூர்வமான ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார். "இந்த கிறிஸ்மஸில் என் அம்மாவை மிகவும் மிஸ் பண்ணுகிறேன்" என்று அவர் உருக்கமாக எழுதிய அந்த பதிவு பலரையும் நெகிழ வைத்துள்ளது. சமீபத்தில் தான் ராதிகாவின் தாயார் காலமான நிலையில், இந்த பண்டிகை அவருக்கு அம்மாவின் நினைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்

இந்நிலையில், நடிகர் சரத்குமார் குறித்தும் இந்த நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. நடிகர் சரத்குமார், தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாகவும், பின்னர் அரசியல் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் முக்கிய இடத்தை பிடித்தவர். சமீப காலமாக அவர் நடிகர் விஜய் குறித்து விமர்சனமாக பேசி வருவதால், விஜய் ரசிகர்களிடையே சில அதிருப்திகள் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதே சமயத்தில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" படம் வெளியாகும் சூழலில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த "பராசக்தி" திரைப்படமும் திரைக்கு வருவதால், இரு நடிகர்களின் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் மோதல்கள் அதிகரித்துள்ளன.
இந்த பின்னணியில்தான், ராதிகா - சரத்குமார் வீட்டில் நடைபெற்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டது கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதை வைத்து சிலர், "சிவகார்த்திகேயனுக்கு சரத்குமார் குடும்பத்தின் ஆதரவா?" என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அதே நேரத்தில், இன்னொரு தரப்பு ரசிகர்கள், "இது ஒரு சாதாரண குடும்ப பண்டிகை நிகழ்ச்சி தான். அதில் விஜய் - சிவகார்த்திகேயன் பிரச்சனைகளை இழுக்க தேவையில்லை" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications